பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது .கடந்த இரு வாரகாலமாக என்னுடைய வீட்டில் இன்டெர்னெட் வேலை செய்ய வில்லை.அதனால் தொடர்ந்து நம் பதிவுகள வெளியிட முடியவில்லை.பொங்கல் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கிற இந்த வேளையில் தலைவரின் பொங்கல் பாட்டுக்களை கேட்பது சர்க்கரை பொங்கலை விட இனிப்பாக இருக்கிறது.
அத்தனை அருமையான பாடல்கள் நம் கைவசம் இருக்கிறது.இதில் முதன்மையானது மகா நதியில் வரும் "தை பொங்கலும் வந்தது " பாடல்...
இந்த பாடல் சந்தானபாரதியும் கமலஹாசனும் பொங்கல் பாடல் என்று மட்டும் தான் சொல்லியிருப்பார்கள் ...தலைவருக்கு உடனே ''பொங்கலோ பொங்கல்'' என்ற பொங்கல் கூவல் தான் நினைவுக்கு வந்திருக்கும்.
அதையே வைத்து ஆரம்பித்து கிராமிய இசைக்கருவிகளுடன் அழகான..புத்துணர்ச்சியான பாடல் ராஜாவின் கை நுனியில் இருந்து பிறந்திருக்கும். இந்த பாடல் இந்த காலத்துக்கும் மட்டுமல்ல ...இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் சேர்த்துதான் இசை அமைத்திருக்கிறார் நம் தலைவர்.
வருடம் முழுதும் வயக்காட்டில் உழைத்த தமிழன் தனக்கு சோறு கொடுத்த அந்த மண்ணுக்கும் காசு கொடுத்த அந்த நெல்லுக்கும் நன்றி சொல்லும் நாளாய் இந்த பொங்கல் ..
..
அன்னைக்கு அடுத்ததாக பால் கொடுக்கும் மாட்டுக்கு நன்றி சொல்ல மாட்டுபொங்கல்....
உழைத்ததை உலகம் உண்ண கொடுத்த உழவனுக்கு உழவர் திரு நாள்....
அனு அனுவாய் ரசித்து வாழ்வதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான்... நாமும் அந்த வம்சாவழி வந்தவர்கள் தானே...அடிச்சு தூள் கிளப்புவோம் இந்த பொங்கல் திருநாட்களை...(அர்த்தங்களை புரிந்துகொண்டு)
பொங்கலோ பொங்கல்...
No comments:
Post a Comment