Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, September 26, 2010

RAJARASIGAN'S FIRST ANNIVERSARY-150TH POST

ராஜாரசிகனுக்கு வயது ஒன்று

ராஜாரசிகன் இன்று இரண் டாம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது.இது வெற்றிபடியா...தோல்விபடியா..என்று கூட எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒன்று,சும்மா பொழுது போக்கிற்காக துவங்கபட்ட ராஜாரசிகனில் இது 150வது பதிவு ஆகும் .சாதாரணமாக ஆரம்பிக்க பட்ட ராஜாரசிகன் இன்று இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றிணையும் தளமாக விளங்குகிறது.
20000 மேற்பட்ட ரசிகர்களால் 68000 பக்கங்கள் புரட்டபட்டிருக்கின்றன.


 இன்று youtubeஎன்ற இணையதளம் மூலமாக rajarasigan என்ற usernameஇல் 80video களும், singamsoundarஎன்ற usernameஇல் 80 videoகளும் விண்ணில் உலவ விடப்பட்டிருக்கின்றன.
தினந்தோறும் நூற்றுகணக்கானோர் அந்த videoகளை கண்டுகளிக்கின்றனர்.


GOOGLEஇல் "rasigan" என்று தேடினால் நம் இளையராஜா சார்பாக ராஜாரசிகன் முன்னால் வந்து நிற்கிறான்.இது நமக்கு பெருமையும் அதே நேரத்தில் இன்னும் வளர்க்க வேண்டிய பொறுப்பையும் கூட்டுகிறது.

இந்த அளவிற்கு ராஜாரசிகன் வளர காரணமானவர்களை இந்நேரத்தில் நினைத்து பார்கிறேன் ..


முதல் காரணம் நம் தலைவர் இளையராஜா 
இவர்பெயரை கொண்டு வெறுமனே ஒரு இணையதளத்தை உறுவாக்கினால்கூட குறைந்தது ஒரு நாளைக்கு 50 பேராவது வந்து போவார்கள். இணையதளத்தில் அப்படிஒரு புகழ் நம் தலைவருக்கு.


இரண்டாம் காரணம் நம் GOOGLE ளைதான்  சொல்லவேண்டும்.இளையராஜா தொடர்பான தேடுதல்களுக்கு நம் இணையதளத்தை முன்னிறுத்தி பரிந்துரை செய்கிறது


மூன்றாவதாக ராஜாரசிகர்களைதான் சொல்ல வேண்டும்

நம் இணைய நண் பர்கள் குறிப்பாக SRIGANESH,RAJESH VARADHARAJA,ROMAL,DHEEPAN,NAGARAJ,SUNDAR,PRINCE போன்ற நண் பர்கள் தவறாமல் ராஜாரசிகனை பார்ப்பதுடன் அவர்களே ராஜாரசிகனை வழி நடத்தவும் செய்கின்றனர்.அடுத்த பதிவு என்னவாக இருக்க வேண் டும் ,அதில் என்னென்ன பாடல்கள் இருக்கவேண்டும் என்பதையும் அவர்களே தெளிவு படுத்துகின்றனர்.அவர்களுக்கு நன்றி சொல்வது எனக்கு நானே  நன்றி சொல்லிகொள்வதை போலாகும். 

நானும் தலைவரின் தீவிர ரசிகன் தான் .ஆனால் என்னைவிட உயிருக்கு உயிராக இளையராஜாவின் இசையை நேசிக்கும் ரசிகர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது இந்த ராஜாரசிகன் தான்.
இதற்காக நான் பட்ட கஷ்டங்களையும் சொல்லிமுடிக்க முடியாது.இந்த ராஜாரசிகனில் மூழ்கிய பின் எனக்கு பல இரவுகள் காணாமல் போயின.கூடவே துக்கங்களும்...தூக்கங்களும்....என்னை நான் உலகுக்கு அறிமுகபடுத்துவதை விட புதைந்து கிடக்கும் தலைவரின் பொக்கிஷங்களை இந்த தலைமுறைக்கு சொல்லி பெறுமைபடுத்துவதே என் நோக்கமாயிருந்தது.


சென்ற மே மாதம் 3 நாட்கள் இடைவிடாமல் ராஜாரசிகனில் இருந்ததால் 3 நாட்கள் VASAN  EYE CAREருக்கு 3 நாட்கள் படையெடுக்க வேண்டியதாகிபோச்சு.அப்போது கூட அந்த வெறி அடங்க வில்லை .அந்த அளவிற்கு இந்த இசை என்னை பாதித்துள்ளது
ரசித்து வாழ்ந்திருந்தால் விட்டு போயிருக்கலாம் ..அனுபவித்து வாழ்ந்தோமே ..அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா?


அவர் படத்துக்கு இசையமத்தார்.ஆனால் அது என்னை போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்க்கைக்கு பின்னனி இசையாகிபோனது.எங்களின் ஒவ்வொரு நிகழ்வும் தலைவரின் பாடல்களின் பின்னனியில் தான் அமைந்திருக்கிறது..இனியும் தொடரபோகிறது.


இந்த ராஜாரசிகனின் அடுத்த வருட லட்சியம் 500 பதிவுகளை தாண்டுவது ..அதுவும் லட்சகணக்கான ரசிகர்களுடன்....


அனைவருக்கும் நன்றி.
ராஜாரசிகனின் உடன்பிறவா சகோதரர்களான அனைத்து FOLLOWERகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்
சௌந்தர்Tell a Friend2 comments:

  1. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. Iam a big fan of ilayaraja. After seeing this blog iam very much surprised and came to know more and more people are committed to raja than me. Now iam thinking how to engage myself to this blog. And iam very much happy to download rare hits of ilayaraja. Excellent songs which iam searthing for very long time.

    Valga nee and valarga vun sevai "Soundar"
    Sridhar.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...