Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, February 19, 2010

JOHNY AND ILAYARAJA BGMஜானி


இந்த ஒரு வார்த்தையில் படத்தின் பெயரை வைத்து கொண்டு எத்தனை ஜாம்பவான்கள் கலக்கியிருப்பார்கள்.
மகேந்திரனின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையமப்பில் ரஜினி+ரஜினி , ஸ்ரீ தேவி,தீபா,சுரிளிராஜன் ஆகியோர் நடித்து 1980 இல் வெளிவந்த படம் தான் ஜானி.


இவ்வளவு பேர் பணியாற்றியிருக்கிறார்கள்.
இதில் நம் இசை ராஜாவின் பங்கு எப்படி என்று மட்டும் பார்ப்போம்


இசைக்கு முக்கியதுவம் என்பதால் பொறுப்பை உணர்ந்து இசையமைத்து இருக்கிறார் நம் தலைவர். 5 பாடல்களையும் பின்னனி இசையையும் சேர்த்து நம் இளையராஜாவே ஒரு நாயகனை பொல தெரிகிறார்


பாடல்க்ள் அனைத்தும் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறது இதற்கு காரணம் நம் ராஜா வின் உழைப்பன்றி வெறென்ன இருக்க முடியும்.இப்படத்தில் பாடிய அனைத்து பாடகர்களில் அனைவருக்குமே மறக்க முடியாத அனுபவத்தை இப்படம் கொடுத்து இருக்கும்.


இதொ ஜென்சி பாடிய பாடல்....ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும்
இந்த இசை நம் மனதை அழைத்து செல்கிறது.

ORU INIYA MANATHU -JOHNNY SONG DOWNLOAD

இந்த பாடலில் இருந்து நம் மனது திரும்ப வருவதற்குள்
 அடுத்த பாடல் நம் மனதை கொள்ளையடித்து கொண்டு போகிறது
இதோ ஜென்சி கலக்கிய அடுத்த பாடல்
EN VAANILE ORE VENNILA-JOHNNY SONG DOWNLOAD


இடை இடையில் வரும் பின்னனி இசையும் நம் மனதை பதம் பார்க்கும்

ரஜினிகாந்த் ம்ற்றும் ஸ்ரீ தேவி மென்மையான‌ காதலுக்குள் நம் இளையராஜாவின் இசையும் சேர்ந்து காட்சியை தூக்கி  நிறுத்துகின்றன‌


.


நம் பாடும் நிலா பாலு சார் தானும் போட்டியில் கலந்து கொண்டதை பொல
சினோரீட்டா வில் ஒரு அம்பை நம் மனதை நொக்கி ஏவி விட்டிருப்பார்
SINOREETTA I LOVE YOU -JOHNNY SONG DOWNLOAD

சைலஜா வின் பாடல்.......சொல்ல வார்தைகளே இல்லை.
பாடலும் சரி,இசைக்கலைவையும் சரி,பாடல் எடுத்த விதமும் சரி, நடிதவர்களின் முகபாவனைகலும் சரி
எல்லாமே நெத்தியடி...

AASAYA KAATHTHULA THOOTHU VITTU-JOHNNY SONG DOWNLOAD

இரண்டு ரஜினிகளும் வாழ்க்கைக்காக ஓடும்போது,
 நம் மனதில் ஓடுவது என்னமோ இவர் ( நம் தலைவர்) எப்படி ஒரு இவ்வளவு நீள காட்சிக்கு எப்படிஇவ்வளவு அழகாக இசை அமைக்கிறார் என்பதுதான்.

கடைசியாக ஜானகியின் பாடல் இசையில் ஆர்ம்பித்து ஆ ஆ ஆ என்று தன் குரலை சேர்த்து ரீங்காரம் இசைத்து நொந்து போன குரலில் காற்றே என்று நிருத்தும் போது புல்லரிக்குமே .......இதை என்னவென்று சொல்ல.....

KATRE ENTHAN GEETHAM-JOHNNY SONG DOWNLOAD


அதோடு நிற்க்க வில்லை

படம் முடியும் போது கூட தன் வெறியாட்டத்தை ஆடி முடித்திருக்கிறார் நம் தலைவர்


படத்தின் அனைத்து பின்னனி இசையின் கலவை
படத்தின் முடிவில் வரும் இந்த  இசை..படத்தை
எத்தனை முறை பார்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது  
Tell a Friend

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...