தமிழகத்தின் வேலூர் நகரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவரது இயற்பெயர் 'கலைவாணி'.
தன் கணவர் பெயருடன் சேர்த்து வாணிஜெயராமாக உருவெடுத்த வாணிஜெயராம் முதலில் கலக்கியது மராத்தி மொழியில். மராத்தியில் இவர் பாடிய பாடல் பல விருதுகளை இவர் குரலுக்கு பரிசாக கொடுத்தது.பின்னர் வட நாட்டில் மராத்தி உட்பட குஜராத்தி,மர்வாரி,போஜ்புரி என அணைத்து மொழிகளிலும் தென் நாட்டில் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பாடிய தமிழ் பாடகி என்ற் அந்தஸ்தை பெற்றார்.
மற்றும் நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இந்தியாவின் அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்.
வாணிஜெயராம் அவர்கள் இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டதாகவும் . அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்ததாகவும். வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்ததாகவும் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இன்னமும் ஒரிஸாவிலும், வங்காளியிலும், நான்கு திராவிட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.
வாணிஜெயராமின் குரலுக்கு, குடும்பப் பாடல்களே கவர்ச்சிகரமானவை. 'காபரே' பாடல்களை அவர் மிக அழகாகப் பாடினாலும், அவை என்னவோ வாணிஜெயராமின் குரலுக்கு ஒத்துவராதவைபோல் தோன்றும்.
இவர் காபரே பாடல்களை தவிர்ப்பது நல்லது என கவிஞர் கண்ணதாசனே தெரிவித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இவரை பார்த்தாலே ஏதோ என்பது போல தோன்றும் ஆனால் இவர் பாடகி என்றவுடன் நிச்சயம் இவர் சங்கீத பாடகியாக இருப்பார் என நினைத்தால் அதுவும் தவறு. அழகான இவர் முகமும் அழகான இவர் குரலும் அழகாக பின்னப்பட்ட காவியம் ஆகும்
வாணி ஜெயராம், இந்திய இசை உலக மகுடத்தில் மின்னும் வைரம். கடந்த 37 ஆண்டுகளாக ரசிக நெஞ்சங்களில் இசைமழை பொழிந்துவரும் மேகம். 'வர்ண'ஜாலம் காட்டிவரும் வானம்பாடி.10000 பாடல்களை கடந்த இவரது இசைப்பயணம் 2 வயதிலேயே தொடங்கிவிட்டது என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கு. அந்தப் பிஞ்சு வயதில் ராகங்களையும், இசைக் குறிப்புகளையும் இவரால் இனம் கண்டுகொள்ள முடிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 'கலைவாணியின்' பரிபூரண அருளுடன், முறையான சங்கீதப் பயிற்சியும் இவரது திறமையை மெருகேற்றின.
திருமணத்துக்குப் பிறகு மும்பை சென்றவர், உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி மெல்லிசைப் பயிற்சியும் பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர சாதகம்...தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி. 1969, மார்ச் 1ம் தேதி அரங்கேற்றத்தில் பொழிந்த இசை மழையில் நனைந்த ரசிகர் கூட்டம் ஆனந்தக் கூத்தாடியது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு மொய்த்தன. இந்தி இசை அமைப்பாளர் வசந்த் தேசாயிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அடுத்த நாளே பாடல் பதிவு. இதைத் தொடர்ந்து மாரத்தி பாடல் வாய்ப்புகள் குவிந்தன. இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி, இசையமைப்பாளர் வசந்த் தேசாய் கூட்டணியில் உருவான 'குட்டி' திரைப்படத்தில் வாணியின் குரல் தேன் சொட்டியது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்த படத்தில் பாடிய 'போல் ரே பபி ஹரா' 5 விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருதும் தானே வந்தது
1976... 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒலித்த 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் தமிழ் ரசிகர்களை கிறங்க வைத்தது. தேசிய விருதும் தேடி வந்தது. அழகே உன்னை ஆராதிக்கிறேன், மீரா, சங்கராபரணம், ஸ்வாதிகிரணம்...என்று இந்த இசைக் குயிலின் தேவராகத்தில் பிறந்த பாடல்கள் ரசிகர்களின் உள்ளங்களையும், விருதுகளையும் கொள்ளையடித்தன. நௌஷாத், மதன் மோகன், ஓ.பி.நையர், ஆர்.டி.பர்மன், கல்யாண்ஜி ஆன்ந்த்ஜி, லஷ்மிகாந்த் ப்யாரேலால், கே.வி. மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா...என்று இவர் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை. குஜராத், ஒரிசா, தமிழகம், ஆந்திர மாநில அரசுகளும் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன. பத்தாயிரம் பாடல்களைக் கடந்தும் இவரது இன்னிசைப் பயணம் தொய்வின்றி தொடர்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகள், பக்ரைன், கத்தார், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ்...என்று இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ள நாடுகளின் பட்டியல் நீள்கிறது. இவை இவரது சாதனை சரித்திரத்தில் சில பக்கங்கள் மட்டுமே.
வாணி ஜெயராம் பெற்ற விருதுகள்...
குடியரசுத் தலைவரின் தேசிய விருது அபூர்வ ராகங்கள் (தமிழ், 1976),
சங்கராபரணம் (தெலுங்கு, 1980), ஸ்வாதிகிரணம் (தெலுங்கு, 1992).
மியான் தான்சேன் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1971 (இந்தி, போல் ரே பபி ஹரா)
குஜராத் அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992 1972 (குஜராத்தி, 'குங்கத்').
தமிழக அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (தமிழ், அழகே உன்னை ஆராதிக்கிறேன்).
பிலிம்பேர் விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (மீரா)
ஆந்திர அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1980 (சங்கராபரணம்).
ஒரிசா அரசு விருது சிறந்த பின்னணிப் பாடகி, 1982 (ஒரியா, 'தேஜ்பானி').
தமிழக அரசின் கலைமாமணி விருது 1991
மும்பை 'சுர் சிங்கார் சம்ஷத்' வழங்கும் சங்கீத பீட விருது 1992
தமிழக அரசு வழங்கும் 'எம்.கே. தியாகராஜ பாகவதர் - வாழ்நாள் சாதனையாளர்' விருது 2
என்னதான் பிரமிப்பான பாடகியாக இருந்த போதும் அவர் இசை
தொகுப்பில் தலைவரின் இசை கலக்கும் போது அதன் சுகமே தனிதான் .
நான் பார்தவை மற்றும் எனக்கு பிடித்தவைகளில் சில
vanijeyaram video songs
vanijeyaram audio songs
vanijeyaram songs download
01 abc nee vaasi.mp3
03 bharathi kannamma.mp3(M.S.V)
06 hey i love you.mp3
08 indraikku yean intha.mp3
16 Mallige Poovuku.mp3
19 orey naal.mp3
20 oru vaanavil polae.mp3
Azhage Unnai Aaraadhikkiren - En Kalyana.mp3
Azhage Unnai Aaraadhikkiren - Kurinji.mp3
Azhage Unnai Aaraadhikkiren - Naane Naana.mp3
Echil Iravugal - Poo Mele Veesum.mp3
Indru Nee Nalai Naan - Tazham Poove.mp3
Meendum Kokila - Chinnnan Chiru.mp3
Mullum Malarum - Nitham Nitham.mp3
Nooravadhu Naal - Ulagam Muzhuthum Pazhaiya Raaththiri.mp3
Ponn Mana Selvan - Poovaana Edda Thoddhu.mp3
Punnagai Mannan - Kavithai .mp3
Rosapoo Ravikaikari - En ulil engo.mp3
Saathanai - Inge Naan.mp3
Sri Raghavendrar - Ramana Naam_2.mp3
Thanga Magan - Machaana Paaradi.mp3
Thanga Magan - Vaa Vaa pakkam.mp3
Unnai Naan Santhithean - Unnai Kaanum Neram Nenjam Pala Nooru.mp3
Vaithegi Kathirunthal - Indraikku Ean.mp3
Vazhkai - Kaalam Maaralam.mp3
No comments:
Post a Comment