. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, January 5, 2024

 அதிகபட்சமாக ஆசைப்பட்டு குறைந்த பட்சமாவது கிடைக்காதா என்று நாம் ஏங்குவது குழந்தை பருவத்தைதான் ...


என்னதான் நாம் வளர்ந்துவிட்டாலும் ...கிடைத்தால்  வேண்டாம் என்று சொல்ல மனமில்லாததில் தாலாட்டு முதன்மையானது.. 


கேட்போமா ...


தாலாட்டு பாடல் .. 1

Saturday, October 5, 2013

எங்களுக்கு தேவையானது எல்லாம்... எங்க தலைவர் இசை அமைத்தால், அந்த படம் நூறு நாள் ஓடனும்.. பாடல்கள் நூறாண்டு வாழனும்..


இசைஞானி இளையராஜாவிடம் நல்ல பாடலை எதிர்பார்க்கும் டைரக்டர்கள் அந்த பாடலை எப்படி நல்லபடியாக படமாக்குவது என்பதையும் தெரிஞ்சிவச்சிக்கோங்க.

சமீபத்தில் வந்த அழகர்சாமியின் குதிரை, நீ தானே என் பொன்வசந்தம் என பல படங்களை நாங்கள் எதிர்பார்த்து கண்ட ஏமாற்றத்தால் வந்த வெறுப்பு இது.

நீங்கள் எதிர்பார்த்த மெட்டு கிடைக்கிறது.. நீங்கள் எதிர்பார்த்த அதிருகின்ற இசையும் கிடைக்கிறது.அப்புறம் என்ன...

 உங்கள் கற்பனையை பறக்க விடுங்க ..

உங்க சிஷ்யர்களை இறுக்கிபிடிங்க..  உங்க குருக்களோட உதவியை கேட்டு பெறுங்க..

மக்கள் மனம் குளிருகின்றாற் போல படமெடுங்க..

எங்களுக்கு தேவையானது எல்லாம்... எங்க தலைவர் இசை அமைத்தால், அந்த படம் நூறு நாள் ஓடனும்..
பாடல்கள் நூறாண்டு வாழனும்..

அம்புட்டுதானுங்க.

Saturday, June 2, 2012

பாடகர் அருண்மொழி அவர்களுக்கு நன்றி..

 
 
தன் பாடலகளால் உலகத்தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடகர் அருண்மொழி அவர்கள் FACEBOOKஇல் தன்னுடைய FRIENDS listஇல் நம்மை(ராஜாரசிகர்கள்)யும் இணைத்திருக்கிறார் என்பதை பெருமையுடன் சொல்லிகொள்ள ஆசைப்படுகிறேன்.....

புல்லாங்குழல் இசைக்கலைஞனான அண்ணன் அருண்மொழி அவர்களுக்கு... ராஜாரசிகன் சார்பாக ,இசைஞானியின் இந்த புல்லாங்குழல் பின்னனி இசையின் மூலம் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.




உங்கள் பாடல்களை போல.. உங்களின் புல்லாங்குழல் இசையும் எங்களுக்கு உயிர் போன்றது..
Related Posts Plugin for WordPress, Blogger...