சூப்பர் ஸ்டார் யார்?
இளையராஜா பரபரப்பு பேச்சு
பொதுவாகவே தான் இசையமைத்திருக்கும் படமாக இருந்தாலும் கூட, அப்பட விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்க்கும் இசைஞானி இளையராஜா, பழஸிராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
பேச அழைத்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன், "அவரை எப்படி சொல்லி அழைப்பது? எங்கள் குட்டி கடவுளே வருக..." என்று அழைக்க, "கடவுள் ஒருவர்தான். அதில் குட்டி கடவுள்னு தனியா இருக்காரா என்ன?" என்று தனக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பித்தார் இசைஞானி. முதலில் பாடல் கம்போசிங்கிலிருந்து துவங்கியது பிரவாகம். அதை கேட்க கேட்க பரமானந்தம்.
பாடல் எழுதியவர் மலையாளத்தின் முன்னணி கவிஞர். நான் கொடுக்கிற மெட்டுக்கு அவரால் வரிகள் போட முடியவில்லை. மீட்டரில் அடங்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஊரில் இருக்க, நான் இன்னொரு இடத்தில் இருந்தேன். ட்யூன்களை எடுத்துக் கொண்டு அவரது வீட்டுக்கே செல்வார் டைரக்டர் ஹரிஹரன். கடைசியாக அவரே ஒரு பாடலை எழுதிக் கொடுத்திருந்தார். சரி, அதற்கு மெட்டு போட்டுக் கொள்ளலாம் என்ற முடிவோடு அமர்ந்தேன். பழசிராஜா தான் வாழ்ந்த ஊரை விட்டே போவது போல காட்சி. ஆனால் அந்த வேதனையை சொல்வது போல ஒரு வரியும் இல்லாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் போடுகிற வரிகள், இந்த காலத்திற்கு ஏற்றார் போல அமைந்திருக்க வேண்டும். தங்கள் மண்ணை விட்டு உலகமெங்கும் வாழ்பவர்களின் வலி அதில் தெரிய வேண்டும். ஆனால் வரிகளில் மட்டும் ஒரு போருக்கான ஆயத்தம் இருந்தது. அதாவது லெப்ட், ரைட் என்று பெரேட் செல்வது போலவே தாளக்கட்டுடன் அமைந்த வரிகள். படித்த ஒரு வினாடிக்குள் நான் இப்படிதான் மெட்டு போடுவேன் என்று அவர் நினைத்திருப்பார் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனாலும் வேறு மாதிரி மனசை உருக்குவது போல மெட்டு போட்டேன் என்று ராஜா சொல்ல பலத்த கைதட்டல் அரங்கத்தில்.
பழசிராஜா படத்தின் கதையாசிரியர் எம்.டி.வாசுதேவன் பற்றி கூறிய இளையராஜா, அவர்தான் சூப்பர் ஸ்டார். நல்ல கதை இல்லைன்னா சூப்பர் ஸ்டார் ஏது? சுப்ரீம் ஸ்டார்தான் ஏது? என்று கூற மேடையில் இருந்த சரத்குமாரே தன்னை மறந்து கைதட்டியது கண் கொள்ளா காட்சி
No comments:
Post a Comment