Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Thursday, November 18, 2010

NOORAVATHU NAAL -ILAYARAJA'S SUPER BGM


நூறாவதுநாள் படம் பார்த்தீங்களா?


பார்த்திருப்பீர்கள்...பயந்தும் போயிருப்பீர்கள்.


மணிவண்ணன் இயக்கிய படம் அது. அருமையான படைப்பு அவருடையது.    இந்த படத்தில் மோகன், நளினிதான் ஜோடிகள் . விஜயகாந்த் டாக்டராக நடித்திருப்பார். ஆனால் அவருக்கே சொந்தமான போலிஸ் வேலையைதான் செய்வார்.

எந்த சிக்கலும் இல்லாமல் இந்த திகில் படம் ஆங்கில படத்துக்கு இணையாக எடுக்க பட்டிருக்கும். மனிதர்களை கொலை செய்து சுவற்றில் புதைத்த வழக்கு அப்போது மிகவும் பரபரப்பாக பெசப்பட்டது உங்களுக்கு நினை விருக்கலாம். அதை தழுவி கதை அமைத்து அதில் காதலையும் நுழைத்து வெற்றிகண்டது இந்த கூட்டணி.  படம் முடியும் வரை அடுத்து என்ன நடக்க போகிறது என்பதையே மன்ம் நினைக்கும்.  

 சாதாரண படங்களுக்கே பின்னனி இசையில் வெளுத்து கட்டுவார் நம்ம தலைவர்.இது திகில் படமல்லவா..இசையால் நம்மை மிரட்டி மிரட்டியே படம் பார்க்கவைத்திருப்பார்.அதிலும் நளினி கனவும் காட்சிகள் பின்னால் ஏதோ ஒன்று பயங்கரமான காட்சி இருக்கும் என்பதை உறுதிபடுத்தும்.

இப்படிபட்ட திகில் படத்திலும் அருமையான காதல் காட்சிகள் இருக்கிறது. நளினியின் அழகான முகமும் மோகனின் காதலை கையாளும் விதமும் இளமையான காதலை நம் கண்ணுக்கு விருந்தாக்குகின்றன.அந்த காதல் காட்சிகளை தன் ராஜ்ஜிய இசையால் வலுப்படுத்துகிறார் நம்ம தலைவர்.

இந்த வருடம் தலைவருக்கு மத்திய அரசு சிறந்த பின்னனி இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை கொடுத்து அந்த விருதுக்கே கௌரவத்தை சேர்த்தது.இதை 1977ம் ஆண்டே துவங்கியிருந்தால் இன்நேரம் நம் தலைவரின் வீட்டை 25க்கும் மேற்பட்ட தேசியவிருதுகள் அலங்கரித்திருக்கும்.இந்த படத்திலேயும் அப்படியொரு பின்னை இசையை அமைத்திருக்கிறார்.

இந்த வீடியோவை பாருங்கள்..

 



SONGS








காதலை அனுபவித்தவர்களுக்கு இந்த இசையின் பாதிப்பு 
கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்....



Tell a Friend

2 comments:

  1. படமும் பிண்ணனி இசையும் மிரட்டலகா இருக்கும். பாடல்களும் மிக இனிமைதான்! விழியிலே எனக்கு பிடித்த பாடல் நன்றி!

    ReplyDelete
  2. சூப்பரான பாட்டுங்க அது ..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...