Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, November 30, 2010

RAJINI KANTH HITS IN ILAYARAJA MUSIC





சூப்பர் ஸ்டார் என்ற ஒரு வார்த்தையே போதும் தமிழ் நாடே அதிரும் ....உண்மைதான் .அவர் வேகமான நடையும் ஸ்டைலான‌ நடிப்பும் அழகான முகமும் கலைந்த தலைமுடியும் நம்மையும் கட்டிபோட்டதென்னவோ உண்மைதான்.  தளபதியை முதல் நாளில் பார்த்து அதிர்ந்துதான் போனேன்.தீபாவளி கொண்டாட்டத்தை கோலாகலமாக ஆக்கியது அந்த படம் .
படம் முழுக்க அதிரடி வேட்டுகளைவெடித்து வெறித்தனத்தில் துள்ளிகுதித்தனர் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள்.அந்த படம் என்னை ரொம்பவே பாதிததது.அன்று முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்தால் முதல் நாளே பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.பார்த்தும் வருகிறேன்.


இதில் தலைவர் இசைஞானிக்கு முக்கியபங்கு இருப்பது அப்போது எனக்கு தெறியாது.அப்போது அவர் ரத்தினங்களையும் முத்துக்களையும் பவளங்களையும் மக்கள் கேட்காமலேயே அள்ளி கொடுத்துவிட்டார். அதனால் தான் அப்போது அவரின் அருமை தெறியாமல் போனது.

தளபதியின்

இந்த பாடல் BBCயில் தொடர்ந்து ஒரு வருடம் முதலிடத்தை பிடித்த பாட்டு.




ரஜினிக்காக தலைவர் இசைஅமைத்த படங்களில் எல்லா படங்களுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிட தக்கது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இசைஞானி இளையராஜாவும் இணைந்த படங்கள் 

      
1.16 vayathinile
2.Aaril irunthu arubathu varai
3.Aduththa vaarisu
4.Anbulla rajinikaanth
5.Athisaya piravi
6.Bairavi
7.Bhuvana oru kelvikkuri
8.Dharma yuththam
9.Dharmam vellum
10.Ejamaan
11.Engeyo ketta kural
12.Gaayathri
13.Garjanai
14.Guru sishyan
15.Johnny
16.Kaali
17.Kai kodukkum kai
18.Maappillai
19.Maaveeran
21.Mannan
22.Mr. Bhaarath
23.Mullum malarum
24.Murattuk kaalai
25.Naan mahaan alla
26.Naan potta savaal
27.Naan sigappu manithan
28.Naan vaazhavaippen
29.Nallavanukku nallavan
30.Paayum puli
31.Padikkaathavan
32.Panakkaran
33.Raajaadhi raaja - Telugu
34.Raajaathi raaja
36.Thalapathi
37.Uzhaippaali
38.Valli
39.Veera
40.Velaikkaran






தலைவரை சூப்பர் ஸ்டார் "ராஜாசாமி" என்றே அழைத்து வருகிறார்.இன்னமும் இளையராஜாவின் மேல் ரஜினிக்கு அலாதிபிரியம் இருக்கிறது .எப்படியாவது தன் படத்தில் ராஜாவை இசை அமைக்கவைத்து விட வேண்டும் என்பதில் அண்ணாமலை படத்தில் இருந்தே குறியாக இருக்கிறார்.  

சூப்பர் ஸ்டாரின் சமீபத்தில் வெளிவந்த படத்தில் இருந்து ஒரு சில வரிகளை பாடுமாறு என்னுடன் பணிபுரிபவர்களை கேட்டேன் .ஒருத்தருக்கும் ஒரு வரி மேல் தெறியவில்லை என்பதில் ஆச்சரியம் ஏதுமிலலை.இசை இப்போது செத்து கொண்டிருக்கிறது என்பதன் விளைவே இது .
இப்போது இசைகருவிகளை குறைத்து இசைஅமைப்பாளர்கள் அதிகமாகி விட்டனர். 


பணத்துக்காக இசையை கொலை செய்வதற்கும் இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் தயங்குவதில்லை.ஒரு பாடல்களின் வரிகள் நமக்கு பலமுறை கேட்டும் புறியவில்லை என்றால் அப்பாடலுக்கு பாடலாசிறியர் எதற்கு?
ஆ... ஆ... ஓ.. ஓ... என்றே கத்தி விட்டு போகலாமே?

பாடல் என்றால் இப்படி இருக்கனும்
இந்த பாடலை ஒரு முறை பாடி பாருங்களேன்...காதலின் இன்பத்தை அனுபவிப்பீர்கள்.ரஜினி என்ற ஆக்ரோஷமான நடிகரை காதல் நாயகானாக காட்டிய பாடல் இது.அன்று முதல் இன்று வரை காதலிப்பவர்களும் ,  கேட்பவர்களை தன் வசப்படுத்த மேடை பாடகர்களும் அடிக்கடி பாடும் பாட்டு இது 



சும்மா பேச்சுக்கு சொல்ல வில்லை .இந்த பாடலை நன்றாக உள் வாங்கிகொண்டு மனதார ரசிச்சு அழகான பாவனையுடன் உங்கள் காதலியின் முன் பாடிப்பாருங்கள் ....உங்கள் காதலி உங்கள் வசம் நிச்சயமே...



இதோ இன்னொரு காதலனின் மயக்கும் காதல் பாட்டு.





சலூன் கடைக்காரனுக்கு காதல் ..பாருங்க சிஸ்சரிலிருந்து பாடல் பிறக்குது.


.





காலையில் புத்துணர்ச்சியோடு கிளம்பும் சூப்பர் ஸ்டார் பாடல் ., சுகமான காலை சூப்பராக அமைய கேக்க வேண்டிய பாட்டு..


வாழும் தெய்வமாகிய் அன்னைக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தும் பாட்டு. இந்த பாடலை பாடும்போது ஜேசுதாஸின் குரல்கள் உணர்ச்சி வசத்தில் தழுதழுத்தாக கேள்விபட்டிருக்கிறேன்.படத்தை இயக்கும்போது உயிருடன் இருந்த இயக்குனர் P.வாசுவின் அன்னை படத்தை வெளியிடும்போது இல்லையாம் .பாட்டு வரும் போது கதறியிருக்கிறார் மனிதர்.





இந்த பாடலை கேட்டால் ஆடாதவர்களும் ஆடுவர்.. இன்னமும் இந்த பாடல் இசைகச்சேரிகளில் கடைசி பாடலாக இருக்கிறது.





 தன் பாடலில் ஏதாவது ஒரு கருத்து... இல்லை இல்லை.. உயர்ந்த கருத்தை சொல்ல வேண்டும் என்பதே தலைவரின் எண்ணம்.இந்த பாடலை கேளுங்கள்.ரஜினி என்ன சொல்கிறார் என்பதை..




குழந்தை செல்வத்தை பெறப்போகும் தந்தை சந்தோஷபட்டால் இப்படி பாடினால் தான் எங்களுக்கு சந்தோசம்..




பிறந்ததற்கும் பாடல் உண்டு பிறந்த நாளை கொண்டாடுவதற்கும் பாடல் உண்டு.


இதோ இந்த பாடலை கேளுங்கள் .சொர்கத்துல நிச்சயிக்க பட வேண்டிய திருமணத்தில் எந்த பொருத்தம் மிக முக்கியமென்று சூப்பர்ஸ்டார் சொல்கிறார். அந்த ஜோடிக்கு அந்த மேடையில் அனறு அவர் சொன்ன திருமண வாழ்த்து தான் இன்றும் திருமணங்களில் ஒலித்துகொண்டிருக்கிறது. நாளை திருமணம் நடக்கவிருக்கும்  புதுஜோடிகளுக்கும் இந்த பாடலே போதும் .
இந்த பாடலை தூக்கி சாப்பிடுகிற மாதிரி இசைஅமைக்க‌ இதுவரை எந்த கொம்பனும் பிறக்க வில்லை.



ரஜினியின் கோபத்துக்கும் குணத்துக்கும் பாட்டமைத்த இளையராஜா அவரின் தங்கை பாசத்திற்கு மட்டும் இசை அமைக்காமல் விட்டிருபாரா என்ன?
தங்கையின் புண்சிரிப்பில் தன் வாழ் நாளை கழிக்கவிரும்பும் அண்ணனின்  பாசத்தை இந்த பாடலில் பாருங்கள்






ஊரே வணங்கும் சூப்பர் ஸ்டாருக்கு ஊரே ஒன்று கூடி பாடும் பாட்டு.




தொடர்ந்து தலைவர் கொடுத்த பாடல்கள் சூப்பர் ஸ்டாரின் பண்புகளை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் இருந்த்தை மறுக்க முடியாது.
இதோ அவைகளில் என் மனதுக்கு பிடித்தவை




பாண்டியனில் இந்த பாடல் ரஜினிக்காக மட்டும்.. ரஜினிக்காக மட்டுமே...      வேறு எவருக்கும் பொறுந்தாத பாடல் ...
நான் எப்போதுமே உணர்ச்சி வசத்தில் துள்ளி குதிக்கும் பாட்டு .இந்த  பாட்டு ஆரம்பித்தாலே என்னை நான் மறக்கிறேன் ரஜினியாக மாறுகிறேன் இல்ல மாற நினைக்கிறேன்.




சொந்தங்கள் ஏமாற்றும்போது இதயத்தில் தாக்குதல் நடத்தும் சோகத்தை கண்ணீரின் மூலம் கரைத்துவிட பார்க்கிறார் ரஜினிகாந்த். ஆனால் அவர் உதடுகள் தன் சோகத்தை இப்படி பாடலில் கொட்டி தீர்கின்றன. ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்று சூழ் நிலைகளுள் ஏதாவது ஒன்றில் நிச்சயம் சிக்கியிருப்பான்.பாருங்க.





சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.ரஜினி சாரா இது ..அதுவும் நூறாவது படதில் ...கடவுளாகவே நம்பிவிட்டனர்.. நூறுசதவிகிதம் பொறுந்திய முகம் அதற்கேற்றாற் போல் பாடல்கள். இந்த பாடலுக்கு இளையராஜா அவர்கள் மெட்டு போட்டதில் பெறிய விஷயம் ஏதுமில்லை. ரஜினி சார் இந்த பாடலுக்கு பொறுத்தமாக வாயசைத்திருப்பது அற்புதம்.

இது சங்கீதம் .கஷ்டமான அந்த சங்கீதத்தையே நம்முடைய நாவில் வழிந்தோட வைத்துவிட்டார் இளையராஜா.
சாதாரண பாடல்களைகூட பாட்டு புத்தகத்தை வாங்கி படித்தால் தான் தெறிந்து கொள்ளவாவது முடிகிறது இப்பொதுள்ள இசையில்..





ஒன்று மட்டும் உண்மை ...தலைவர் சொன்னது
இசை என்பது எப்போது கேட்டாலும் அது புதியதாக தோன்ற வேண் டும் .



SONGS DOWNLOAD



Adutha Varisu - Asai Nooruvagai_2.mp3
Bhuvana Oru Kelvikuri - Vizhiyilae Malarnthatu.mp3
Dharma Durai - Aanenna Pennenna Neeyenna.mp3
Dharmathin Thalaivan -Thenmadurai Vaigai Nadhi (Balasubramaniyam).mp3
Ejjaman - Adi Rakku Muthu.mp3
Ejjaman - Kadadi.mp3
Ennoda Raasi Nalla Raasi.mp3
Jhony - snowreeta.mp3
Kali - Vazhvu Mattum.mp3
Malaiyala Karai.mp3
Mannan - AmmaEndru.mp3
Maveeran - Vaangada Vaanga En Vandikku Pinnale.mp3
Mullum Malarum - Raman Andal.mp3
Murattu kalai - Pothuvaga.mp3
Naan Potta Saval - Nenje Un.mp3
Naan Sivappu Manithan - Venmegham.mp3
Nallavanukku Nallavan - Chittuku.mp3
Padikathavan - Oorai therinchi.mp3
Padikathavan - Rajavukku raja.mp3
Panakkaran - Nooru Varusham Intha Mappilaium-Male.mp3
Pandiyan - Pandiyana Kokka.mp3
Puthu Kavithai - Vaa Vaa Vasanthamey.mp3
Sri Raghavendrar - Ramana Naam.mp3
Thalapathi - Rakkama.mp3
Uzhaippaali - Uzhaippali illatha.mp3
Velaikaran - Velaiyillathava.mp3



Tell a Friend


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...