(நண்பர் காமராஜுக்கான பதிவு இது..)
ஒரு சில நிமிடங்களில் இது நிகழபோகிறது..தட்ப வெப்பனிலை மாறிக்கொள்கிறது.பறவைகள் இங்கும் அங்கும் பறந்து சந்தோஷத்தில் திரிவதில் நமக்கு சந்தேகம்..
மேகம் கருப்பு போர்வை போத்திகொண்டதில் மயிலுக்கு ஏன் சந்தோஷம்..
மேகம் கருப்பு போர்வை போத்திகொண்டதில் மயிலுக்கு ஏன் சந்தோஷம்..
பெண்கள் மொட்டை மாடியில் காயபோட்டிருந்த துணிகளை பத்திரபடுத்தி மொட்டைமாடியை மொட்டையாக்கி கொண்டிருந்தார்கள் அவசரம் அவசரமாக..
நோட்டு புத்தகங்களில் இருந்த பேப்பர்கள் சிருவர்களால் கிழிக்க பட்டு கப்பல் அல்லது கத்திகப்பல் தயாரிக்கபடுகிறது..
அதுவரை இருக்கமாய் இருந்த பூமி கொஞ்சம் தளர்ந்து மண்ணை பறக்க விடுகிறது..
பச்சைகொடியை மரங்கள் இலைகளால் அசைக்க..தென்றல் காற்று மனிதர்களை தொட்டு மனிதன் நனையபோவதை பறைசாற்றி, கார்மேகத்தை அடைந்தவுடன் இடி சப்தங்கள் முழங்க... மின்னல்கள் அலங்கார விளக்குகளாய் ஒளிர ...
அன்னை பூமியை தொட வருகிறது மழை.. மண்வாசனையுடன்.
ஆனந்த வெள்ளம் தெருவில்..மகிழ்ச்சி வெள்ளம் நம் மனதில்..
அனைத்து ஜீவராசிகளுக்கும் வசந்த காலத்தை பரிசாக கொடுக்கிறது அளவான மழை.
இந்த இயற்கையோடு இணைந்த இன்னிசை மழையை பற்றிய பாடல்கள் தொகுப்புதான் இந்த பதிவு.
மழைக்கு ஏங்காதவர்களே இல்லை..தலைவரின் இன்னிசைக்கு மயங்காதவர்களும் இல்லை.
தலைவரே மழைக்கு மயங்கி அவரது இன்னிசை மழையை கொடுத்த பாடல்கள் ஏராளம் ..அதில் இங்கே உங்கள் பாரவைக்கு பத்து பாடல்கள்.
இந்த தொகுப்பை படமாகவும் பார்க்கலாம் பாடலாகவும் கேட்கலாம்.PLAYபட்டனை அழுத்தியவுடன் VIDEO என்ற வாக்கியம் படத்துண்டின் மேல் வரும். அதன்மேல் அழுத்தினால் படம் தோன்றும்
தலைவர் இன்னிசையில் மழை பாடல்களின்
DOWNLOAD LINK
\\தலைவரே மழைக்கு மயங்கி அவரது இன்னிசை மழையை கொடுத்த பாடல்கள் ஏராளம் ..அதில் இங்கே உங்கள் பாரவைக்கு பத்து பாடல்கள்.\\
ReplyDeleteகலக்கிட்டிங்க தல...இந்த பதிவில் பாடல்களுடன் உங்க வரிகளும் தூள் ;))
வருக ..கோபி நாத்
ReplyDelete