MELLA THIRANTHATHU KADHAVU
மோகனின் நடிப்பில் இமாலய வெற்றி பெற்ற இன்னொரு படம்
சுந்தர்ராஜனின் வெற்றிபடைப்பில் முத்தான படம்
படத்தை ,ராதா கதை .. அமலா கதை என இரண்டாக பிரித்து ,
முதல் நூறு நாட்களில் ராதா கதையை முதற்பகுதியாகவும்,
அடுத்த நூறு நாட்களுக்கு அமலா கதையை முதற்பகுதியாகவும் திரையிட்டு மக்களே ரசித்து பார்த்த படம்....என அடுக்கிகொண்டே போகலாம்..
மெல்லிசை மன்னர் மெட்டு போடுவதாகவும் இசைஞானி அந்த மெட்டுக்களுக்கு இசை அமைப்பதாகவும் முடிவு செய்யபட்டது
இசைஞானியும் மெல்லிசை மன்னரையும் இணையும் படம் ஆதலால் இரு தரப்பிலிருந்தும் ஏகலாவிய எதிர்பார்ப்பு படத்திற்கு..
படத்தின் பாடல்கள் வெளியாகி காற்றில் சீறி பாய்ந்து விண்ணை கிழித்தன.மேல் தட்டு மக்கள் முதல் அடி தட்டு மக்கள் வரை அணைவரையும் அள்ளிகொண்டது இந்த படம் .
இந்த படம் வெளியான போது என்னோட பள்ளியில் கல்வி சுற்றுலா அழைத்து சென்றார்கள். நான் படித்த பள்ளி கிறிஸ்துவ பள்ளியானதால் சுற்றுலா முழுக்க கிறிஸ்துவ பாடல்களே ஒலிக்கும்.
மாறாக இந்த பாடல்களை கேட்ட என் தலைமை ஆசிரியரே இந்த பாடல்களில் தவறான வார்த்தைகள் எதுவும் இல்லாததை கண்டு சுற்றுலா முழுக்க இந்த படத்தின் பாடல்களையே ஒலிக்க கட்டளையிட்டார்.
அப்புறம் என்ன .....சுற்றுலாவுக்கு இந்த பாடல்களே பின்னனி இசையாக அமைந்தது.இன்னைக்கும் இந்த பாடல்களை கேட்கும் போது அந்த பசுமையான நினைவுகளே என்னை தாக்குகிறது. நானும் நிலைகுலைந்துபோகிறேன்..
சண்டை படங்களே பெட்டியை நிரப்பிய அந்த காலத்தில் மோகனின் படங்கள்
பெண்களின் மனதை நிரப்பின.
காலை காட்சிக்கு வந்து ticket கிடைக்காமல் evening showபார்த்த அனுபவம் இன்னும் இதோ என் கண்ணெதிரே இருக்கிறது..
காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றவன் கடையில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிக்கவே அப்படியே நின்று விட்டென்..
அப்புறம் என்ன..அம்மாவிடம் முட்டிக்கு முட்டிதான்...
படத்தின் பாடல்களை மனப்பாடம் பண்ணிவைத்திருந்தேன் ..எழுததான் exam வரவில்லை..வந்திருந்தால் நான் தான் state first
இந்த படத்திலும் பின்னனி இசையில் தலைவரின் கைவரிசை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
அதை நானும் இங்கே கண்டுபிடித்தேன் உங்களுக்கு காணகொடுத்தேன்...
இந்த படத்தின் பாடல்களின் தொகுப்பு
மெல்ல திறந்தது கதவு அதை சொல்ல துடிக்குது மனசு விரைவில்....
No comments:
Post a Comment