(தலைவர் இசைஞானி இளையராஜா அவர்கள் படத்தில் தோன்றும் பாடல் காட்சிகளை நண்பர் கோபிநாத் அவர்கள் அருமையான வர்ணனையோடு பகிர்ந்து கொண்டார் அவருடைய gopinath பதிவில் ....
மிஞ்சியது இங்கே )
"போடி நாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றோம்.அங்கே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னை பார்க்க அதிகமான கூட்டம் வந்திருந்தது.கூட்டம் கலைய வேண்டும் என்றால நான் வந்து முகத்தை காட்டவேண்டும் என்றனர்.
நானும் வந்து நின்றேன் ....ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்து கொண்டிருந்தனர்.என்னங்க இன்னமும் இளையராஜாவை காணோம் என்று கேட்டார் கூட்டத்தினில் ஒருவர்.
என்னருகில் இருந்தவர் இவர்தான் இளையராஜா என்று அறிமுக படுத்தினாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.
அவ்ர்கள் என் பெயருக்கேற்ற கம்பீரமான உருவத்தை எதிர்பார்த்தனர்..சின்ன பையன் போல இருந்த என்னை அவர்களால் முடியவில்லை" -என்று இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றில் கூறி இருக்கிறார்.
அவர் தன் முகத்தை திரையில் தன் ரசிகர்களுக்கு காட்டியது நிழல்கள் படத்தில்.. அந்த இளைஞனை அந்த படத்தில் யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு கம்பீரமான தோற்றத்துடன் வந்து அந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றினார் இளையராஜா
ஒவ்வோரு படத்திலும் இந்த இளைஞன் வளருவதை கண்ணார பார்த்து ரசிக்க முடிகிறது..திரையுலகில் அவரை "சாமி" என்றே கௌரவமாகவும் அவரை நெருங்கிய நட்சத்திரங்கள் "சாமியார்" என்று செல்லமாகவும் அழைப்பதை இங்கே காண்முடிகிறது..அந்த தெய்வத்தின் தரிசங்களை இங்கே காணகொடுக்கபட்டுள்ளன
வளர்ந்து வரும் இந்த இந்த இளைஞனை கண்டு மகிழுங்கள்
1980 இல் வெளிவந்த நிழல்கள் படத்தில் தலைவர்
1986இல் வெளிவந்த சாதனை படத்தில் தலைவர்
1986 இல் வெளிவந்த தர்மபத்தினி படத்தில் தலைவர்
1988இல் வெளிவந்த செண்பகமே செண்பகமே படத்தில் தலைவர்
1989இல் வெளிவந்த கரகாட்டகாரனில் தலைவர்
1989இல் வெளிவந்த புது புது அர்த்தங்கள் படத்தில் தலைவர்
\
1991 இல் வெளிவந்த கும்பக்கரை தங்கையாவில் தலைவர்
சுமார் 20 வருடங்களுக்கு பின்பு (2009இல்) அழகர் மலை படத்தில் தலைவர்
68 வயது நிரம்ப போகும் இந்த இளைஞன் இன்று மீண்டும் தன் இசை வெறியை இங்கே சுனாமி போல கிளப்பினால் சினிமா வட்டாரத்தில் ஒரு இசை அமைப்பாளரும் தப்பமாட்டான் என்பது என் தாழ்மையான கருத்து...
அந்த நாள் நாம் கனவு காணும் தொலைவில் இல்லை..
கைதொடும் தொலைவில் தான் இருக்கிறது...
மீண்டும் சந்திப்போம்....
\\68 வயது நிரம்ப போகும் இந்த இளைஞன் இன்று மீண்டும் தன் இசை வெறியை இங்கே சுனாமி போல கிளப்பினால் சினிமா வட்டாரத்தில் ஒரு இசை அமைப்பாளரும் தப்பமாட்டான் என்பது என் தாழ்மையான கருத்து...
ReplyDeleteஅந்த நாள் நாம் கனவு காணும் தொலைவில் இல்லை..
கைதொடும் தொலைவில் தான் இருக்கிறது...\\
வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிக்கிறேன் தல ;)
என்றும் எப்போதும் இசை தெய்வம் இசை தெய்வமே ! ;)
இரவெல்லாம் பாடலை கேட்டு விட்டு காலையில் பேனாவை பிடித்தால் தானாக எழுதி கொள்கிறது "இசைஞானி வாழ்க" என்று.... கோபி நாத்
ReplyDelete