சின்ன தம்பி என்று பிறர் சொல்ல கேட்டால் கூட நமக்கு நினைவுக்கு வருவது பிரபு குஷ்பு நடித்த சின்னதம்பி படம் தான் இல்லையா?
உலகமெங்கும் சக்கைபோடுபோட்ட உண்மையான வெற்றிபடம் என்றால் அது மிகையாகாது .குடும்ப பின்னனியில் காதலை கலந்து கொடுக்கபட்ட படம்.அன்றைய நாளில் இந்த படமே சிறந்த பெறிய வெற்றிபடமாக இருந்தது .குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் குவிந்ததை நானும் என் கண்ணெதிரே பார்த்திருக்கிறேன்.இந்த படத்தில் பிரபுவும் குஷ்புவும் ஆளுக்கொரு பக்கமாக பட்டயகிளப்பினர்
.
சின்ன எனறு தொடங்கும் படங்கள் இதற்கு முன்னரும் பின்னும் நிறைய வெளிவந்தன. சின்னவீடு,சின்ன தாயி,சின்ன மாப்ளே, சின்னஜமீன்,சின்ன தம்பி பெறிய தம்பி,சின்னவர்,சின்ன வத்தியார்,சின்ன பசங்க நாங்க,சின்ன கௌண்டர் ,சின்ன மருமகள்,சின்ன கண்ணம்மா...என் தொடர்கிறது பட்டியல் இந்த பட்டியலில் முதல் இடத்தை சின்னதம்பி முழுமையாக பிடித்துகொண்டது.
குஷ்பு அறிமுகபடுத்தபட்ட படத்திலேயே பிரபுவுடன் இணைந்திருந்தாலும் ..பெறிதாக பேசப்பட்டது இந்த படத்தில்தான்..
குஷ்புவுக்கு கோயிலை கட்டியதும் இந்த படத்திற்கு பிறகுதான்...
வரலாறு படைத்த இந்த படத்தில் நடித
ராதாரவியும் அவரது தம்பிகளும் குஷ்புவின் பாசத்திற்கு...மனோரமா பிரபுவின் பாசத்திற்கு....கௌண்டமணி காமெடிக்கு..இயக்குவதற்கு வாசுவ இசைக்கு இசைஞானி இளையராஜா.பாருங்க படம் 10கோடியைதாண்டி வசூலைகுவித்தது .திரையிடப்பட்ட அணைத்து தியேட்டர்களிலும் 50 நாட்கள் ஓடிய முதல் படம் ,50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்களையும் 10க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 175 நாட்களையும் கடந்து வெற்றி சாதனை கனியை சுவைத்த படம்.அப்போதெல்லாம் இத்தனை தொலைக்காட்சிகள் கிடையாது.சினிமாவை பற்றி அலசுவதை சினிமா சம்மந்த பட்ட சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற புத்தகங்கள் ஆட்சி செய்தன.எல்லா புத்தகங்களிலும் பிரபு ,குஷ்பு போட்டக்களையும்,படத்தை பற்றிய செய்திகளையும் அணு அணுவாக வெளியிட்டிருந்தன.
சினிமாவை திரையரங்குவிட்டு வெளிவந்தால் மீண்டும் நமக்கு நினைவு படுத்துவது பாடல்களே
இந்த படத்தில் ஒவ்வொரு பாடல்களுமே தனி சிறப்பு வாய்ந்திருந்தன.குறிப்பாக போவோமா பாடல் சுவர்ணலதாவுக்கு நீங்காத புகழை கொடுத்தது.
போவோமா பாடலை தலைவர் துவங்கிய விதமே தனி . ஒரு பெண் முதல் முதல் வெளியுலகுக்கு வருகிறாள் என்றால் அவளை சாதாரணமாகாவா வரவேற்பது கேளுங்க இந்த இசையை ..
இது குஷ்புவுக்கான வாய்ப்பு ....100 மார்க் போடலாம் ..
அறைச்ச சந்தனம் பாடல் பெண்களின் பூப்புனித நீராட்டு விழாவில் வரவேற்பு பாடலாக அங்கம் வகித்தது..
தூளியிலே பாடலை பாடல்மனோவும் சித்ராவும் பாடியிருந்தனர் .இந்த பாடலையே தலைவர் பின்னனி இசையாகவும் அமைத்திருந்தார்.
பாலுசாருக்கு 4 பாடல்கள் .படத்தின் சூழ்னிலைக்கேற்ப இசைஅமைத்தால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்பதை இந்த படத்தின் பாடல்கள்
மீண்டும் நிருபித்தன.
குயிலை பிடிச்சி பாடலில் பாடகன் தன் நிலையை பாட்டில் சொல்லி அழுகிறான்.
வரிகளை சூழ்னிலைக்கு அப்படிதான் அமைத்திருந்தார் கவிஞர் வாலி..இசையோடு பாடல் இங்கே ஒளியோடும்.....
.
அரச பரம்பரை பெண்ணுக்கு பாதுகாப்பு தரப்படுகிறது இது காட்சி...அதற்கு இசை இப்படியல்லாமல் வேறு எப்படி ..?
பிரபு குஷ்பு சம்மந்த பட்ட காட்சிகளுக்கு நம் தலைவரின் பின்னனி இசையின் தொகுப்பு
சிறந்த பாடலுகளுடன் இடைஇடையே மெல்லிய இசையால், விடப்பட்ட இடைவெளிகளையெல்லாம் நிரப்பி மிக சாதாரணமாக ஒரு அற்புதபடைப்பை நமக்கு அளித்தார் தலைவர் இளையராஜா அவர்கள்.தலைவரின் தாயின் பெயர் "சின்னதாயி" .தாயின் மேல் கொண்ட அனபினால் "சின்ன" என்று தொடங்கும் எந்த படத்தையும் அவர் விட்டு வைப்பதில்லை.அந்த படங்களில் இந்த சின்னதம்பி படம் நமக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. உங்கள் கருத்து ஏதேனும் இருந்தால்ல்ல்ல்ல்ல்........................
SONGS
POVOMA OORGOLAM- CHINNA THAMBI.mp3
ADA_UCHANTHALA_CHINNA THAMBI(1991).mp3
KUYILA PUDICHI-CHINNA THAMBI.mp3
NEE_ENGE-CHINNA THAMBI (1991).mp3
ARACHA SANTHANAM-CHINNA THAMBI (1991).mp3
THOOLIYILAE_CHINNA THAMBI(MALE) (1991).mp3
THOOLIYILEA-CHINNA THAMBI(CHITRA) (1991).mp3
பாடல்களை கேட்டு மகிழ...
அழகான நல்ல பாடல்கள்!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்!