Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Tuesday, May 11, 2010

ILAYARAJA'S LOVE FAILURE SONGSகாதல்...

இதில் பல படிகள் உண்டு.                   
ஒரு ஆணும் பெண்ணும் மனதால் இணையும் உணர்ச்சியே காதல்.என்னமோ எதோ இவன் அந்த பெண்ணின் மீது ஆசை படுகிறான். அந்த பெண்ணுக்கும் இந்த பையன் மேல் ஆசை வந்து விட்டால் அறை கிணறு தாண்டிவிட்டான் என்று தான் அர்த்தம். 


அப்படி அந்த பெண்ணுக்கு இவனை பிடிக்க வில்லையென்றால் அவனுக்கு பெரிய பெரிய சோதனைகள் காத்திருக்கும். தினமும் அந்த பெண்ணை வீட்டிலிருந்து பள்ளிகூடமோ கல்லூரி வரைக்குமோ இவன் follow பண்ணவேண்டும். எப்போதுமே சோகமாக முகத்தை வைத்து கொண்டு பாதி தூக்கத்தில் எழுந்தவன் போல அவள் பின்னால் திரிய வேண்டும்.மொத்தத்தில் அவன் சிரிக்கவே கூடாது .இப்படி இருந்தால் தான் அந்த பெண்ணின் பரிதாப பார்வையாவது இவன் மேல் படும்.


இந்த சமயத்தில் இவன் கையில் பேனா கிடைத்து விட்டால் போதும். உடனே கவிதை ஊற்றெடுக்கும் நேரம் .
இதோ ஒரு கவிதை


"கன்னியரின் கடைக்கண் பார்வை
காளையரின் மேல் பட்டுவிட்டால்
மண்ணில் மைந்தர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்".


இது கவிதை எழுத தெரிந்தவனுக்கு.
கவிதை எழுத தெரியாதவனுக்கு அந்த பெண்ணின் பெயர்தான் கவிதை.அப்புறம் என்ன ஒரு வழியா அந்த பெண்ணும் சரியென்று சொல்லி விடுவாள்.


தூங்கமாட்டானே நம்ம ஆளு.தூக்கத்தில் எழுந்து கண்ணாடியில் முகத்தை பார்ப்பான்.என்னன்னமோ தோணும் அவனுக்கு. காட்டான் போல திரிந்து கொண்டிருந்தவன் காட்டன் சட்டையை பொட்டுக்கொண்டு கலக்கலா மாறுவது வரைக்கும் முதல் படி.


இதற்கே நம்ம தலைவர் ஏகப்பட்ட பாடல்களை பொட்டு குவித்து வைத்திருக்கிறார்.அப்புறம் எப்படி சந்திப்பது என்ற பிரச்சனை தான் மனுஷனுக்கு. இதில் இவன் நண்பர்கள் அந்த பெண்ணுக்கு அண்ணன் ஆவார்கள் .அந்த பெண்ணின் தோழிகள் இவனுக்கு தங்கைகள் ஆவார்கள்.அவர்களை வைத்து கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இருக்காது.காதலி இருக்கும் போது காதலி கூட பேசுவான் .காதலி இல்லாத போது நண்பனிடம் காதலியை பற்றி பேசியதையே பேசி பேசி கொண்று விடுவான்.


இவர்கள் தனிமையில் சந்தித்து பேசி சந்தோஷபடும் சீனுக்கு அருமையான பாடல்களை நம் தலைவர் கொடுத்துள்ளார்.ஆனால் நிஜத்தில் ஒருத்தனும் இந்த நேரத்தில் பாடலை பாடுவதில்லை என்பதுதான் உண்மை.(மற்றதுக்கெ நேரம் கிடைக்கறதில்லை ,இதுல பாட்டுக்கு எங்க நேரம் என்கிறீர்களா....).இது இரண்டாம் படி.

திடீறென்று வருவான் வில்லன்.பையனின் அப்பா,பெண்ணின் அண்ணன், பெண்ணின் முறை மாமன்,இல்லையென்றால் அந்த ஊர் பண்ணையார் இவர்கள் தான் வில்லன்கள். இவர்கள் பெண்ணுக்கு போடுவார்கள் கோடு . இவர்களால் ஏற்படும் பிரச்சனைகளாலோ ,இல்லை வில்லன்களால் காதலர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளாலோ காதலர்களுக்குள் பிரிவு ஏற்படும். இதுவே மூன்றாம் படி.


இதையும் தாண்டி முட்டி மோதி உயிரை கொடுத்து (தன் உயிரையோ அல்லது மற்றவர் உயிரையோ கொடுத்து )
வெற்றி பெற்று காதலித்த பெண்ணையே கை பிடிப்பவர்கள் சில பேரே.இதில் நானும் ஒருத்தன்.
இது நான்காம் படி .

இப்படி நான்கு படிகள் உள்ள இந்த காதலில் இந்த மூன்றாம் படி சோக படி.


அதில் இரு வகை உண்டு.இருவருமே சோகத்தில் மூழ்குவது ஒன்று .மற்றொன்று பையனை உசுப்பேத்தி விட்டுட்டு அவன் புலம்புவதை பெண் வேடிக்கை பார்ப்பது .


இந்த இரண்டாம் வகை இருக்கிறதே ...மிகவும் மோசமானது.பாவம் பசங்க. நொந்து போய்விடுவார்கள்.பழகிய அந்த பெண் திடிறென்று பேசாமல் போகும் போதோ, பிடிக்கவில்லை என்று சொல்லும் போதோ ,பார்க்க முடியாமல் போகும்போதொ இவன் தவிக்கும் தவிப்பிருக்கே ....பாவங்க . அனுபவித்தவனுக்கு தான் தெரியும் அந்த வலி.
அதில்சில பேர் இங்கே.இது கூட பரவாயில்லைங்க.சில பேர் பைத்தியமாயிடுராங்க.இதில என்னன்னா .....இந்த ஆண்கள் படும் வேதனையெல்லாம் நமக்கு தான் கஷ்டமாக இருக்குமே தவிர,இவர்கள் காதலிக்கும் பெண்கள் இவர்கள் முட்டாள் பொல தான் பார்ப்பார்கள்.இதோ இவரை போல.
இவர் நிலைமை கொடூரமானது

காதல் வாழ்க்கைக்கு அவசியம் தான்.ஆனால் அதையும் தாண்டி புனிதமானதெல்லாம் இங்கே நிரைய இருக்கிறது.
குடும்பம் , நண்பன்,உழைப்பு ,முன்னேற்றம் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

காதலை தவற விட்டவர்கள் ,காலத்தை தவற விடாமல் இருந்தால் சரி.


songs

1.AARUM_ATHU.MP3


2.Anand - Poovukku.mp3


3.Auto Raja - Malare Ennenna Kolam.mp3


4.Devathai Iam.mp3


5.dhayame Idhayame..mp3


6.EERAMANA_ROSAVE___ILAMAI_KA.MP3


7.ELLORODAYA VAZH.mp3


8.En Jeevan Paaduthu (KJJ).MP3.mp3


9.ENNADI_MEENATCHI_SPB_ILAMAI.MP3


10.Idhaya Thamarai - Oh My Love.mp3


11.Idhaya Thamarai - Yaroda Yaar.mp3


12.Ilavenil Ithu..mp3


13.Kaathal Geetham - Pennmai Konda Mownam Pirinthaalum Nenjil Salanam.mp3


14.KAATHIRUNDHU_VAIDEHI_KAATHI.MP3


15.MALAIYORAM_PAADU_NILAAVE.MP3


16.MOONU_MUDICHALE__.MP3


17.My Dear Marthanda - Oh azhgu nilavu.mp3


18.Nadodi Pattukaran - Kathalukku Kanngal.mp3


19.Oh Nenje Neethan (S.P.B).MP3.mp3


20.PAADI PARANTHA.MP3


21.POGUTHE.mp3


22.Sembaruthi - Nadda Nadu Kadal Mithu Naan Paadum.mp3


23.SRI_RAMANIN.MP3


24.THAGIDA_THAGIDA___SPB___CHO.MP3


25.Thalattu Padavah - Needhana Needhana [Male].mp3


26.THANNITH_THOTTI___KJJESUDAS.MP3


27.UCHI_VAGIDEDUTHU_ROJAPOO_RA.MP3


28.Unnane.mp3


29.Vaadatha Rosappoove.mp3


30.VELLAI_PURA.MP31 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...