மற்ற இசை அமைப்பாளரின் tuneஇல் தனது இசைக்லவையை சேர்த்து புதிய வடிவில் தருவதே remix எனப்படும்.இன்று ஒரு படத்துக்கு ஒரு பாடலாவது remix பாடல் வேண்டும் என்று இயக்குனர்கள் எல்லாம் அடம் பிடிக்கிறார்களாம்.இசை அமைப்பாளர்களும் எந்த பாடலை remix பண்ணினால் நன்றாக இருக்கும் என்று கிளி ஜோசியம் கேக்காத குறை தான்.
இருந்தாலும் கரும்பு திண்ண கூலியா என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல தான் அனுபவித்த பாடலை தலைவர் முன்னாலேயெ மாற்றி அமைக்கும் பாக்கியம் கிடைத்தால் விடுவார்களா? எத்தனை பாடல்கள் ..எத்தனை இசை அனைப்பாளர்கள்....சில பேர் எதையும் மாற்ற முடியாமல் புதிய பாடகர்களை வைத்து அப்படியே original பாடலை பாட வைத்து விடுகின்றனர். அட .. Remix பாடல்களை வைத்தே ஒரு பதிவு போடலாம் போல இருக்கே.. சரி அதை அப்புறம் பார்ப்போம் .
நம்ம தலைவர் remix செய்த பாடலும் ஒன்று இருக்கிறது. இதோ இந்த பாடலை கேட்டு இருக்கிறீர்களா? இல்லன்னு மட்டும் சொல்லிடாதிங்க..
இந்த பாடல் "அப்கார்" என்ற ஹீந்தி படத்தில் 1967 இல் வந்த பாடல். ஹிந்தியில் புகழ்பெற்ற Manna Dey பாடகர் பாடியிருக்கிறார். கல்யான்ஜி ஆனந்த்ஜி இசையில் வெளியான பாடல் இது.
பொதுவாகவே தனக்கு பிடித்த இசை அமைப்பாளர்களை மனதார பாராட்டும் குணம் உடையவர் நம் இளையராஜா .இந்த பாட்டில் ஒரு பாடலையே தன் கையில் எடுக்கும் அளவுக்கு கல்யான்ஜி ஆனந்த்ஜியின் இசை இவரை கவர்ந்திருக்கிறது.ஹிந்தியிலும் இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.விவரங்களுக்கு...இங்கே செல்லவும்..
நம்ம தலைவர் இசை அமைத்த அதே பாடல் இங்கே
தனக்கு பிடித்த பாடலை தன்னுடைய இசையை கலந்து வைரமுத்துவின் வரிகளை கோர்த்து சோகத்தின் உச்சியில் இருப்பவனுக்கு கட்டிஅனைத்து ஆறுதல் கூறி வாழ்க்கையின் அர்த்தங்களை புரியவைக்கும் பாடலாக நமக்கு தந்தார் நம் இசைக்கடவுள்.
இந்த பாட்டில் அனுசரணத்திற்கு முன்னால் வரும் interlude இசை மட்டும் எத்தனை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் என்று எனக்கெ தெறியாது .எனக்கு ரொம்ப பிடித்த இசையாக அமைந்திருந்தது.பாலுமகேந்த்திராவும் அற்புதமாக படம் பிடித்து காட்டியிருந்தார். வைர முத்துவின் வைர வரிகளில் ஒளிரும் அந்த பாடல் இங்கே...
இப்பொ தலைவர் இசை அமைத்ததை கல்யான்ஜி ஆனந்த்ஜி remix பண்ணிய பாடலை பார்ப்போம். எங்கோ ஒரு அறையில் உருவாக்கபட்ட இசையை மண்ணிலும் விண்ணிலும் பரவ விடுகின்ற வித்தையை நம் தலைவர் இன்னமும் நடத்தி கொண்டிருக்கிறார். அப்படி ஒரு பாடல் மைக் மோகனுக்காக 1983 இல் சுந்தர்ராஜன் என்ற இயக்குனர் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்த பாடல் தனக்கென உள்ள உயர்ந்த இடத்தில் அழகாக சுற்றிவந்து கொண்டுஇருக்கிறது. அந்த பாடல் இங்கே...
அந்த பாடலை அப்படியே உள்வாங்கி கொண்டு கல்யாண்ஜி ஆனந்த்ஜி தன்னுடைய பாணியில் செய்த பாடல்..Sri devi
நடித்திருக்கிறார்.ஹிந்தியில் இந்த பாடல் சக்கை போடு போட்டிருக்கிறது. இந்த பாடலை நம்ம பாலசுப்ரமணியத்திற்கு எதிராக , ஹிந்தியில் புகழ் பெற்ற கிஷோர்குமார் பாடிய பாடல் இது. இந்த பாடல் அங்கே...
"இசை வாழ .., நீ வாழனும் தலைவா".

அன்புள்ள சௌந்தர் அவர்களுக்கு ,என் பெயர் விஜயசேகர் ,தங்களது அங்கும் இங்கும் மிகவும் அருமை ,இதே போல் எனக்கு தெரிந்த பாடல்களை கூற விரும்புகிறேன் ,
ReplyDeleteபடம் -ஆயிரம் நிலவே வா -பாடல் -தேவதை இளம் தேவி
படம் -கீதா (கன்னடம்)-பாடல் -Kelade நிமகீக - http://www.youtube.com/watch?v=zFo6cmU8W2c&feature=ரேலடேத்
(இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்)