Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, April 2, 2011

அபிராம் -என்கிற இளையராஜாவின் ரசிகன்

                                                            (எல்லா பாடல்களுக்கும் link கொடுக்கபட்டுள்ளது )

ராஜா ரசிகர்களுக்கு வணக்கம்



நினைவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி என்ற பாடல் தலைவர் இசையில்
காக்கை சிறகினிலே படத்தில் வரும் அந்த பாடல் வரிகள் எனக்கு பொருந்தும்.
அந்த அளவிற்கு நான் கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக ராஜாவின் இசை
அமுதத்தை குடித்து வருகிறேன்.


அது 1985ம் ஆண்டு என் தந்தை ஒரு சிறிய கை ரேடியொ ஒன்றை வாங்கி வருகிறார்.
என்னை அறியாமல் அந்த ரேடியொவொடு இருந்த நாட்கள் அவை காலை எழுந்தது முதல்
இரவு வரை அந்த ரேடியொ எங்கு சென்றாலும் என்னுடன் தான் இருக்கும்
அப்பொழுது சேட்டிலைட் சேனல்கள் அவ்வளவு இல்லாத காலம். ரேடியொவில் இலங்கை
வானொலியில்தான் அதிக தலைவரின் பாடல்களை கேட்பதுன்டு.




அந்த நேரத்தில் வந்துஇருந்த உதயகீதம் படத்தில் இடம்பெற்ற மானே தேனே பாடல் அடிக்கடி இலங்கை
வானொலியில் ஒளிபரப்பி கொண்டு இருப்பார்கள் தலைவர் இசையில் அடிக்கடி
கேட்டு ரசித்த பாடல் அது அவ்வளவு அருமையான பாடல் உல்லாச பயணம்
செல்பவர்களுக்கு இன்றும் உகந்த பாடல் அது இப்பொழுது கேட்டாலும் 25
வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லும்.





அந்த காலகட்டத்தில் அதாவது 1985முதல் 1990 வரை தூர்தர்ஷன் மிக சிறந்த
பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அப்பொழுது வெள்ளிக்கிழமைகளில் ஒலியும்
ஒளியும் என்ற நிகழ்ச்சி மிக மிக பிரபலம். யார் என்ன வேலை இருந்தாலும்
சிறியவர் முதல் பெரியவ்ர் வரை அனைவரும் ஆஜர் ஆகிவிடுவார்கள். இந்த
நிகழ்ச்சியில் நான் ரசித்து பார்த்த பாடல் வருசம்16 படத்தில் வரும் பூ
பூக்கும் மாசம் பாடல் மிக மிக அருமையான இப்பொழுது கேட்டாலும் மெய்மறக்க
கூடிய பாடல் அது.  





          



சமீபத்தில் வரும் புதிய பாடல்களை கேட்பது இல்லை அவ்வளவு காண கொடுரமான
பாடல்கள் தான் வருகின்றன‌.
ஆனால் இருபது வருடங்களுக்கு முன் தலைவ்ர் போட்ட கல்யாண மாலை பாடல்
அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
இப்பொழுது கேட்டாலும் மிக இனிமையான பாடல் அது.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் கருத்தரங்கில் தலைவர் பேசியது
"நான் எப்பொழுதும் எல்லாபாடல்களயும் ரசித்துதான் இசையமைக்கிறேன். அப்படி
இல்லை என்றால் மாலையில் யாரொ மனதோடு பேச பாடல் எல்லாம் உருவாக்கி இருக்க
முடியுமா" என்றார்.சுவர்ணலதா குரலும் தலைவரின் இசையும் அவ்வளவு அருமை .அந்த
பாடலை பாடிய சுவர்ணலதா நம்மில் இல்லாதது மிக பெரும் குறை.






நம் மனதை எப்பொழுதும் பரவச நிலையில் வைத்திருப்பது தலைவர்தான்.எவ்வளவு மன
வேதனை இருந்தாலும் துன்பங்களை அகற்றுகிற சக்தி தலைவர் இசை மட்டும்தான்.
அந்த வரிசையில் தலைவரின் திருவாசகம் ஆல்பத்தில்
இடம்பெற்ற பூவெறு கோனும் என்ற பாடல் பற்றி சொல்ல வார்த்தைளே இல்லை.
தலைவரும் பவதாரினியும் இணைந்து அருமையாக பாடி இருப்பார்கள் தெய்வீக குரல்
போல இருக்கும்








பாடல்களில் தலைவர் எவ்வளவு வல்லவரோ பின்னணி இசையில் தலைவரை அடித்து கொள்ள
ஆள் இல்லை இவர் இசை அமைத்த நூறாவது நாள் ,24மணி
நேரம்,உருவம்,கழுகு,பூவிழி வாசழிலே,சிகப்புரோஜாக்கள்,போன்ற த்ரில்லிங்
படங்களிலும் வருசம்16,குணா,தளபதி,கோபுரவாசலிலே,சேது,காசி,புதுபுதுஅர்த்தங்கள்,
படங்கள் பிரமாதபடுத்தி இருப்பார் .



          


இதில் கோபுரவாசலிலே படத்தில் வரும் டைட்டில்
இசை என் மனதை என்றும் கவர்ந்து நிற்க்கும் இசை அதேபோல் பூவிழி வாசழிலே
படத்தில் வரும் ஒம் ஒம் ஹரி ஒம் என்று வரும் இசையும் என் மனதை கொள்ளை
கொண்டவை.




தலைவர் இசை அமைத்து நிறைய பாடல் ஹிட் ஆகி இருக்கின்றன .இதில் நல்ல சில
பாடல்கள் படத்தில் இடம் பெறாதது
மிகப்பெறும் வேதனைக்கு உரியது குறிப்பாக அமைதிப்படை படத்தில் இடம்பெற்ற
சொல்லிவிடு வெள்ளி நிலவே,மற்றும் மைக்கேல்மதனகாமராஜன் படத்தில் இடம்பெற்ற
ஆடிப்பட்டம் தேடி ஜன்னல் என்ற பாடல்கள் தான் அவை இந்த இரண்டு பாடல்களும்
நான் எப்பொழுது கேட்டாலும் என்னையே நான் மறந்துவிடும் பாடல்கள் இவை..




தலைவர் இசையில் நிறைய பின்னணி பாடகர்கள் பாடி இருந்தாலும் அருண்மொழி
குரலுக்கு என்றும் தனி மவுசுதான் அவர் பாடிய அம்மன் கோவில் எல்லாமே ,
மற்றும் சந்திரலேகா படத்தில் வரும் அரும்பும் தளிரே பாடல் என் மனதை
கொள்ளை கொண்ட பாடல்கள் இவை.


        

என்னதான் நாகரீகம் என்ற பெயரில் தமிழ் சினிமா மோசமான பாடல்களை எடுத்து
கொண்டு இருந்தாலும் பண்பலை வானொலிகள் பகல் முழுவதும் கூத்தடித்துவிட்டு
இருந்தாலும் இரவு நேரத்தில் நம் தலைவரின் பாடல்கள் தான் ஓளிபரப்பி
வருகின்றன. இரவு நேரத்தில் நம் தலைவர் பாடல் கேட்பது ஒரு தனி
சுகம்..கஷ்டப்படும் எல்லோரும் இரவு
நேரத்தில் தலைவரின் பாடலை தலைவரின் குரலில் கேட்டு பார்த்தால் மயிலிரறகை
வைத்து வருடுவது போல் இருக்கும். அப்படி ஒரு சக்தி தலைவர் பாடலுக்கு.அந்த
வரிசையில் என் உயிர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற பூம்பாரையில் பொட்டு
வைத்த பாடல் மிக மிக பிடித்த பாடல்.

       


நிறைய பாடல்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம். எப்படி வானத்தில் இருக்கும்
நட்சத்திரம் பூமியில் இருக்கும் மண்களை என்ன முடியாதோ அது போல் தலைவரின்
பாடல்களை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுவிட முடியாது அது போல தலைவர் ஒரு
இசை அமுத சுரபி.


என்னதான் தலைவரை வைத்து ஒருகாலத்தில் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்கள்
காலத்தின் போக்கால் நவீன இசைக்கு மாறி இருந்தாலும் இது வரைக்கும் தலைவரை
ஒருபடத்திற்கும் மாற்றாத ஃபாசில் ,பாலுமகேந்திரா,ராஜ்கிரன்,ஜிஎம் குமார்,
போன்றோர்க்கும் அவ்வப்போதூ வாய்ப்பு கொடுக்கும்
கமலகாசன்;பாலா,மிஷ்கின்,போன்றோர்க்கும் என் நன்றி.







தலைவர் இன்னும் பல இசை சாதனை புரிய வேண்டும் அதற்க்கு ரசிகர்களாகிய நாம் ஊக்குவிப்போம்.
 மேலும் தலைவர் விரும்பி கும்பிடும் திருவண்ணாமலை சிவனும் தாய்
மூகாம்பிகையும் ரமண மஹரிசியும் அருள் தந்து துணை நிற்பார்கள் என
நம்புவோம்.

                                                                        நன்றி




அ.அபிராம்
21/245 வள்ளல் சீதக்காதி சாலை
கீழக்கரை
ராமனாதபுரம் மாவட்டம்
செல்.9786545502
Mail-         ramram1765@gmail.com

8 comments:

  1. அருமையான பகிர்வு ;)

    நண்பர் அபிராம்க்கு நன்றிகள் ;)

    ReplyDelete
  2. welldone abi....mostly i forgot everything about our childhood. Now i remember everything...u made me recollected.thanks. u and the red radio...good. keep it up.

    ReplyDelete
  3. Very good abi, I am also like to your good performance raja rasigan collection of the songs. I remember thanks everything keep it ...

    My email id : ayirus2k@gmail.com
    by R.S.NARAYANAN

    ReplyDelete
  4. thalaivarukku vaippu kodukka ivargal yar ,

    ReplyDelete
  5. udayakumar- aranthangiMarch 1, 2013 at 1:14 AM

    solla varthaihal illai .... ennayum ariyamal kangalil kanneer...

    eppadi paaraata

    endendrum vaalha

    ReplyDelete
  6. udayakumar- aranthangiMarch 1, 2013 at 1:15 AM

    nnandri endra varthaiyil mudikkamdyathu abi....

    ReplyDelete
  7. ராஜா ரசிகரே

    நானும் உங்களைப் போல் இசைஞானியின் ரசிகனே! இசை ராட்சசன் என்ற பெயரில் ராஜாவைப் பற்றி பதிவுகள் கொடுத்துக் கொண்டு வருகிறேன் . முடிந்தால் எல்லோருக்கும் பகிருங்கள் . உங்கள் பதிவும் அருமை.
    http://puthukaatru.blogspot.in/2014/10/i.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...