இசைஞானி இளையராஜாவின் இசையில் நிலா பாடல்கள்
அழகான பெண்ணின் முகம் ,இரவின் விளக்கு,கோடையின் குளிர்சாதனபெட்டி,இயற்கையின் தலைவி,
அமைதியின் புகைப்படம் ,மனிதன் வாழ்க்கையும் வளரும்.. தேயும்.. என்பதை உணர்த்திய புத்தகம்,குழந்தைகளுக்கு சோறூட்ட உதவும் பொம்மை...என எல்லாவற்றையும் விளக்கும் ஒரு சொல்...ஒரு பெயர்.....அது நிலா
விஞ்ஞான பூர்வமாக போனால் நிலவில்லாமல் எதுவும் இல்லை,இதை முதல் படியாக கொண்டே எல்லா வேலைகளும் நடக்கின்றன .பகல், இரவு,இந்த தேதி,மாதம்,வருஷம் எல்லாமே சூரியனையும் சந்திரனையும் சார்ந்ததே.ஜோதிடமும் நிலவும் பிண்ணிபிணைந்த ஒன்று. உலகமே இன்று ஜோதிடத்தில் மூழ்கிவிட்டது.
இப்படி மூளையை பிசையும் அறிவியலில் நம் நிலவு பிசியாக இருந்தாலும் ....காதல் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் நிலவும் கட்டுபடுகிறது, நிலவில்லாமல் காத்லே இல்லை என்றாகிவிட்டது.காதலுக்கு கண் இல்லை,ஜாதி இல்லை ,மதம் இல்லை.ஆனால் காதலுக்கு உயிர் இருக்கிறது ,அதற்கு துணையாய் இந்த நிலவிருக்கிறது .காதல் வந்ததூம் மனிதனிடமிருந்து பறிக்கபடுவது தூக்கம் தான்.வானத்தை பார்த்தவனுக்கு நிலவில் தெறிகிறது அவன் காதலியின் முகம்.
பின்னர் கவிதையுண்டு தன் காதலுண்டு என்று போய்கொண்டிருப்பான்.
அப்படி ஒரு காதலனின் நிலவு கவிதை இங்கே
நிலா இல்லாத வானத்தைக் காட்டி
ஏதோ சொல்லிவிட்டுப் போனாய்,
புரியவில்லை.....!!!
நீ சொல்லிக்கொண்டிருந்தபோது
நானேன்னவோ பார்த்துக்கொண்டிருந்தது,
வெண்ணிலவையே வெட்கமுறச் செய்த
உன் கயல் விழிகளையும்,
சிவந்த கன்னங்களையும் தான் !!!
அந்த காதலில் பிரச்சனை வரும் போது எல்லோருக்கும் சொந்தமான அந்த நிலவை தூதாக அனுப்புவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
இயற்கை விரும்பிகளுக்கு நிலா தான் கொள்ளை லாபம்.
கவிஞர்களுக்கு பேனா முனையில் "நிலா" என்ற வார்த்தை எப்போதும் தயார் நிலையில் வைக்க பட்டிருக்கும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க உலகத்தின் ஒட்டு மொத்த தமிழர்களின் இதயத்தில் இசைப்பிதாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவையும் நிலா ரொம்பவே பாதிக்க பட்டிருக்கிறது .
அவரும் தன் பாடல்களில் நிலவுக்கு சாதகமான மெட்டுக்களை போட்டுதாக்கியிருக்கிறார்.கவிஞர்களும் அப்படியே லாவகமாக அந்த மெட்டுக்களை பிடித்து கொண்டு அருமையான கவிதைகளால் நிரப்பி நம்மை நிலவுக்கே அழைத்து சென்று பாடல்கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டார்கள்.
இசைஞானியின் இசைக்கடலில் நிலா பாடல்களுக்காக ஒரு சிறிய வலையை போட்டேன்.அதில் கிடைத்த முத்துக்கள் தான் இவை .அதை அப்படியெ உங்களுக்கு விருந்தாக்க நினைத்தேன் .ஒரு பகுதியாக கொடுத்திருக்கிறேன்.மகிழ்ந்தவர்கள் இசைஞானிக்கு உங்கள் வார்த்தைகளால் பொன்னாடை போர்த்துங்கள்.
songs
.
.
பாடல்களை கேட்க
இது என் சின்ன சின்ன ஆசைகளுள் ஒன்று. அடுத்தது என்ன ....சின்ன சின்ன பாடல்கள் தான்....
No comments:
Post a Comment