ஒரு கால கட்டத்தில் flash back கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது. ஆழமான காதல் கதையை சொல்ல இந்த flash backகதை அமைப்பு தேவைப்பட்டது .கதையில் வரும் கதாநாயகனோ கதாநாயகியோ தன்னுடைய கடந்த காலத்தை எண்ணி ஏங்குவதை போல கதை அமைக்கபட்டிருக்கும்.சந்தோஷமான இளமை கால பருவம் என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷம். அதையும் காதலுடன் சேர்த்து அனுபவித்தவனுக்கு எத்தனை ஆண்டுகாலங்கள் ஆனாலும் அந்த நினைவுகளிலிருந்து வெளியே வரவே முடியாது. சாகப்போகும்போது கூட அவன் நினைத்து பார்ப்பதும் ... நினைக்க ஆசைபடுவதும் இந்த இளமைக்கால நினைவுகளையே.
இந்த வரிசையில்
16வயதினிலே ,முதல் மரியாதை ,அம்மன் கோவில் கிழக்காலே,வைதேகி காத்திருந்தாள்,...என வெற்றிப்படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.அதில் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த வருஷம் 16 .இந்த படம் வெளிவந்த போதே அடத்தடுத்த இரண்டு காட்சிகளையும் பார்த்து வியந்து போனேன்.இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் உறவுகளால் பின்னபட்டிருக்கும்.எல்லோருக்கும் இயல்பாக வாழ மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும்.அப்படி கதையுடன் ஒன்றி வாழ்ந்தவர்களுக்கு படபிடிப்பின் போது சந்தோஷமான நிகழ்வுகள்... நினைவுகள்... ஏராளமாக கிடைத்திருக்கும்.இந்த படத்தில் நடித்தவர்களில் சில பேர் இப்போது இல்லை.ஆனால் மறைந்தவர்களுக்கும் இருக்கிறவர்களுக்கும் இந்த படம் ஒரு தங்க பதக்கமாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமேஇல்லை.
இந்த படத்தில் தலைவர் தன் இசையால் படத்தையும் மக்களையும் fevicol போல ஒட்ட வைத்திருப்பார். அழுத்தமான குடும்ப படம் என்பதால் திரையில் எப்போது நான்கு ஐந்து பேர் இருந்து கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கு இடையே நடைபெறும் பாச போராட்டங்களுக்காக நடிப்பவர்கள் அழுதாலும், ரசிகர்களையும் அழவைத்தது தலைவரின் இசை மட்டுமே.
கார்த்திக் குஷ்புவின் காதலுக்கு தூரத்தில் கேட்பது போல் பின்னனி இசை அமைதிருப்பது சிறப்பு.
படம் ஒரு தங்க தேர் என்றால் தலைவரின் இசைதான் தேர் நகரும் சக்கரம் ஆகும்.
இந்த படத்தில் முக்கிமான பின்னனி இசையை பகுதி 11 கவும், கார்த்திக் குஷ்பு இவர்களின் காதல் காட்சிகளின் பின்னனி இசையை பகுதி 1 கவும் வழங்கியுள்ளேன்....
பாருங்கள் கண்டிப்பாக பரவசப்படுவீர்கள்
கார்த்திக் குஷ்பு காதல் காட்சிக்கான பின்னனி இசை..
படத்தின் கான பின்னனி இசை
songs
Varusam 16 - Gangai karai.mp3
Varusam 16 - Hey ayya samy.mp3
Varusam 16 - Karaiyathamanam.mp3
Varusam 16 - Palamuthir Chozhaiyl.mp3
Varusam 16 - Poopookum vaasam.mp3
படத்தை வெற்றிகரமாக முடித்து தருவது மட்டும் இசை அமைப்பாளரின் கடமை அல்ல ...ரசிகர்களை திரும்ப படத்துக்கு வர வைப்பதும் இசை அமைப்பாளரின் பொறுப்புதான்...இந்த படத்தை கடந்த 25 ஆண்டு காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து வருகிறேன்.
சளிக்காமல்..........
இதற்கு காரணம் என் தலைவர் இளையராஜா...
அன்புள்ள திரு.சௌந்தர், மிக அருமையான,இனிமையான ஒரு இணையத்தளத்தை அளித்ததற்கு நன்றி..
ReplyDeleteமிகவும் சந்தோசமாக இருக்கிறது,இப்படிப்பட்ட ஒரு பக்கத்தை தரிசிப்பதற்கு..உங்கள் இசை சிந்தனை மென்மேலும் வளர வாழ்த்த்துக்கள்.. இதை உருவாக்க நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது..பாராட்டுக்கள்...
கமல்ஹாசன்-இளையராஜா பாட்டுக்களையும் எதிர்பார்க்கிறேன்.
நேரமிருப்பின் இந்த சுட்டியில் உள்ள காணொளியை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
http://www.youtube.com/watch?v=QExkvI2ocE8
ஒன்றுமில்லை..திரு எஸ்.பி.பி அவர்களின் கமெண்ட்...ராஜா சாரை பற்றி...நன்றிகள்...