Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, August 15, 2010

PANDIDHURAI -ILAYARAJA BGM

ராஜாரசிகர்களுக்கு 
வணக்கம் 
என் பெயர் ராஜேஷ் வரதராஜன். எனது ஊர் பெங்களூர் .நானும் ஒரு தீவிர (இளைய) ராஜாரசிகன் என்பதில் பெருமைஅடைகிறேன்.அதே பெருமையுடன் இந்த பதிப்பையும் ராஜா ரசிகன் இணையதளத்துக்காக் வழங்குகிறேன்.

நம்ம தலைவர் அமைத்துள்ள பல்வேறு பின்னனி இசையை பற்றி நாம் இங்கே அல‌சுகிறோம். பின்னனி இசையில் மன்னனாக திகழும் நம் தலைவர் அமைத்த பின்னனி இசையில், பாண்டிதுரை படத்தின்பின்னனி இசை என்னை கவர்ந்தவற்றில் ஒன்றாகும் .
இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் சில்க் ஸ்மிதா பங்குபெறும் காட்சிகளில் அசத்தலான் பின்னனி இசையை கொடுத்து அசத்தியிருந்தார் நம் தலைவர்.


சில்க் ஸ்மிதா தானே என்று அலட்சிய படத்தாமல் கதாபாத்திரத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து இசை அமைத்திருக்கிறார் இளையராஜா.


சில்க் ஸ்மிதாவின் கவர்சிக்கு சமமான கவர்ச்சியை இசையிலும் காட்டியிருந்தார் இசைஞானி. படத்தில் ஸ்மிதா பங்குபெறும் காட்சிகளிலெல்லாம் இந்த இசை கூடவே பயணிக்கிறது. இதோ அந்த காட்சிகள்



ஆயிரம் பேர் நமக்கு இசை விருந்து அளிக்கலாம்... நம் தலைவர் மட்டுமே இசையை நமக்கு எப்போதும் பண்டிகை விருந்தாக அளிக்கிறார்,


இசைவாழ, இசைஞானி வாழ்க‌

இந்த பதிப்பை வேளியிட்ட ராஜாரசிகன் இணையதளத்துக்கு எனது மனமார்ந்த நன்றி
                                அன்புடன்,
                               ராஜேஷ் வரதராஜன்
                                   பெங்களூர்
                                          
மீண்டும் சந்திப்போம் .....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...