கடலோர கவிதைகள்
இந்த படத்தை பார்க்காதவர்களும் இல்லை இந்த படத்தின் பாடல்களை கேட்காதவர்களே இல்லை என கூட சொல்லலாம் .அப்படி பட்ட பெருமைவாய்ந்த இந்த படத்தை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது .படத்தின் வெற்றிக்கு யாருடைய பங்கு அதிகம் என் ஒரு போட்டியே வைக்கலாம் என்ற அளவிற்கு எல்லோரும் இணைந்து பாடு பட்டிருக்கிறார்கள் .
இந்த கதையை படமாக்கிய இயக்குனர் பாரதி ராஜா ஒரு இமயமே என்றால் இசைஅமைத்த நம் ராஜா ஒரு சிகரமே.
நட்பின் புனிதத்தை படத்தில் காட்டியிருக்கிறார்கள் இருவரும்.
தலைவர் இசை அமைத்த படங்களில் பின்னனி இசை பேசப்படும் என்பது தெறிந்ததே. ஆனால் படமே பின்னனி இசையாக இருப்பதை இந்த படத்தில் தான் பார்த்தேன்.இந்த படத்தில் எந்த காட்சியை ஒதுக்குவது ...எந்த காட்சியை ஒட்டுவது என்ற குழப்பத்திலேயே பல நாட்கள் ஓடிபோனது .
முக்கியமாக இரண்டு வகையான BGMகளை மட்டும் ராஜா ரசிகர்களுக்கு பரிசளிப்பது என்ற முடிவுடன் இந்த பதிப்பை வெளியிட்டேன் .
இது முதல் வகையான BGM.
இந்த BGMஐ பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
சோகமான காட்சிகளுக்கும் தாயின் பாசத்திற்கும் இந்த இசையை கோர்த்திறுக்கிறார்.
முதலில் இந்த காட்சியை பாருங்க.
இந்த படத்தின் கடைசி 15 நிமிடங்களுக்கு காட்சி அமைப்பும், பின்னனி இசையும் சதியராஜ், ரேகா
இவர்களின் நடிப்பும் நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகும்.
15 நிமிட காட்சியை
தோய்வில்லாமல் எடுத்து சென்று உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இசையை கூட்டி
சந்தர்ப்பங்களில் அமைதியால் நிரப்பி தானே ராஜா என்பதை நமக்கு உணர்த்திய ராஜா இசைராஜா தான்.
இந்த பின்னனி இசையை நன்றாக கவனியுங்கள் .மெய்சிலிர்க்கும்...
தீவிரமாகிறது இந்த தேடுதல் வேட்டை...
இசைராஜாவின் இசைக்கடலில் .
No comments:
Post a Comment