காற்றினிலே வரும் கீதம் படத்தில் வரும் இப்பாடலுக்கு வயது 34.
தமிழ் நாட்டில்
இந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று.ஜெயசந்திரன் அவர்களின் வசிகர குரலில் மனம் குளிரும் பாடல்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.படம் சரியாக போகவில்லை என்றாலும் பாடல்கள் படத்தை காப்பாற்றியது.
இதில் நடித்த முத்துராமன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை.அவர் மகன் கார்த்திக் முன்னனி கதா நாயகர்களில் ஒருவராக இருந்து இன்று கௌரவ நடிகராக மாறிவிட்டார்.
பாருங்க..மூன்றாவது தலைமுறை வந்தாச்சு..ஆனால் இப்பாடல் மட்டும் இன்னும் இளமையாக இருப்பதாகவே உணர்கிறேன்.
காண்பதற்கு மிகவும் அறிய இப்பாடல் இங்கெ..
இந்த பாடலின் பெருமையை சொல்லி முடிப்பதற்குள் ஆந்திர மாநிலத்தின் பாடல் போட்டிக்கு வந்து நிற்கிறது.
ராஜேந்திர பிரசாத்,ஷோபனா ஜோடிகளாக உள்ள இப்படத்தின் இயக்குனர் வெற்றிபடங்களுக்கு சொந்தமான வாம்சி ஆவார்.இவர் படத்திற்கு இளையராஜா இசை அமைத்தால் அந்த படம் நிச்சயம் வெள்ளிவிழா படமாக இருக்குமாம்.
ஆந்திராவில் மக்கள் நம்ம தலைவரை இசைகடவுளாகவே பார்க்கின்றனர்.அந்த அளவுக்கு தலைவர் மக்களை தன் இசையால் வருடி இருக்கிறார் என்பதுதான் நாம அறிய வேண்டிய ஒன்று.
"April 1st viduthala" என்ற படத்தில் வரும் இப்பாடலில் மாற்றங்கள் செய்யபட்டிருகிறது.பாடலின் ஆரம்ப இசைமுற்றிலும் வித்தியாசம் . தமிழ் பாடலின் வேறொரு சுவையை இந்த பாடலில் அனுபவிக்கமுடிகிறது.ஆந்திர மானிலத்திலும் இந்த பாடல் மிகவும் பிரபலம். இதொ அந்த பாடல் இங்கே
No comments:
Post a Comment