காலத்தை பின்னோக்கி செலுத்தும் சக்தி நம் மனதிற்கு பிடித்த சினிமா பாடல்களுக்கு மட்டுமே உண்டு .கொஞ்சம் யோசித்து பாருங்களேன் ...சினிமா பாடல் இல்லை என்றால் நாம் நம் மலறும் நினைவுகளை எப்படி நம் நினைவுக்கு வரவைக்க முடியும்...
சுமார் 35ஆண்டு காலமாக இசைக்கே இசை கற்று கொடுத்து இசையை வாழ்க்கையாக மாற்றிகொண்டவர் நம் தலைவர் இளையராஜா .அவர் நமக்கு இசையை மட்டும் கொடுக்க வில்லை ...பாடல்கள் மூலம் இறந்த காலத்தையும் கொடுத்திருக்கிறார்...அவருடைய ஒவ்வொரு பாடலும் உலகமெங்கிலும் உள்ள கோடான கோடி மக்களின் நினைவுகளை சுமந்து கொண்டு விண்ணில் உலவிகொண்டு இருக்கின்றன ..
ஒரு பாட்டை கேட்டாலே அந்த பாடலை முதன் முதல் கேட்ட ஆண்டு ...இருந்த ஊர் ..அப்போதைய வயது ,,,அப்போதைய நண்பர்கள் .....80 காசுக்கு அந்த படத்தை பார்த்த அனுபவம்....என்று நமக்கு அனைத்தையும் திரும்ப கொடுத்த அந்த கால திரைப்படங்களின் title பாடல்களை இங்கே ஒருங்கிணைத்து கொடுத்திருக்கிறேன்...
இந்த பாடல்கள் தலைவரின் பொற்காலமான 80 களில் வெளிவந்த படத்தின் தலைப்பு பாடல்கள் ...இந்த பாடல்களில் நம் இசைஞானியின் பெயர் வரும்போது விசில் சத்தம் காதை கிழித்த அனுபவம் ஏராளம் உண்டு ..
இந்த பாடல்களை கேட்க்கும் போது நிச்சயம் நீங்கள் 80களுக்கு பறப்பீர்கள்
நான் ஏற்கனவே சென்று விட்டேன்... மலறும் நினைவுகளுக்காக
...
...
(இங்கே பாடலை பார்ப்பதில் தடங்கல் ஏற்பட்டால் கீழே உள்ள பாடல் வரிசையில் அந்த பாடலின் மேல் செய்தால் பாடலை பிரச்சினை ஏதும் இன்றி youtube இணையதளத்திலேயே கண்டு மகிழலாம்)
மேலே உள்ள படங்களின் வரிசை
1.அன்னக்கிளி
2.உனக்காகவே வாழ்கிறேன்
3.16 வயதினிலே
4.முல்லும் மலரும்
5.உதிரி பூக்கள்
6.மனதில் உறுதி வேண்டும்
7.முதல் மரியாதை
8.முந்தானை முடிச்சு
9.அறுவடை நாள்
10.தாலாட்டு பாடவா
11. நண்டு
12.மலையூர் மம்பட்டியான்
13.செண்பகமே செண்பகமே
14.புன்னகை மன்னன்
15. நான் சிகப்பு மனிதன்
16.கரகாட்டகாரன்
17.புது புது அர்த்தங்கள்
18.குணா
19.தளபதி
20.காதலுக்கு மரியாதை
ரசிகன் தல நீங்க ;))) கலக்குறிங்க ;)
ReplyDeleteநான் கலக்க வில்லை... நாம் கலக்குகிறோம் கோபிநாத் ...
ReplyDelete