அடுத்து என்னடா செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில்....கண்ணுக்கு தெறிந்தது இசைஞானியின் இந்த புகைப்படம்..அருமையான புகைப்படமாச்சே என்று நினைத்தேன்.. ரசித்தேன்...கொஞ்சம் உள்ளே சென்று ரசித்தேன்...பார்வைகள் படத்தின் ஒரு புள்ளியில் சங்க மித்தது ...
ஆம்.. கிடைத்தது அடுத்த பதிவுக்கான கரு. புகைப்படத்தில் தலைவரின் கைப்பட புண்ணியம் செய்த பியானோ தான் இந்த பதிவின் நாயகன்.
பியானோவின் வரலாறு (விக்கிபீடியாவிலிருந்து)..
பியானோ முதன்முதலில் 1700-ல் கிறிஸ்திஃபோரி (Cristifori) என்கிற இத்தாலிய இசைக்கருவிக்காப்பாளால் கட்டப்பட்டது. இவர் வடிவமைப்பில் இசைக்கருவியின் நரம்புகள் சுத்தியல்களால் அடிக்கப்பட்டு விடப்பட்டன. இதன் கட்டமைப்பை பற்றி மாஃபெய் (Maffei) என்கிற இத்தாலிய எழுத்தாளர் ஒரு விளக்கமான கட்டுரை 1711-ல் எழுதினார். இந்த கட்டுரையை படித்து ஸில்பெர்மேன் என்பவர் ஒரு மேம்படுத்தப்பட்ட இசைக்கருவியை கட்டினார். இதின் சிறப்பம்சம் அடியில் உள்ள தேய்மான மிதி (damper pedal). இதன் பின்னர் பியானோவின் தயாரிப்பு 18ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் மலர்ச்சி பெற்றது.
1790 இலிருந்து 1860க்குள் கின்னரப்பெட்டியின் நரம்புகளின் தரம் மிகவும் உயர்ந்தது. நரம்புகள்எஃகினால் கட்டப்பட்டது. பியானோவில் உள்ள இரும்புச் சட்டங்கள் துல்லியமாக வார்ப்படமிடப்பட்டது. ஒலிநீடிப்பும் மேம்படுத்தப்பட்டது. 1821இல் எரார்டு (Érard) இரட்டை விடுவிப்பு முறையை (double escapement) படைத்தார். இதனால் ஒரு சுரத்தின் மறுவிசைவு மற்றும் வாசிக்கும் வேகம் அதிகப்பட்டது. 1820க்குள் ஒரு பியானோவில் 7 எண்மசுரங்கள் அடைக்கப்பட்டன.
கின்னரப்பெட்டி (பியானோ) (piano) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஓர் இசைக்கருவி. (தமிழில், கின்னரப்பெட்டி என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது.) பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வசிப்பதற்கும்,அறையிசையில் (Chamber music) வாசிப்பதற்கும், துணைக்கருவியாக(Accompaniment) வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படும் பியானோ, இசை அமைப்பதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் கூட மிக உதவியுள்ளதாக கருதப்படுகிறது. விலை உயர்ந்ததாகவும் கையடக்கமாக இல்லாத போதும், பியானோவின் அவதானமும் (versatility) வியாபகமும் (ubiquity) அதைஇசைக்கருவிகளுள் மிகவும் அறியப்பட்ட ஒன்றாக உருவாக்கியுள்ளன.
பியானோவின் வதிப்பலகையிலுள்ள ஒரு வதியை (Key) அழுத்துவது, பின்னப்படாத துணியால் (Felt) சுற்றப்பட்ட ஒரு சுத்தியலை உருக்கு (Steel) கம்பிகளின் மீது அடிக்கச்செய்கிறது. அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுரச்செய்கிறது. இந்த அதிர்வுகள் ஒரு பாலத்தின் வழியாகஒலிப்பலகையின்(Soundboard) மீது செலுத்தப்படுகிறது. பின்பு, இந்தஒலிப்பலகையின் மூலமாக ஒலி அலைகள் காற்றில் கலந்து ஒலியாக வெளிப்படுகிறது. அழுத்தப்பட்ட வதியிலிருந்து விரல் எடுக்கப்படும்பொழுது,கம்பிகளின் அதிர்வுகள் ஒரு ஒலிதடு கருவியால்(Damper) நிறுத்தப்படுகின்றன. பியானோ, சில வேளைகளில் எருக்கு வாத்தியக்கருவியாகவும்(Percussion instrument) நரம்பு வாத்தியக்கருவியாகவும்(String instrument/Chordophone) வகைப்படுத்தப்படுகின்றது. ஹார்ன்பாச்டல் சாக்சின் இசை வகைப்படுத்துதலின்படி இது நரம்பு வாத்தியக்கருவிகளுடன்(Chordophones) சேர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு நவீன பியானோவில் 88 வதிகள் உள்ளன. பியானோவில் தனிநபர் இசை அல்லது குழு இசை வாசிக்கப்படுகிறது. பியானோவில் நடுப்புறத்தில் மேற்கொள்ளாக அமைந்த வதி "நடு C வதி" (Middle C Key) என அழைக்கப்படுகிறது. ஒரு பாடலின் இன்னிசை (melody) பொதுவாக நடு C யின் வலது வதிகளில் வாசிக்கப்படுகிறது. ஒரு பாடலின் ஒத்திசை (harmony) பொதுவாக நடு Cயின் இடது வதிகளில் வாசிக்கப்படுகிறது.
பியானோ முதன் முதலில் இத்தாலியில் தோன்றியது. Piano என்கிற ஆங்கில சொல் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. பியானோ என்பது பியானோபோர்டே(Pianoforte) என்பதன் சுருக்கமே. இன்றைய தினத்தில் இச்சொல் பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, clavicembalo [அல்லது gravicembalo] col piano e forte என்னும் இதன் உண்மையான இத்தாலிய பெயரிலிருந்தே எடுக்கப்பட்டது (எழுத்தின்படி: ஹார்ப்சிகார்ட் - அமைதியுடனும் பெலனுடனும்). இது, இந்தஇசைக்கருவியின் வதிப்பலகையை தொடுதலின் மூலம் உண்டாகும் இதன் பிரதிபலிப்பை குறிக்கிறது. இதனால், ஒரு பியானோ இசை கலைஞர், சுத்தியல் கம்பிகளை அடிக்கும் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வெவ்வேறு வேகங்களில்வாதிகளை உண்டாக்கலாம்.
சரி இப்போது இந்த இசைக்கருவியை நம் ஆஸ்தான நடிகர்களின் படங்களில் தலைவர் கையாண்ட விதத்தை பற்றி பார்ப்போம்
மரபு இங்கே மீறப்படுகிறது. பெண்ணுக்கு ஆறுதல் கூறும் சாதாரண சூழ் நிலை பாட்டுக்கு பியானோவை இசைக்கவைத்தது இசைஞானியின் இசை அராஜகம்.
இசையோடு கவிதையும் ,கவிதையோடு ராகமும், ராகத்தோடு நம் ஜேசுதாஸின் குரலும் சேர்ந்த கலவை மீண்டும் நம் கண் முன்னே இங்கே வீடியோவாக..
அவள் அப்படிதான் படத்தின் உறவுகள் தொடர் கதை
அடுத்து இசைக்க வருபவர் சூப்பர் ஸ்டார் .. இந்த இசையை ரஜினிகாந்த் இசைக்கிற மாதிரி நடிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதாகஅப்போதைய பேசும் படம் பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்...அப்படி நாம் உணர்ச்சி வசப்படதானே தலைவர் இப்படி இசை அமைக்கிறார்... இதோ நீங்கள் உணர்ச்சிவசப்பட மீண்டும் ஒருமுறை தென்மதுரை வைகை நதி..
அதே பாடலை சோகமாக இசைக்க வருபவர் இளையதிலகம் பிரபு ..
நம் நவரச நாயகன் கார்த்திக் பியானோவோடு நடித்த இந்த பாடல் கேட்க ரம்மியமானது ..பார்க்க திகட்டாதது..அபூர்வமான பாடல் இங்கே உங்க பார்வைக்கு மீண்டும் ஒரு முறை..
அன்பே சங்கீதாவில் எவரும் எதிர்பார்க்காத விதமாய் நம் தேங்காய் சீனிவாசன்...சின்ன புறா ஒன்று
இந்த பாடலின் தாக்கத்தை அனுபவிக்காத காதலர்களே இல்லை .அந்த பாடல் இங்கே..
அடுத்து வருபவர் புரட்சிதமிழன் சத்தியராஜ்.. அவர் கைகள் இசைக்கும் நம் இசைஞானியின் இந்த மனமயக்கும் பியானோ இசை சாதாராண மெலோடிக்கல்ல பழைய நினைகளை மீட்டு வர high pitchஇல் அமைக்க பட்ட இசைகோர்வை..
கல்யாணம் வைபோகம் ..களைகட்டுகிறது பார்ட்டி..ராதாவின் விரல்கள் பியானோவை இசைக்க .. அதில் இருந்து வரும் இசை ராதாவின் ஆசை, பாசம், நேசம், அன்பு, காதல், கோபம், தாபம் எமாற்றம் வலி எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது..
மீண்டும் ராதாவே பியானோவை இசைக்க வருகிறார் ...வானம் தொடாத மேகம் என்ற பாடலுடன் சின்னப்பதாஸ் படத்திலிருந்து..
அடுத்து வருபவர் மைக் மோகன் .... பாடல்களால் மட்டுமே புகழின் உச்சத்துக்கு சென்றவர்..இங்கே பிறந்த நாளில்லை ..பார்ட்டி இல்லை .
கடற்கரையில் காதலை காதலன் கொண்டாடுகிறார் ..பியானோவோட துணையுடன்..
தலைமகன் கமலஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தின் பின்னனி இசை இங்கே வெளியிடபட்டிருக்கிறது
அதில் நடுவே உலக நாயகன் இசைக்கும் பியானோவின் பின்னனி இசையை அநேக ரசிகர்கள் தவற விட்டிருப்பார்கள் நினைகிறேன் ..கவனியுங்கள்.
உங்களை அந்த இசை சந்தோசபடுத்தும்..சந்தோசப்படுவீர்கள்
மௌனராகத்தின் பின்னனி இசை ...அது அமைக்க பட்ட விதம் ..அதை வாசிக்கும் விதம் எல்லாம் இங்கே கற்று தர படுகிறது..
உண்ணிப்பாக கவனித்தால் நாமும் பியானோ இசைக்கலைஞன் தான் என்ற உணர்வை ஏற்படுத்தும் ..
பணக்கார இசைக்கருவியை நாம் இசைக்க வசதி இல்லாவிட்டாலும் தன் இசையால் அதை நம் வீட்டில் நிரப்பிய இசைஞானி ..
சமகாலத்து முடிசூடா மன்னனே..இசைக்கு.
No comments:
Post a Comment