ஆமாங்க இதுதான் நான் கண்ட காதல்.. கடந்த வெள்ளிகிழமை அனறு மஹாபலிபுரம் சென்றேன்.இயற்கையை ரசிக்க அடிக்கடி அங்கே செல்வது வழக்கம்.அய்யோ..! அய்யோ..!! என்று குமுறுகிற அளவுக்கு இருந்தது நான் கண்ட காட்சிகள்.ஏரியா விட்டு ஏரியா சென்று சைட் அடிச்சாலே கைய கால பேர்த்தெடுக்கும் தமிழ் நாடு காணாமல் போனது..கன்னியமான காதல் இங்கே காமமாய் போனது.. கேலி கூத்தாய் ஆனது ..
நான் பார்த்த காதலர்களுக்கு சுமார் 15 வயதுக்கு மேல் இருக்காது .எல்லாருமே பள்ளிக்கு செல்லும் bagகளுடன் இருந்தார்கள்.
இங்கே பெரியவர்கள் முதலிரவில் நடத்தும் பள்ளி பாடங்களை நடு தெருவில் நடத்தி கொண்டிருந்தார்கள்.கோபமும் பரிதாபமும் சேர்ந்து வந்தது எனக்கு. பெண்களுக்கு கட்டுபாடுடன் கூடிய சுதந்திரத்தை கொடுத்திருந்தால் இந்த மாதிரியான தவறுகளை தடுத்திருக்கலாம்.
சரி இது போகட்டும் மெச்சூரிட்டியான ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் பரஸ்பர காதலை பற்றி பார்ப்போம்.
வந்தவுடன் சுகத்தை தருவது காதல் மட்டுமே..அதனால் தான் அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது
மனதாலும் உடலாலும் கவரப்பட்டு புரிதலுடன் உருவாகும் காதலில் அனபு மட்டுமே மூலதனமாக இருக்கும்.
அந்த அன்பு ஒருத்தருக்காக ஒருத்தரை வாழவும் வைக்கும்.. சாகவும் வைக்கும்...
ஒரு மனிதனின் நல்ல வாழ்க்கைக்கு காதல் வழிவகுத்தால் அந்த காதலை சந்தோஷமாகவே வரவேற்கவேண்டும்.
அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை அனுபவிக்க வாய்பளிக்கும் அதே காதல் ஒரு நிலையில் மனிதனை வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு காலெடுத்து வைக்க முடயாத படி செய்து விடுகிறது.
மனது நிறைந்த காதலன் அல்லது காதலி சந்தர்ப்ப சூழ்னிலையால் தன்னுடன் பேச மறுத்தாலோ ..பழக வெறுத்தாலோ வரும் சோகம் கடலின் அளவை மிஞ்சும்.
அந்த சோகம் இருவருக்குமே பொதுவானது.ஒருத்தருக்கு அப்போதெ ...மற்றவருக்கு காலம் கடந்து..
இந்த வீடியோவை போல..
காதலுக்கு கண்ணிருக்கிறதோ இல்லையோ ..கட்டாயம் கற்பு இருக்கவேண்டும்.
காதல் என்ற பேரில் நடக்கின்ற அவலங்களை தடுக்க சட்டத்திற்கு மட்டுமே வலிமை உண்டு.
அரசும் அதனை கவனிக்க வேண்டும்.
ஒருத்தனையே நினைத்து ..
அந்த ஒருத்தனையே காதலித்து..
அந்த ஒருவனையே மணந்து..
அனபால் அவனை அணைத்து..
இன்ப துன்பங்களை பகிர்ந்து வாழும் காதலை இனிதாய் வறவேற்ப்போம்..
சுகமாய் அனுபவிப்போம்..
HAPPY VALENTINES DAY
No comments:
Post a Comment