
அழகர்சாமியின் குதிரையில் இளையராஜா
கௌதம் மேனன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இசைஞானி இசை அமைக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
படத்தின் இயக்குனர் வெண்ணிலா கபடிகுழு வை இயக்கிய சுசீந்தரன் தான்.இவர் த்ற்பொழுது கார்த்தி நடிக்கும் நான் மகான் அல்ல படத்தை இயக்கிகொண்டிருக்கிறார்.
இளையராஜா- கௌதம் மேனன் -சுசீந்தரன் இணையும்முதல் படம் இது. படத்தின் கதை கிராமத்தை சுற்றி வருவதால் இசைக்கு முக்கிய துவம் படத்தில் இருக்கும் என் கருதப்படுகிறது.கௌதம் மேனனும் தலைவரின் தீவிர ரசிகர் என்பதால் அற்புதமான பாடல்களை கொடுத்து ரசிகனை குதூகலமாக்குவார் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.
பாஸ்கர்சக்தி எழுதிய நாவலைத்தான் அழகர்சாமியின் குதிரை என படமாக எடுக்கிறார்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகியாக நடித்த சரண்யா மோகன்தான் இதிலும் நாயகி. அந்தப் படத்தில் கபடி விளையாட்டி வீரராக நடித்த இளைஞரை முதல் முறையாக ஹீரோவாக்கியுள்ளார் சுசீந்திரன்.
நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.
அப்புறம் என்ன நாமெல்லாம் திருவிழாவுக்கு தயாராகவேண்டியது தான்...
No comments:
Post a Comment