Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, August 12, 2010

ANGUM INGUM -O PAPPA LALI SONG


ANGUM INGUM-O PAPPA LALI SONG


இசைஞானி இளையராஜா சில நேரங்களில் சில மாயாஜாலங்களை தனது இசையில் காண்பிப்பார்.அதில் ஒன்று தான் இந்த ஓ பாப்பா லாலி பாடல் .
தெலுங்கில் தனது தோழரான பாலு சாரை பாடவைத்த இசைஞானி தமிழில் தனது சீடரான மனோசாரை பாடவைத்திருப்பார். இருவரின் குரலையும் அடையாளம் காட்டுவது மேலோட்டமாக இசையை அனுபவிக்கும் இசைப்பிரியர்களுக்கு இயலாத காரியம். இருவர் குரலிலும் உள்ள நூலிழை வித்தியாசத்தை நம் தலைவர் அழகாக பயண்படுத்தியிருப்பார்.


 ஒரே மாதிரியான குரல்..திறமையிலும் சமம்....ஒரெ இடத்தில் வேலை ....உனக்கா எனக்கா என ரசிகர்கள்...என பொறாமைக்கான அத்தனை சூழ் நிலைகளிருந்த்தும் இவர்களுக்குள் போட்டியிருந்ததே தவிர பொறாமை பொசுங்கிபோயிற்று. இது இவர்கள் இசைமேல்( நம் தலைவர் மேல் ) வைத்திருந்த பாசத்தையும் பற்றையும் காண்பிக்கிறது. தனது இசையை சமமாக பாகப்பிரிவினை செய்து இவர்கள் அணைவரையும் தன் உயிருடன் அரவணைத்து தனது இசைபயணத்தை நடத்தி முடித்தார்.இன்னமும் நடத்தி கொண்டிருக்கிறார்.


முதலில் பாலுசாரின் பாப்பா லாலி

இந்த பாடலை இவர் பாடும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருப்பார் போல. என்ன ஒரு அழகு... அனுபவித்து பாடியிருகிறார்.பாஷை புரியவில்லையென்றாலும் சுந்தர தெலுங்கில் இவர் பாடுவதை கேட்கும் போது தாய் மொழியில் கேட்ட சுகம் மன்சுக்கு.  இவர் பாடிய 40000 க்கும் மேற்பட்ட பாடல்களில் அதிகமான ஹிட் பாடல்கள் நம் தலைவரின் இசையில்தான் இருக்கிறது என்பது மற்றுமொரு சந்தோஷமான் விஷயம்.
 அசத்தலான வெற்றி படத்துக்கு மட்டுமல்ல பாட்டுக்கும்தான். ஆந்தராவில் இன்னமும் இந்த பாடல் விடைபெறாத வெற்றி பாடலாகவே மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.இதோ பாலுசாரின் ஆலாபனை அங்கே.....


இப்ப நம்ம மனோசாரின் பாப்பா லாலி

இவரும் சளைத்தவரில்லை. சமீபத்தில் தனது இசைபயணத்தில் 22000 பாடல்களை பாடி சாதனைபுரிந்ததற்காக துபாயில் இவருக்கு பாராட்டு விழா நடத்தபட்டது.அதிலும் என்ன ஒரு அடக்கம் குழந்தை முகம் மாறாத இந்த சாதனையாளருக்க்குதான் என்ன ஒரு குரல்.  
பாலுசாரின் பாட்டை தமிழில் பாடும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு இருந்திருக்கும் இவருக்கு. இரவில் இந்த பாட்டை கேட்டுபாருங்கள்..பரவசப்படுவீர்கள்..பட்டும் இருப்பிர்கள்.


தேர்ந்தெடுத்த பாடல்களில் தனது திறமையை முற்றிலும் வித்தியாசப்படுத்தி காட்டியதன் மூலம் மட்டுமே வெற்றிபெற்றவர்.இன்றும் நமது கல்லூரி மாண‌வர்களில் பலரது விருப்பபாடலாக இந்த பாடல் உள்ளது. நம் தமிழ் திரைப்படங்களில் சில பாடல்கள் மட்டுமே பாடகர்களை நினைவுப்படுத்தும். நம்ம மனோசாரை என்றும் நினைவுப்படுத்திகொண்டே இருக்கும் அந்த பாப்பா லாலி இங்கே..
தெலுங்கில் பாலு சார் பாடிய ஒ பாப்பா லாலி


Geetanjali-Oh Papa Lali.mp3தமிழில் மனோசார் பாடிய ஒ பாப்பா லாலி

IDHAYATHAI THIRUDATHE - O PAPA LALI.mp3இந்த இசை அலை ஓயாது..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...