Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, January 20, 2011

HISTORY CREATED BY ILAYARAJA-S.SARAVANAN

இளையராஜா..
இந்த தவப்புதல்வனின் தீவிர ரசிகனில் நானும் ஒருவன்.



1960 லிருந்து 1980 வரை பிறந்தவர்கள் அனைவருக்கும் பழைய நினைவுகளை மீட்டு தருவது நம் தலைவர் இசைஞானியோட இசைதான்.வானொலிகளிலும் திருவிழாக்களிலும் இடைவிடாமல் ஒலித்து கொண்டிருந்த அவர் பாடல்கள்.. ந‌ம் வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எனக்கோ 
தலைவரின் பாடல்கள் என்  நரம்புகளில் ரத்தம் போல கலந்திருக்கிறது.


மனிதனின் எல்லா சுழ்னிலைக்கும் இசை அமைப்பது என்பது சாதாரணமல்ல.ஆனால் தலைவர் அதை சாதித்திருக்கிறார்.
அப்படி இசை அமைத்தாலும் அது அனைத்து தரப்பினரையும் சென்று சேருமா என்பது சாதாரண விஷயமல்ல ..ஆனால் தலைவர் இதில் ஜெயித்திருக்கிறார்.

தலைவர் நடத்திய மாயாஜாலங்கள்.

கர்நாடக இசைக்கு பாமரர் செவி சாய்க்க வேண்டுமென்றால் ரிதம் ரொம்ப முக்கியம். தாளக்கட்டுக்களை சரியாக அமைத்து, வார்த்தைகளையும் சரியாக கோர்த்தால் மட்டுமே அது பாமர மக்களின் தூக்கத்தை கலைக்கும்.


சிந்து பைரவி படத்தின் பாடறியேன் படிப்பறியேன் பாடல் 100 சதவித கர்நாடக சங்கீத பாடல். இதை சாதாரண மனிதனையும் சென்று சேர வைத்து, தெள்ள தெளிவாக பாடவும் வைத்தது இசைஞானி மட்டுமே.








கர்நாடக சங்கீதத்தை எப்படி பாமரர் வரை கொண்டு செல்வது என்பதற்கு இளையராஜாவே சிறந்த உதாரணம். நிறைய சொல்லலாம். நல்லதொரு கர்நாடக ராக அமைப்பில் உருவான "சொர்க்கமே என்றாலும்" பாடலை "மாடு கண்ணு மேய்ச்சு" என பட்டிதொட்டியெங்கும் இசைக்கச் செய்தவர்.











இது மட்டுமல்ல‌
உன்னால் முடியும் தம்பியின் புன்சை உண்டு நன்சை உண்டு பாடல்,தேவர் மகனின் இஞ்சி இடுப்பழகி பாடல் என் நீண்டு கொண்டே போகிறது கர்நாடக சங்கீத பாடல்கள்
.









பாடல்கள் ஆரம்பிக்கும்போது ஒரு இசைக்கருவியுடனோ அல்லது மெல்லிய குரலுடனோ ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது.தலைவர் அதை புரட்டிபோட்டார்.
தனிக்காட்டு ராஜாவில் ராசாவே உன்ன நான் எண்ணிதான் பாடல் ஆரம்பிக்கும்போதே high pitchஇல் குரலுடன் எந்த இசைக்கருவியின் துணையில்லாமல் ஆரம்பிக்கும்









Instrumental musicஎன்பதை நமக்கு அறிமுகப்படுத்தியவர் நம் இசைராஜா இளையராஜா. இசையில் புல்லாங்குழலை அதிகமாக உபயோகித்தவரும் நம் ராஜாவே. புல்லாங்குழலை வைத்து ஒரு ஆட்ட பாடலை உருவாக்கி எல்லோரையும் ஆட்டம் போட வைத்த கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமா பாடல் சினிமா உலகின் ஒரு புதிய முயற்சி.





தமிழ் திரையுலகத்தில் பின்னனி இசையும்..! படமும்..! என்ற ஒரு trendஐ உருவாக்கியவரே மேஸ்ட்ரோ தான். ஒரு பின்னனி இசையை கேட்டாலே படத்தின் பெயரை மட்டுமல்ல ...காட்சிவரை சொல்கிற அளவுக்கு நம்மை சினிமாவுடன் இணைத்தவர் இளையராஜா. 
          




Magazine எனப்படும் வார, மாத புத்தகங்களின் அட்டை படத்தில் இவருடைய புகைப்படமே முதன் முதலாக வெளியிடப்பட்டது என்பது வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.





Soft instrumentals என்ப்படும் வயலின் ,வீணை ,புல்லாங்குழல்,கிதார் போன்ற இசைக்கருவிகளை சேர்க்காமல் வெறும் Drums ,tribles ஐ வைத்தே ஒரு மெகா ஹிட் பாடலை கொடுத்துள்ளார் தலைவர் இளையராஜா. அதுவும் அவரை பற்றிய பாடலே அது. அக்னி நட்சத்திரம் படத்தின் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல்தான் அந்த பாடல்








Aroganam என்ற இசைக்கருவியை மட்டுமே முதன்மையாக கொண்டு பாட்டமைத்த பாடல சிந்து பைரவியின் கலைவாணியே என்ற பாடல் அற்புதம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்...






இதெல்லாம் கூட தலைவர் வெகு சாதாரணமாக நடத்திய இசை சங்கமங்கள். 900 படங்களுக்கு ...சுமார் 5000  நிகராக பாடல்களை கொடுத்து சூரியனை போல் ஜொலித்து நிற்கிற நம் இசைஞானி இளையராஜா இசை அமைத்த இந்த பாடலை கேளுங்கள்..பாடும் நிலா பாலுவின் குரலுடன் இணையும் மற்ற  இசை கருவிகளின் ஆதிக்கத்தை பாருங்கள்...மனிதன் குரலை வைத்து அவர் செய்கிற அட்டகாசங்களை பாருங்கள்...தேவர் மகனில் வானம் தொட்டு போனா..







இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற பெருமையே போதும்...வேறென்ன சொல்ல..




அன்புடன்...
S.Saravanan
Department Of Automobile Engineering
Coordinator-Biofuel Research Cell
Sri Venkateswara College Of Engineering
Sriperumpudur.602105.Chennai.Tamilnadu.
INDIA. SOUTH ASIA



                                    (Thanks to RAJARASIGAN)

2 comments:

  1. தல

    மிக அருமையான தொகுப்பு...இசை தெய்வத்தின் இந்த பொக்கிஷங்களை மீண்டும் வீடியோவோட கேட்க தந்தமைக்கு மிக்க நன்றி ;)

    வார மாத இதழ்களுக்கு மட்டும் இல்லை...முதல் முதலில் ஒரு இசைமைப்பாளாருக்கு என்று தனியாக கட்வுட் எல்லாம் வைத்தது இசை தெய்வத்துக்கு தான் ;)

    \\1960 லிருந்து 1980 வரை பிறந்தவர்கள் அனைவருக்கும் பழைய நினைவுகளை மீட்டு தருவது நம் தலைவர் இசைஞானியோட இசைதான்.\\

    தல - இசை தெய்வத்தின் இசை எந்த வருட கணக்குகளுக்கும் அப்பாற்ப்பட்டது என்பது என்னோட தாழ்மையான எண்ணம் ;)

    ReplyDelete
  2. தலைமுரைகலை தான்டி சாதித்தவர் தலைவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதெ சமயம் இந்த காலத்தில் பிரந்தவர்கல் கடந்த காலத்தின் சுகமான நினைவுகலை திரும்பி பார்க்கும் போது அந்த நினைவுகலில் தலைவரின் ஆதிக்கம் நிரய இருக்கும். இது ஒரு பெரிய சாதனை அல்லவா? வேரு காலத்தில் பிரந்தவர்கல் இந்த சுகத்தை அடைய முடியாது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...