Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Showing posts with label ilaiyaraja. Show all posts
Showing posts with label ilaiyaraja. Show all posts

Saturday, December 3, 2011

ISAIGNANI ILAYARAJA'S TV SHOWS


தலைவர் அவர்களின் மனைவி ஜீவா அவர்களின் மறைவுக்கு பிறகு வெற்றிடமாக இருந்தது அவரை பற்றிய
தகவல்கள்.
மௌனம் அமைதிக்காக மட்டுமல்ல ...புயலுக்காகவும் தான் என்பதை நிருபிக்கும்படியாக இருக்கிறது வரப்போகவுள்ள அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்....

பிரபலங்கள் இடம்பெற போக உள்ள இசைக்குராஜா என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் இன்று(சனிக்கிழமை) இரவு 9.30க்கு ஒளிபரப்பாக உள்ளது.
நிச்சயம் பல அரிய தகவல்களை இந்த நிகழ்ச்சி நமக்கு தரும் என எதிர்பார்க்கிறோம்......

சந்தர்ப்பம் கிடைத்தால் நிகழ்ச்சியை தவற விடாதீர்கள்






தலைவரே வருகிறார்


தலைவரை பற்றிய செய்திகளுக்கே காத்திருக்கும் நமக்கு தலைவரே ஜெயா டிவியில் நேரில் வருகிறார் ..என்றதும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது நமக்கு ... நல்ல வேளை என் இதயம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது.

காண ஆவலாய் இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நாமும் ஒருவன் என்று நினைக்கும் போதே கர்வமும்
கூடிக்கொள்கிறது.

 
 
”நீங்கள் எங்கே இருந்தாலும், எங்கே சென்றாலும், உங்களைத் தொடர்ந்து வருவது என் இசை மட்டுமே என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எந்த துக்கத்தில் இருந்தாலும், எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் உங்களுக்கு ஆறுதலும் நிம்மதியும் அளிப்பது என் இசை மட்டுமே என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இடம், காலம், எல்லாம் கடந்த அந்த இசையை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள உங்களை சந்திக்க விரைவில் வருகிறேன்..! உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவிடாத தொடர்பு இசை மட்டுமே..! அந்த இசை தொடரட்டும்..!”

- இசைஞானி ...




காண தவற மாட்டீர்கள்...  சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும்...



Tell a Friend





Tuesday, November 29, 2011

ATHIKALAI SUBAVELAI-ILAYARAJA KALAI SONGS

 


அதிகாலை அழகை ரசிக்காத கவிஞர்களே இல்லை .கவிஞர்கள் இருக்கும்போது இசைக்கு மட்டும் பஞ்சமா என்ன?


கொள்ளை அழகு கோடி கோடியாய் கொட்டிகிடக்கும் அதிகாலையில்  இரவும் பகலும் சங்கமிக்கிறதை போல இசையும் கவியும் இங்கே சங்கமிக்கின்றது.இசைஞானியில் ஆரம்பிக்கின்ற அந்த ஆலாபனை நீறுற்று போல உருவெடுத்து  கவிஞர்களால் வலிமையும் பெற்று காட்சிகளையும் கைகோர்த்து இசை அருவியாய் நம்மை வந்து அடைகிறபொழுது புதிதாய் பிறந்த சந்தோஷத்தை தருகிறது.சென்ற நாளில் பட்ட கஷ்டங்கள் இந்த நாளில் தீரும் என்ற நம்பிக்கையுடனும் நம்மை உழைக்கசெய்கிறது.

பாடலால் பணம் சம்பாதிக்கும் கலைஞர்களையே சந்தோஷபடுத்துகிற இசைஞானியின் சங்கீதங்கள் சாமாணிய மனிதனுக்கு நல்ல மருந்தாகவும் செயல் படுகிறதுஎன்றால் அது மிகைஅல்ல‌. இசைஞானியின் இசை காலைப்பொழுதில் மனதை துய்மைபடுத்துகிறது.. அதே வேளையில் சோம்பலையும் துரத்தி அடிக்கிறது.

அப்படி தலைவர் அவர்கள் சர்வ சாதாரணமாய் இசை அமைத்து நமக்கெல்லாம் இன்று வானொலிகள் மூலம் நல்ல பொழுதுகளை தந்து கொண்டிருக்கும் இசைஞானியை இசை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல....

இதோ காலைக்காக பதிவாக்க பட்ட‌ பாடல்கள்


புத்தம் புது காலை -அலைகள் ஓய்வதில்லை




                     அதிகாலை சுபவேலை- நட்பு
 



அதிகாலை நிலவே-உறுதிமொழி





காலைதென்றல் பாடிவரும் -உயர்ந்த உள்ளம்





காலை பனியில் ஆடும் மலர்கள்-காயத்ரி
 


                 
சோலைக்குயிலே காலைகதிரே-பொன்னு ஊருக்கு புதுசு
 





காலை நேர ராகமே-ராசாவே உன்னை நம்பி
 




அதிகாலை நேரம் கனவில் - நான் சொன்னதே சட்டம்
 




ஓ ஓ காலை குயில்களே-உன்னை வாழ்த்தி பாடுகிறேன்





அதிகாலை நேரமே -மீண்டும் ஒரு காதல் கதை
 





இனி வரும் இனிய
காலை பொழுது இசைஞானியின் இசையுடன் இனிதாய் அமைந்திட
இனிய வாழ்த்துக்கள்

ராஜாரசிகனுக்காக‌
துபையிலிருந்து
சௌந்தர்




Sunday, November 13, 2011

புகழ் மிக்கவர்களின் வாழ்க்கையில் கிரகங்கள் – இளையராஜா ------------ஜோதிடர் வளரொளி மோகன்









02.06.1943
நட்சத்திரம்   :    கார்த்திகை
ராசி         :    ரிஷபம்
தசா இருப்பு  :    சூரியன் 0 வருடம் 6 மாதம் 23 நாள்


இவரது இளமைக்காலத்தில் வந்த சந்திர திசையில் ஓரளவு படித்துள்ளார். 1954லிருந்து 1961ஆம் வருடம் வரையில் மிகவும் சுமாரான வாழ்க்கை. செவ்வாய் பதினொன்றாம் இடத்தில் இருந்து அந்த இடத்திற்குரிய குரு உச்சம் அடைந்ததால் மூத்த சகோதரரால் லாபமும் நன்மையும், சங்கீதத்தில் பயிற்சியும் இவருக்கு ஏற்பட்டது. பிறகு வந்த ராகு தசையில் பல கஷ்ட நஷ்டங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தியது. உச்சம் பெற்ற குருதிசையில்தான் இவருக்கு தொழில் வாய்ப்பும், புகழும் ஏற்பட்டது. சுக்ரனும் சந்திரனும் பரிவர்த்தனை அடைந்தது. சுபகிரகங்களாகிய மூன்று மற்றும் ஒன்றாம் வீட்டு அதிபதிகளின் பரிவர்த்தனையில் இசைத்துறையால் மாபெரும் புகழ் அடைந்தார். ஒன்பது வீட்டில் கேது இருந்து, அந்த வீட்டுக்குரிய சனி லக்னத்தில் இருந்ததாலும் ஆன்மீகத் தொடர்பு ஏற்பட்டதோடு, கேதுவை உச்சம் பெற்ற குரு பார்ப்பதாலும் இவருக்கு ‘ஞானி’ என்ற பட்டம் கிடைத்தது. 1995லிருந்து சனி திசை ஆரம்பம். சனி திசை சனி புத்தி சுமாராக இருந்தது. பிறகு ஏழரைச் சனி வேறு தொடங்கியது. 2003 வரையில் ஏழரைச் சனியினால் சில பாதிப்புகள், தடங்கல் ஏற்பட்டிருந்தது. 2013லிருந்து இவருக்கு புதன் தசை தொடங்குகிறது. அப்பொழுது மறுபடியும் பேரும் புகழும் அடைந்து இன்னும் அமோகமான நிலையை அடைவார்.

                                           (அவசியம் வேண்டி copy செய்ய பட்டது...)











Monday, November 7, 2011

பண்ணையபுர பாட்டு...


என் கண்ணே பட்டுடும் போல இருக்கு...

அமர்க்களம் பண்ணுகிறார்கள்

அட்டகாசம்ணா என்னன்னு காட்டுகிறார்கள்

பாருங்களேன் நம் தலைவரின் செல்வங்களை...

அது மட்டுமல்லாமல் ரசிகர்களாகிய நம் நண்பர்களையும் பாருங்க..

திருவிழாவே நடக்கிறது

நல்லா sound வச்சு கேளுங்க‌....பாருங்க.


 



Tell a Friend

Tuesday, September 13, 2011

ILAYARAJA'S DRAWINGS



தற்பொழுது இணையதளத்தில் தலைவர் இசைஞானியின் ஓவியங்கள் என்ற  பெயரில் கீழே கொடுக்கபட்டுள்ள தமிழ் பெண்களின் குடும்ப பாங்கான , அழகான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

















































இவைகள் தலைவர் இசைஞானியால் வரையபட்ட படங்கள் அல்ல..ஆனந்த விகனில் வரைந்து வந்த தலைவர் பெயர் கொண்ட ஓவியர் இளையராஜா என்பவரால் வரைய பட்ட படங்கள் என்பதனை தெரியபடுத்திகொள்கிறேன்






Tell a Friend




Related Posts Plugin for WordPress, Blogger...