முதல்வர் மகாத்மா என்ற தலைப்பில் ஒரு படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காமராஜர் என்ற படத்தை எடுத்து அவரது பெயருக்கும் புகழுக்கும் கண்ணியத்தை சேர்த்த அ.பாலகிருஷ்ணன் என்பவர்தான் இந்த படத்தையும் இயக்குகிறார். காந்தி இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த படத்தின் கரு.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தை பட்டை தீட்டிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், சமீபத்தில் முக்கியமான சம்பவம் ஒன்றை இணைத்திருக்கிறாராம் முதல்வர் மகாத்மாவில். அது?
புலிகள் தலைவர் பிரபாகரன் காந்தியை சந்தித்து இலங்கை தமிழர்களின் நிலையையும் அவர்களது உரிமையும் குறித்து விவாதிப்பது போல காட்சிகளை அமைத்திருக்கிறார் பாலகிருஷ்ணன். காந்தியாக கனகராஜ் என்பவர் நடித்திருக்கிறார். பிரபாகரனாக ஒரு புதுமுகம் நடித்திருக்கிறாராம். பின்னணி இசைக்காக படத்தை போட்டு பார்த்த இசைஞானி இளையராஜா, பிரமாதம் என்று பாராட்டினாராம்.
பகிர்வுக்கு நன்றி தல ;)
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே..
ReplyDelete