கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் கதை..அழகான தலைப்பு.
இசை இசைஞானி இளையராஜா.
படத்தில் ரமேஷ் அரவிந்த் ,கஸ்தூரி மற்றும் அபிமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் கதை ,திரைக்கதை ,வசனம் ,பாடல்கள் ஆகியவற்றை கவிஞர் மு.மேத்தா கவனிக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவிற்காகவும்
சண்முகம் எடிட்டிங்காகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்..இயக்கம் கௌரி மனோகர்
கல்லூரியை சுற்றிவரும் கதையில் கல்லூரி Chairman ஆக போட்டியின்றி தேர்வாகிறார் கஸ்தூரி.அதேகல்லூரியில் படிக்கும் கவிஞன் ரமேஷ் அரவிந்த்.
ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள் ஆனால் சொல்லிகொள்ள முடியவில்லை...
தந்தியில் சொல்ல நினைத்த காதலன் ,தந்தியை அனுப்பிவிட்டு வருகையில் கஸ்தூரி தன் திருமண பத்திரிக்கையை நீட்டுகிறார்...இதுக்கு மேல் என்னென்ன நடக்கும் என்று ஒரு சாதாரண சினிமா ரசிகனால் கூட கதையை கணித்து விடலாம்.
ஒரே ஒரு காட்சியை கூட நாம் சினிமா பார்ப்பதை நினைவு படுத்தவில்லை.மாறாக இந்த படத்திற்காக நாம் வீணாக்கிய நேரத்தையும் செலவு செய்த பணத்தையும் தான் நினைவுபடுத்துகின்றன.
சந்தோஷபடும் ஒரே விஷயம் இசைஞானி ..
படத்தையே இசைஞானியின் போட்டோவை முதன்மை கொண்டுதான் துவங்குகிறார்கள்.
பாட்டுக்கள் அத்தனையும் மெஹா hit ...அந்த காலத்தில் மட்டுமல்ல ..இந்த காலத்திலும் ....இந்த படத்தின் காட்சிகள் சரியில்லாத காரணத்தினாலோ என்னவோ தலைவரின் ஈடுபாடு பின்னனி இசையில் குறைவாகவே இருந்தது.ரமேஷ் அரவிந்தும் கஸ்தூரியும் சொன்னதை செய்து விட்டு போகும் பொம்மைகளாக காட்சியளிக்கின்றனர்.சின்னி ஜெயந்த் ,சார்லி என கல்லூரி பட்டாளங்களே நடித்திருந்தாலும் ஆர்வமோடு எதிர்பார்த்த கல்லூரி கலாட்டாக்களும் missing..
மொத்தத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு முறை பார்க்கலம்...சுமார்....its ok...Nice film ..
என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அவருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் இந்த படத்தின் இயக்குனர் கௌரி மனோகர்..
நோட்டு புத்தகங்களில் இருந்த பேப்பர்கள் சிருவர்களால் கிழிக்க பட்டு கப்பல் அல்லது கத்திகப்பல் தயாரிக்கபடுகிறது..
அதுவரை இருக்கமாய் இருந்த பூமி கொஞ்சம் தளர்ந்து மண்ணை பறக்க விடுகிறது..
பச்சைகொடியை மரங்கள் இலைகளால் அசைக்க..தென்றல் காற்று மனிதர்களை தொட்டு மனிதன் நனையபோவதை பறைசாற்றி, கார்மேகத்தை அடைந்தவுடன் இடி சப்தங்கள் முழங்க... மின்னல்கள் அலங்கார விளக்குகளாய் ஒளிர ...
அன்னை பூமியை தொட வருகிறது மழை.. மண்வாசனையுடன்.
ஆனந்த வெள்ளம் தெருவில்..மகிழ்ச்சி வெள்ளம் நம் மனதில்..
அனைத்து ஜீவராசிகளுக்கும் வசந்த காலத்தை பரிசாக கொடுக்கிறது அளவான மழை.
இந்த இயற்கையோடு இணைந்த இன்னிசை மழையை பற்றிய பாடல்கள் தொகுப்புதான் இந்த பதிவு.
மழைக்கு ஏங்காதவர்களே இல்லை..தலைவரின் இன்னிசைக்கு மயங்காதவர்களும் இல்லை.
தலைவரே மழைக்கு மயங்கி அவரது இன்னிசை மழையை கொடுத்த பாடல்கள் ஏராளம் ..அதில் இங்கே உங்கள் பாரவைக்கு பத்து பாடல்கள்.
இந்த தொகுப்பை படமாகவும் பார்க்கலாம் பாடலாகவும் கேட்கலாம்.PLAYபட்டனை அழுத்தியவுடன் VIDEO என்ற வாக்கியம் படத்துண்டின் மேல் வரும். அதன்மேல் அழுத்தினால் படம் தோன்றும்
அடுத்து என்னடா செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில்....கண்ணுக்கு தெறிந்தது இசைஞானியின் இந்த புகைப்படம்..அருமையான புகைப்படமாச்சே என்று நினைத்தேன்.. ரசித்தேன்...கொஞ்சம் உள்ளே சென்று ரசித்தேன்...பார்வைகள் படத்தின் ஒரு புள்ளியில் சங்க மித்தது ...
ஆம்.. கிடைத்தது அடுத்த பதிவுக்கான கரு. புகைப்படத்தில் தலைவரின் கைப்பட புண்ணியம் செய்த பியானோ தான் இந்த பதிவின் நாயகன்.
பியானோவின் வரலாறு (விக்கிபீடியாவிலிருந்து)..
பியானோ முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் பியானோவின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது.
1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள்எஃகினால் கட்டப்பட்டது. பியானோவில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு பியானோவில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன.
கின்னரப்பெட்டி (பியானோ) (piano) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. (தமிழில், கின்னரப்பெட்டி என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது.) பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வசிப்பதற்கும்,அறையிசையில் (Chamber music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக(Accompaniment) வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படும் பியானோ, இசை அமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட மிக உதவியுள்ளதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்ததாகவும் கையடக்கமாக இல்லாத போதும், பியானோவின் அவதானமும் (versatility) வியாபகமும் (ubiquity) அதைஇசைக்கருவிகளுள் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உருவாக்கியுள்ளன.
பியானோவின் வதிப்பலகையிலுள்ள ஒரு வதியை (Key) அழுத்துவது, பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்கு (Steel) கம்பிகளின் மீது அடிக்கச்செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுரச்செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாகஒலிப்பலகையின்(Soundboard) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்தஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது. அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது,கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. பியானோ, சில வேளைகளில் எருக்கு வாத்தியக்கருவியாகவும்(Percussion instrument) நரம்பு வாத்தியக்கருவியாகவும்(String instrument/Chordophone) வகைப்படுத்தப்படுகின்றது. ஹார்ன்பாச்டல் சாக்சின் இசை வகைப்படுத்துதலின்படி இது நரம்பு வாத்தியக்கருவிகளுடன்(Chordophones) சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு நவீன பியானோவில் 88 வதிகள் உள்ளன. பியானோவில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது. பியானோவில் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த வதி "நடு C வதி" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது வதிகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது வதிகளில் வாசிக்கப்படுகிறது.
பியானோ முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. Piano என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே(Pianoforte) என்பதன் சுருக்கமே. இன்றைய தினத்தில் இச்சொல் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, clavicembalo [அல்லது gravicembalo] col piano e forte என்னும் இதன் உண்மையான இத்தாலிய பெயரிலிருந்தே எடுக்கப்பட்டது (எழுத்தின்படி: ஹார்ப்சிகார்ட் - அமைதியுடனும் பெலனுடனும்). இது, இந்தஇசைக்கருவியின் வதிப்பலகையை தொடுதலின் மூலம் உண்டாகும் இதன் பிரதிபலிப்பை குறிக்கிறது. இதனால், ஒரு பியானோ இசை கலைஞர், சுத்தியல் கம்பிகளை அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு வேகங்களில்வாதிகளை உண்டாக்கலாம்.
சரி இப்போது இந்த இசைக்கருவியை நம் ஆஸ்தான நடிகர்களின் படங்களில் தலைவர் கையாண்ட விதத்தை பற்றி பார்ப்போம்
இந்த இசைக்கருவியை படங்களில் இசைப்போருக்கென ஒரு உருவம் இருக்கிறது .COURT & SUIT கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்..இந்த இசைக்கருவியை படங்களில் பார்ட்டிகளுக்கு மட்டுமே காண்பிப்பது மரபு. மரபு இங்கே மீறப்படுகிறது. பெண்ணுக்கு ஆறுதல் கூறும் சாதாரண சூழ் நிலை பாட்டுக்கு பியானோவை இசைக்கவைத்தது இசைஞானியின் இசை அராஜகம்.
இசையோடு கவிதையும் ,கவிதையோடு ராகமும், ராகத்தோடு நம் ஜேசுதாஸின் குரலும் சேர்ந்த கலவை மீண்டும் நம் கண் முன்னே இங்கே வீடியோவாக..
அவள் அப்படிதான் படத்தின் உறவுகள் தொடர் கதை
அடுத்து இசைக்க வருபவர் சூப்பர் ஸ்டார் .. இந்த இசையை ரஜினிகாந்த் இசைக்கிற மாதிரி நடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதாகஅப்போதைய பேசும் படம் பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்...அப்படி நாம் உணர்ச்சி வசப்படதானே தலைவர் இப்படி இசை அமைக்கிறார்... இதோ நீங்கள் உணர்ச்சிவசப்பட மீண்டும் ஒருமுறை தென்மதுரை வைகை நதி..
அதே பாடலை சோகமாக இசைக்க வருபவர் இளையதிலகம் பிரபு ..
நம் நவரச நாயகன் கார்த்திக் பியானோவோடு நடித்த இந்த பாடல் கேட்க ரம்மியமானது ..பார்க்க திகட்டாதது..அபூர்வமான பாடல் இங்கே உங்க பார்வைக்கு மீண்டும் ஒரு முறை..
அன்பே சங்கீதாவில் எவரும் எதிர்பார்க்காத விதமாய் நம் தேங்காய் சீனிவாசன்...சின்ன புறா ஒன்று
இந்த பாடலின் தாக்கத்தை அனுபவிக்காத காதலர்களே இல்லை .அந்த பாடல் இங்கே..
அடுத்து வருபவர் புரட்சிதமிழன் சத்தியராஜ்.. அவர் கைகள் இசைக்கும் நம் இசைஞானியின் இந்த மனமயக்கும் பியானோ இசை சாதாராண மெலோடிக்கல்ல பழைய நினைகளை மீட்டு வர high pitchஇல் அமைக்க பட்ட இசைகோர்வை..
கல்யாணம் வைபோகம் ..களைகட்டுகிறது பார்ட்டி..ராதாவின் விரல்கள் பியானோவை இசைக்க .. அதில் இருந்து வரும் இசை ராதாவின் ஆசை, பாசம், நேசம், அன்பு, காதல், கோபம், தாபம் எமாற்றம் வலி எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது..
மீண்டும் ராதாவே பியானோவை இசைக்க வருகிறார் ...வானம் தொடாத மேகம் என்ற பாடலுடன் சின்னப்பதாஸ் படத்திலிருந்து..
அடுத்து வருபவர் மைக் மோகன் .... பாடல்களால் மட்டுமே புகழின் உச்சத்துக்கு சென்றவர்..இங்கே பிறந்த நாளில்லை ..பார்ட்டி இல்லை .
கடற்கரையில் காதலை காதலன் கொண்டாடுகிறார் ..பியானோவோட துணையுடன்..
தலைமகன் கமலஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தின் பின்னனி இசை இங்கே வெளியிடபட்டிருக்கிறது
அதில் நடுவே உலக நாயகன் இசைக்கும் பியானோவின் பின்னனி இசையை அநேக ரசிகர்கள் தவற விட்டிருப்பார்கள் நினைகிறேன் ..கவனியுங்கள்.
உங்களை அந்த இசை சந்தோசபடுத்தும்..சந்தோசப்படுவீர்கள்
மௌனராகத்தின் பின்னனி இசை ...அது அமைக்க பட்ட விதம் ..அதை வாசிக்கும் விதம் எல்லாம் இங்கே கற்று தர படுகிறது..
உண்ணிப்பாக கவனித்தால் நாமும் பியானோ இசைக்கலைஞன் தான் என்ற உணர்வை ஏற்படுத்தும் .. பணக்கார இசைக்கருவியை நாம் இசைக்க வசதி இல்லாவிட்டாலும் தன் இசையால் அதை நம் வீட்டில் நிரப்பிய இசைஞானி .. சமகாலத்து முடிசூடா மன்னனே..இசைக்கு.
என்ன எல்லாமே பெண் குழந்தைகளை பற்றிய பாடல்களாகவே இருக்கிறதா..
எனக்கொரு மகள் இருக்கிறாள்... பெயர் நிதிஷ்கா..
நிதிஷ்காவுக்கு இன்று முதல் பிறந்த நாள்..பாசக்கார இந்த தந்தையின் பாசமான வாழ்த்துக்களை இப்படி சொல்லாமல் வேறு எப்படி சொல்லவது 4000km தொலைவில் இருந்து கொண்டு..
இப்படி மனிதனின் வாழ்க்கையில் புகுந்து எல்லா உறவுகளுக்கும் எல்லா உணர்ச்சிகளுக்கும் பாட்டமைத்த
எங்கள் இசைதெய்வத்துக்கு என்றென்றும் நன்றி சொல்ல கடமை பட்டுஇருக்கிறேன்...
(தலைவர் இசைஞானி இளையராஜா அவர்கள் படத்தில் தோன்றும் பாடல் காட்சிகளை நண்பர் கோபிநாத் அவர்கள் அருமையான வர்ணனையோடு பகிர்ந்து கொண்டார் அவருடைய gopinathபதிவில் .... மிஞ்சியது இங்கே )
"போடி நாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றோம்.அங்கே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னை பார்க்க அதிகமான கூட்டம் வந்திருந்தது.கூட்டம் கலைய வேண்டும் என்றால நான் வந்து முகத்தை காட்டவேண்டும் என்றனர்.
நானும் வந்து நின்றேன் ....ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்து கொண்டிருந்தனர்.என்னங்க இன்னமும் இளையராஜாவை காணோம் என்று கேட்டார் கூட்டத்தினில் ஒருவர்.
என்னருகில் இருந்தவர் இவர்தான் இளையராஜா என்று அறிமுக படுத்தினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
அவ்ர்கள் என் பெயருக்கேற்ற கம்பீரமான உருவத்தை எதிர்பார்த்தனர்..சின்ன பையன் போல இருந்த என்னை அவர்களால் முடியவில்லை" -என்று இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றில் கூறி இருக்கிறார்.
அவர் தன் முகத்தை திரையில் தன் ரசிகர்களுக்கு காட்டியது நிழல்கள் படத்தில்.. அந்த இளைஞனை அந்த படத்தில் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு கம்பீரமான தோற்றத்துடன் வந்து அந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றினார் இளையராஜா
ஒவ்வோரு படத்திலும் இந்த இளைஞன் வளருவதை கண்ணார பார்த்து ரசிக்க முடிகிறது..திரையுலகில் அவரை "சாமி" என்றே கௌரவமாகவும் அவரை நெருங்கிய நட்சத்திரங்கள் "சாமியார்" என்று செல்லமாகவும் அழைப்பதை இங்கே காண்முடிகிறது..அந்த தெய்வத்தின் தரிசங்களை இங்கே காணகொடுக்கபட்டுள்ளன
வளர்ந்து வரும் இந்த இந்த இளைஞனை கண்டு மகிழுங்கள்
1980 இல் வெளிவந்த நிழல்கள் படத்தில் தலைவர்
1986இல் வெளிவந்த சாதனை படத்தில் தலைவர்
1986 இல் வெளிவந்த தர்மபத்தினி படத்தில் தலைவர்
1988இல் வெளிவந்த செண்பகமே செண்பகமே படத்தில் தலைவர்
1989இல் வெளிவந்த கரகாட்டகாரனில் தலைவர்
1989இல் வெளிவந்த புது புது அர்த்தங்கள் படத்தில் தலைவர்
\
1991 இல் வெளிவந்த கும்பக்கரை தங்கையாவில் தலைவர்
சுமார் 20 வருடங்களுக்கு பின்பு (2009இல்) அழகர் மலை படத்தில் தலைவர்
68 வயது நிரம்ப போகும் இந்த இளைஞன் இன்று மீண்டும் தன் இசை வெறியை இங்கே சுனாமி போல கிளப்பினால் சினிமா வட்டாரத்தில் ஒரு இசை அமைப்பாளரும் தப்பமாட்டான் என்பது என் தாழ்மையான கருத்து...
காலத்தை பின்னோக்கி செலுத்தும் சக்தி நம் மனதிற்கு பிடித்த சினிமா பாடல்களுக்கு மட்டுமே உண்டு .கொஞ்சம் யோசித்து பாருங்களேன் ...சினிமா பாடல் இல்லை என்றால் நாம் நம் மலறும் நினைவுகளை எப்படி நம் நினைவுக்கு வரவைக்க முடியும்...
சுமார் 35ஆண்டு காலமாக இசைக்கே இசை கற்று கொடுத்து இசையை வாழ்க்கையாக மாற்றிகொண்டவர் நம் தலைவர் இளையராஜா .அவர் நமக்கு இசையை மட்டும் கொடுக்க வில்லை ...பாடல்கள் மூலம் இறந்த காலத்தையும் கொடுத்திருக்கிறார்...அவருடைய ஒவ்வொரு பாடலும் உலகமெங்கிலும் உள்ள கோடான கோடி மக்களின் நினைவுகளை சுமந்து கொண்டு விண்ணில் உலவிகொண்டு இருக்கின்றன ..
ஒரு பாட்டை கேட்டாலே அந்த பாடலை முதன் முதல் கேட்ட ஆண்டு ...இருந்த ஊர் ..அப்போதைய வயது ,,,அப்போதைய நண்பர்கள் .....80 காசுக்கு அந்த படத்தை பார்த்த அனுபவம்....என்று நமக்கு அனைத்தையும் திரும்ப கொடுத்த அந்த கால திரைப்படங்களின் title பாடல்களை இங்கே ஒருங்கிணைத்து கொடுத்திருக்கிறேன்...
இந்த பாடல்கள் தலைவரின் பொற்காலமான 80 களில் வெளிவந்த படத்தின் தலைப்பு பாடல்கள் ...இந்த பாடல்களில் நம் இசைஞானியின் பெயர் வரும்போது விசில் சத்தம் காதை கிழித்த அனுபவம் ஏராளம் உண்டு ..
இந்த பாடல்களை கேட்க்கும் போது நிச்சயம் நீங்கள் 80களுக்கு பறப்பீர்கள்
நான் ஏற்கனவே சென்று விட்டேன்... மலறும் நினைவுகளுக்காக
...
(இங்கே பாடலை பார்ப்பதில் தடங்கல் ஏற்பட்டால் கீழே உள்ள பாடல் வரிசையில் அந்த பாடலின் மேல் செய்தால் பாடலை பிரச்சினை ஏதும் இன்றி youtube இணையதளத்திலேயே கண்டு மகிழலாம்)
நினைவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி என்ற பாடல் தலைவர் இசையில் காக்கை சிறகினிலே படத்தில் வரும் அந்த பாடல் வரிகள் எனக்கு பொருந்தும். அந்த அளவிற்கு நான் கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக ராஜாவின் இசை அமுதத்தை குடித்து வருகிறேன்.
அது 1985ம் ஆண்டு என் தந்தை ஒரு சிறிய கை ரேடியொ ஒன்றை வாங்கி வருகிறார். என்னை அறியாமல் அந்த ரேடியொவொடு இருந்த நாட்கள் அவை காலை எழுந்தது முதல் இரவு வரை அந்த ரேடியொ எங்கு சென்றாலும் என்னுடன் தான் இருக்கும் அப்பொழுது சேட்டிலைட் சேனல்கள் அவ்வளவு இல்லாத காலம். ரேடியொவில் இலங்கை வானொலியில்தான் அதிக தலைவரின் பாடல்களை கேட்பதுன்டு.
அந்த நேரத்தில் வந்துஇருந்த உதயகீதம் படத்தில் இடம்பெற்ற மானே தேனே பாடல் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒளிபரப்பி கொண்டு இருப்பார்கள் தலைவர் இசையில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் அது அவ்வளவு அருமையான பாடல் உல்லாச பயணம் செல்பவர்களுக்கு இன்றும் உகந்த பாடல் அது இப்பொழுது கேட்டாலும் 25 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லும்.
அந்த காலகட்டத்தில் அதாவது 1985முதல் 1990 வரை தூர்தர்ஷன் மிக சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அப்பொழுது வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் என்ற நிகழ்ச்சி மிக மிக பிரபலம். யார் என்ன வேலை இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவ்ர் வரை அனைவரும் ஆஜர் ஆகிவிடுவார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் ரசித்து பார்த்த பாடல் வருசம்16 படத்தில் வரும்பூ பூக்கும் மாசம் பாடல் மிக மிக அருமையான இப்பொழுது கேட்டாலும் மெய்மறக்க கூடிய பாடல் அது.
சமீபத்தில் வரும் புதிய பாடல்களை கேட்பது இல்லை அவ்வளவு காண கொடுரமான பாடல்கள் தான் வருகின்றன. ஆனால் இருபது வருடங்களுக்கு முன் தலைவ்ர் போட்ட கல்யாண மாலை பாடல் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இப்பொழுது கேட்டாலும் மிக இனிமையான பாடல் அது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் கருத்தரங்கில் தலைவர் பேசியது "நான் எப்பொழுதும் எல்லாபாடல்களயும் ரசித்துதான் இசையமைக்கிறேன். அப்படி இல்லை என்றால் மாலையில் யாரொ மனதோடு பேச பாடல் எல்லாம் உருவாக்கி இருக்க முடியுமா" என்றார்.சுவர்ணலதா குரலும் தலைவரின் இசையும் அவ்வளவு அருமை .அந்த பாடலை பாடிய சுவர்ணலதா நம்மில் இல்லாதது மிக பெரும் குறை.
நம் மனதை எப்பொழுதும் பரவச நிலையில் வைத்திருப்பது தலைவர்தான்.எவ்வளவு மன வேதனை இருந்தாலும் துன்பங்களை அகற்றுகிற சக்தி தலைவர் இசை மட்டும்தான். அந்த வரிசையில் தலைவரின் திருவாசகம் ஆல்பத்தில் இடம்பெற்ற பூவெறு கோனும்என்ற பாடல் பற்றி சொல்ல வார்த்தைளே இல்லை. தலைவரும் பவதாரினியும் இணைந்து அருமையாக பாடி இருப்பார்கள் தெய்வீக குரல் போல இருக்கும்
பாடல்களில் தலைவர் எவ்வளவு வல்லவரோ பின்னணி இசையில் தலைவரை அடித்து கொள்ள ஆள் இல்லை இவர் இசை அமைத்த நூறாவது நாள் ,24மணி நேரம்,உருவம்,கழுகு,பூவிழி வாசழிலே,சிகப்புரோஜாக்கள்,போன்ற த்ரில்லிங் படங்களிலும் வருசம்16,குணா,தளபதி,கோபுரவாசலிலே,சேது,காசி,புதுபுதுஅர்த்தங்கள், படங்கள் பிரமாதபடுத்தி இருப்பார் .
இதில் கோபுரவாசலிலே படத்தில் வரும் டைட்டில் இசை என் மனதை என்றும் கவர்ந்து நிற்க்கும் இசை அதேபோல் பூவிழி வாசழிலே படத்தில் வரும் ஒம் ஒம் ஹரி ஒம் என்று வரும் இசையும் என் மனதை கொள்ளை கொண்டவை.
தலைவர் இசை அமைத்து நிறைய பாடல் ஹிட் ஆகி இருக்கின்றன .இதில் நல்ல சில பாடல்கள் படத்தில் இடம் பெறாதது மிகப்பெறும் வேதனைக்கு உரியது குறிப்பாக அமைதிப்படை படத்தில் இடம்பெற்ற சொல்லிவிடு வெள்ளி நிலவே,மற்றும் மைக்கேல்மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற ஆடிப்பட்டம் தேடி ஜன்னல் என்ற பாடல்கள் தான் அவை இந்த இரண்டு பாடல்களும் நான் எப்பொழுது கேட்டாலும் என்னையே நான் மறந்துவிடும் பாடல்கள் இவை..
என்னதான் நாகரீகம் என்ற பெயரில் தமிழ் சினிமா மோசமான பாடல்களை எடுத்து கொண்டு இருந்தாலும் பண்பலை வானொலிகள் பகல் முழுவதும் கூத்தடித்துவிட்டு இருந்தாலும் இரவு நேரத்தில் நம் தலைவரின் பாடல்கள் தான் ஓளிபரப்பி வருகின்றன. இரவு நேரத்தில் நம் தலைவர் பாடல் கேட்பது ஒரு தனி சுகம்..கஷ்டப்படும் எல்லோரும் இரவு நேரத்தில் தலைவரின் பாடலை தலைவரின் குரலில் கேட்டு பார்த்தால் மயிலிரறகை வைத்து வருடுவது போல் இருக்கும். அப்படி ஒரு சக்தி தலைவர் பாடலுக்கு.அந்த வரிசையில் என் உயிர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற பூம்பாரையில் பொட்டு வைத்த பாடல் மிக மிக பிடித்த பாடல்.
நிறைய பாடல்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். எப்படி வானத்தில் இருக்கும் நட்சத்திரம் பூமியில் இருக்கும் மண்களை என்ன முடியாதோ அது போல் தலைவரின் பாடல்களை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுவிட முடியாது அது போல தலைவர் ஒரு இசை அமுத சுரபி.
என்னதான் தலைவரை வைத்து ஒருகாலத்தில் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்கள் காலத்தின் போக்கால் நவீன இசைக்கு மாறி இருந்தாலும் இது வரைக்கும் தலைவரை ஒருபடத்திற்கும் மாற்றாத ஃபாசில் ,பாலுமகேந்திரா,ராஜ்கிரன்,ஜிஎம் குமார், போன்றோர்க்கும் அவ்வப்போதூ வாய்ப்பு கொடுக்கும் கமலகாசன்;பாலா,மிஷ்கின்,போன்றோர்க்கும் என் நன்றி.
தலைவர் இன்னும் பல இசை சாதனை புரிய வேண்டும் அதற்க்கு ரசிகர்களாகிய நாம் ஊக்குவிப்போம். மேலும் தலைவர் விரும்பி கும்பிடும் திருவண்ணாமலை சிவனும் தாய் மூகாம்பிகையும் ரமண மஹரிசியும் அருள் தந்து துணை நிற்பார்கள் என நம்புவோம்.
நன்றி
அ.அபிராம் 21/245 வள்ளல் சீதக்காதி சாலை கீழக்கரை ராமனாதபுரம் மாவட்டம் செல்.9786545502 Mail- ramram1765@gmail.com
பிரசாந்த நடித்து கலைஞரின் வசனத்தில் தியாகராஜன் இயக்கிய வரலாற்று படம் தான் பொன்னர் சங்கர். விரைவில் வெள்ளிதிரை காணவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தலைவரின் பேச்சை கேட்டு வியந்தேன். நான் என்ன நினைக்கிறேனோ அதை அப்படியே சொல்ல எனக்கு தெறியவில்லை.தலைவர் சொல்லிவிட்டார்.. இதோ அவர் பேசிய வீடியோ....
இதில் தலைவர் இளையராஜாவுக்கு, கலைஞரின் கதை வசனம் இன்னமும் நினைவில் அப்படியே இருக்கிற்தென்றால் அவர் அடுத்த 50 ஆண்டுகளுக்குமான வசனத்தை அப்பொழுதே படைத்தார் என்றும் அது தன் நினைவாற்றல் இல்லை என்றும் சொன்னார்.அத்தனையும் உண்மை.
உங்கள் பாடலை நாங்கள் நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்று தினமும் மனப்பாடம் பண்ணுவதில்லை.உங்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் தாய் கொடுத்த பாலை போல ஊறி விட்டதைய்யா. அதனால் தான் உங்கள் பாடல்களை எங்கு கேட்டாலும் என்னையும் அறியாமல் பாடலை வரிகள் தவறாமல் பாடுகிறேன். இந்த விந்தையை நிகழ்த்தியது உங்களின் இசை உணர்வுதான்...அந்த உணர்வு எங்களுக்கு உணவு.
உதாரணத்திற்கு தலைவர் அவர்கள் இசை அமைத்த "ஆனந்த கும்மி" படத்தின் கதை என்னவென்று நமக்கு தெறியாது...யாரோ புதுமுகங்கள் நடிதிருக்கிறார்கள் ஆனால் பாடல்கள் மட்டும் இன்னும் என் காதுகளில் புதுமையாக ஒலித்து கொண்டிருக்கின்றன. இதோ அந்த படத்தின் ஆடியோ வீடியோ பாடல்கள் கிடைத்தன .சும்மா விடுவேனா..
இந்த நான்கு பாடல்களில் ஒரு பாடலை கூட சரியில்லை என்று ஒதுக்க முடியவில்லை. அத்தனையும் இன்றைய தினத்தில் நாங்கள் கேட்பதற்காக 25 ஆண்டுகள் முன்பு நீங்கள் அமைத்த பாடல்கள் . இதுமட்டுமல்ல நீங்கள் கொடுத்தது....
ஆமாங்க இதுதான் நான் கண்ட காதல்.. கடந்த வெள்ளிகிழமை அனறு மஹாபலிபுரம் சென்றேன்.இயற்கையை ரசிக்க அடிக்கடி அங்கே செல்வது வழக்கம்.அய்யோ..! அய்யோ..!! என்று குமுறுகிற அளவுக்கு இருந்தது நான் கண்ட காட்சிகள்.ஏரியா விட்டு ஏரியா சென்று சைட் அடிச்சாலே கைய கால பேர்த்தெடுக்கும் தமிழ் நாடு காணாமல் போனது..கன்னியமான காதல் இங்கே காமமாய் போனது.. கேலி கூத்தாய் ஆனது ..
நான் பார்த்த காதலர்களுக்கு சுமார் 15 வயதுக்கு மேல் இருக்காது .எல்லாருமே பள்ளிக்கு செல்லும் bagகளுடன் இருந்தார்கள்.
இங்கே பெரியவர்கள் முதலிரவில் நடத்தும் பள்ளி பாடங்களை நடு தெருவில் நடத்தி கொண்டிருந்தார்கள்.கோபமும் பரிதாபமும் சேர்ந்து வந்தது எனக்கு. பெண்களுக்கு கட்டுபாடுடன் கூடிய சுதந்திரத்தை கொடுத்திருந்தால் இந்த மாதிரியான தவறுகளை தடுத்திருக்கலாம்.
சரி இது போகட்டும் மெச்சூரிட்டியான ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் பரஸ்பர காதலை பற்றி பார்ப்போம்.
வந்தவுடன் சுகத்தை தருவது காதல் மட்டுமே..அதனால் தான் அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது
மனதாலும் உடலாலும் கவரப்பட்டு புரிதலுடன் உருவாகும் காதலில் அனபு மட்டுமே மூலதனமாக இருக்கும்.
அந்த அன்பு ஒருத்தருக்காக ஒருத்தரை வாழவும் வைக்கும்.. சாகவும் வைக்கும்...
ஒரு மனிதனின் நல்ல வாழ்க்கைக்கு காதல் வழிவகுத்தால் அந்த காதலை சந்தோஷமாகவே வரவேற்கவேண்டும்.
அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை அனுபவிக்க வாய்பளிக்கும் அதே காதல் ஒரு நிலையில் மனிதனை வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு காலெடுத்து வைக்க முடயாத படி செய்து விடுகிறது.
மனது நிறைந்த காதலன் அல்லது காதலி சந்தர்ப்ப சூழ்னிலையால் தன்னுடன் பேச மறுத்தாலோ ..பழக வெறுத்தாலோ வரும் சோகம் கடலின் அளவை மிஞ்சும்.
அந்த சோகம் இருவருக்குமே பொதுவானது.ஒருத்தருக்கு அப்போதெ ...மற்றவருக்கு காலம் கடந்து..
இந்த வீடியோவை போல..
காதலுக்கு கண்ணிருக்கிறதோ இல்லையோ ..கட்டாயம் கற்பு இருக்கவேண்டும்.
காதல் என்ற பேரில் நடக்கின்ற அவலங்களை தடுக்க சட்டத்திற்கு மட்டுமே வலிமை உண்டு.
அரசும் அதனை கவனிக்க வேண்டும்.
ஒருத்தனையே நினைத்து .. அந்த ஒருத்தனையே காதலித்து.. அந்த ஒருவனையே மணந்து.. அனபால் அவனை அணைத்து.. இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழும் காதலை இனிதாய் வறவேற்ப்போம்.. சுகமாய் அனுபவிப்போம்..
YOU TUBE இல் உலா வரும்போது சில பாடகர்களை சந்திக்க நேர்ந்தது.
கொஞ்ச நாள் முன்பு இளையராஜா கரோகே பாடல்கள் பதிவில் நான் ஒன்று குறிப்பிட்டிருந்தேன். ஒரே பாடலில் தன் திறமை அனைத்தையும் காண்பிக்க வேண்டும், அதே நேரத்தில் பார்ப்பவர்கள் அனைவரின் நெஞ்சையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் பாடகனின் கனவாக இருக்குமென்று.
இந்த கருத்து இங்கே வெகுவாக பொருந்துகிறது. தமிழ் மட்டுமில்லாமல்... மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு என மற்ற மொழிகளை தலைவரின் இசை ஆட்டுவித்தது நமக்கெல்லாம் தெறிந்ததே.
இந்த குழைந்தைகள் தலைவரின் இசையில் மயங்கியது மட்டுமல்லாமல் நம்மையும் கதிகலங்க வைக்கிறார்கள்.அதுவும் பெரும்புள்ளிகள் நடுவராக இருக்கும் போதே...இங்கே தரப்பட்டிருபவை அனைத்துமே high pitch பாடல்கள் .அதை இவர்கள் என்ன தெள்ள தெளிவாக பாடுகிறார்கள் பாருங்க கொஞ்சம் லேட்டாக பிறந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
தமிழில்..பிரியங்கா ஆனந்த ராகம் பாடலை பாடி அசத்துகிறார்
மலையாளத்தில் அனகா காற்றே எந்த கீதம் பாடலை பாடி நம்மை கவர்கிறார்
இந்த கன்னட பாடலை பாடி ஆச்சர்ய படுத்துபவர் RAKSHITHA
தெலுங்கு பாடலான வேதம் அனுஅனுவுல......என்று தொடங்கும் பாடலை பாடி பிரமிக்க வைக்கிறார் அமிர்தவர்ஷினி.
இதில் யார் நன்றாக பாடுகிறார்..
யாருடைய பாடல் உங்களை அதிகம் கவர்ந்தது..
யாருக்கு உங்கள் ஓட்டு..
இளையராஜா.. இந்த தவப்புதல்வனின் தீவிர ரசிகனில் நானும் ஒருவன்.
1960 லிருந்து 1980 வரை பிறந்தவர்கள் அனைவருக்கும் பழைய நினைவுகளை மீட்டு தருவது நம் தலைவர் இசைஞானியோட இசைதான்.வானொலிகளிலும் திருவிழாக்களிலும் இடைவிடாமல் ஒலித்து கொண்டிருந்த அவர் பாடல்கள்.. நம் வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எனக்கோ தலைவரின் பாடல்கள் என் நரம்புகளில் ரத்தம் போல கலந்திருக்கிறது.
மனிதனின் எல்லா சுழ்னிலைக்கும் இசை அமைப்பது என்பது சாதாரணமல்ல.ஆனால் தலைவர் அதை சாதித்திருக்கிறார். அப்படி இசை அமைத்தாலும் அது அனைத்து தரப்பினரையும் சென்று சேருமா என்பது சாதாரண விஷயமல்ல ..ஆனால் தலைவர் இதில் ஜெயித்திருக்கிறார்.
தலைவர் நடத்திய மாயாஜாலங்கள்.
கர்நாடக இசைக்கு பாமரர் செவி சாய்க்க வேண்டுமென்றால் ரிதம் ரொம்ப முக்கியம். தாளக்கட்டுக்களை சரியாக அமைத்து, வார்த்தைகளையும் சரியாக கோர்த்தால் மட்டுமே அது பாமர மக்களின் தூக்கத்தை கலைக்கும்.
கர்நாடக சங்கீதத்தை எப்படி பாமரர் வரை கொண்டு செல்வது என்பதற்கு இளையராஜாவே சிறந்த உதாரணம். நிறைய சொல்லலாம். நல்லதொரு கர்நாடக ராக அமைப்பில் உருவான "சொர்க்கமே என்றாலும்" பாடலை "மாடு கண்ணு மேய்ச்சு" என பட்டிதொட்டியெங்கும் இசைக்கச் செய்தவர்.
பாடல்கள் ஆரம்பிக்கும்போது ஒரு இசைக்கருவியுடனோ அல்லது மெல்லிய குரலுடனோ ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது.தலைவர் அதை புரட்டிபோட்டார். தனிக்காட்டு ராஜாவில் ராசாவே உன்ன நான் எண்ணிதான் பாடல் ஆரம்பிக்கும்போதே high pitchஇல் குரலுடன் எந்த இசைக்கருவியின் துணையில்லாமல் ஆரம்பிக்கும்
Instrumental musicஎன்பதை நமக்கு அறிமுகப்படுத்தியவர் நம் இசைராஜா இளையராஜா. இசையில் புல்லாங்குழலை அதிகமாக உபயோகித்தவரும் நம் ராஜாவே. புல்லாங்குழலை வைத்து ஒரு ஆட்ட பாடலை உருவாக்கி எல்லோரையும் ஆட்டம் போட வைத்த கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமாபாடல் சினிமா உலகின் ஒரு புதிய முயற்சி.
தமிழ் திரையுலகத்தில் பின்னனி இசையும்..! படமும்..! என்ற ஒரு trendஐ உருவாக்கியவரே மேஸ்ட்ரோ தான். ஒரு பின்னனி இசையை கேட்டாலே படத்தின் பெயரை மட்டுமல்ல ...காட்சிவரை சொல்கிற அளவுக்கு நம்மை சினிமாவுடன் இணைத்தவர் இளையராஜா.
Magazine எனப்படும் வார, மாத புத்தகங்களின் அட்டை படத்தில் இவருடைய புகைப்படமே முதன் முதலாக வெளியிடப்பட்டது என்பது வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.
Soft instrumentals என்ப்படும் வயலின் ,வீணை ,புல்லாங்குழல்,கிதார் போன்ற இசைக்கருவிகளை சேர்க்காமல் வெறும் Drums ,tribles ஐ வைத்தே ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்துள்ளார் தலைவர் இளையராஜா. அதுவும் அவரை பற்றிய பாடலே அது. அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல்தான் அந்த பாடல்
Aroganam என்ற இசைக்கருவியை மட்டுமே முதன்மையாக கொண்டு பாட்டமைத்த பாடல சிந்து பைரவியின் கலைவாணியேஎன்ற பாடல் அற்புதம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்...
இதெல்லாம் கூட தலைவர் வெகு சாதாரணமாக நடத்திய இசை சங்கமங்கள். 900 படங்களுக்கு ...சுமார் 5000 நிகராக பாடல்களை கொடுத்து சூரியனை போல் ஜொலித்து நிற்கிற நம் இசைஞானி இளையராஜா இசை அமைத்த இந்த பாடலை கேளுங்கள்..பாடும் நிலா பாலுவின் குரலுடன் இணையும் மற்ற இசை கருவிகளின் ஆதிக்கத்தை பாருங்கள்...மனிதன் குரலை வைத்து அவர் செய்கிற அட்டகாசங்களை பாருங்கள்...தேவர் மகனில் வானம் தொட்டு போனா..
இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமையே போதும்...வேறென்ன சொல்ல..
அன்புடன்... S.Saravanan Department Of Automobile Engineering Coordinator-Biofuel Research Cell Sri Venkateswara College Of Engineering Sriperumpudur.602105.Chennai.Tamilnadu. INDIA. SOUTH ASIA