Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, July 2, 2011

AZHAKAR SAMIYIN KUTHIRAI REVIEW


அப்படியே 80 களில் வாழ்வது போன்ற ஒரு சந்தோசம் இந்த படத்தை
பார்க்கும்போது..
அதற்காகவே இயக்குனருக்கு ஒரு "ஓ" போடலாம்.





அழகர்சாமியின் குதிரை ...

பருவமழை தவறியதால் ஊரில் வறட்சி தலைவிரித்தாடுகிறது.பஞ்சம் பிழைக்க ஊர்மக்கள் வெளியூர் செல்லவேண்டிய நிலை ....பஞ்சாயத்தார் கடவுள் அழகர்சாமிக்கு திருவிழா நடத்தி மழையை வரவைக்க முடிவு செய்கின்றனர்.
வெள்ளையான பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்ற லட்சியத்தோடு பெண்ணை தேடிவரும் கருப்பான அழகர்சாமியாக நடித்த அப்புகுட்டிக்கு அடிக்கிறது லாட்டரி.சரண்யாமோகனுக்கு பார்த்தவுடனே அப்புகுட்டியை பிடித்துபோய்விடுகிறது..குதூகளத்தில் திருமணவேலைகளை ஆரம்பிக்கிறான் இந்த‌ அழகர்சாமி

கடவுள் அழகர்சாமியின் குதிரை காணாமல் போகிறது..அதே நேரத்தில் (அப்புகுட்டி) அழகர்சாமியின் குதிரையும் காணாமல் போகிறது...
கடவுள் குதிரை கிடைக்கவில்லை என்றால் திருவிழா நின்று போகும் ...அப்புகுட்டி குதிரை கிடைக்கவில்லை என்றால் திருமணம் நின்று போகும்..

அப்புகுட்டியின் குதிரை வழிதவறி மரகுதிரைக்காக தேடிக்கொண்டிருக்கும் கிராமத்தில் நுழைந்து விடுகிறது.
கடவுளே மரகுதிரைக்கு பதிலாக நிஜ குதிரையை அனுப்பிவைத்திருப்பதாக நம்புகின்றனர்.
நிஜகுதிரையை வைத்தே திருவிழாவை நடத்தி முடிக்க முடிவு செய்யபடுகிறது.
தவற விட்டகுதிரையை தேடிவந்த அப்புகுட்டிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
பல்வேறு போராட்டங்களுக்கிடையில்..
தன் குதிரையை மீட்டு சென்று தனக்காக உயிரைவிடவும் தயாராக இருந்த சரண்யாமோகனை கைப்பிடித்தானா..?ஊர்மக்கள் குதிரையுடன் திருவிழாவை நடத்தி மழையை பெற்றார்களா...?

இதுதான் கதை.




கதை 80களில் நடப்பது போல எடுத்திருப்பதால் நவீனமயத்தை மொத்தமாக அறுவடை செய்திருக்கிறார்கள். ஒரு ரூபாய் ,இரண்டு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பது போன்ற காட்சிகள் முதல் 'அலைகள் ஓய்வதில்லை' படம் தியேட்டரில் ஓடிகொண்டிருப்பது போன்ற  காட்சிகள் வரை அப்படியே தலைவரின் ...இல்ல தமிழ் நாட்டின் பொற்காலத்தை கண்முன் நிறுத்துகின்றன.




என்றைக்கு வரும் அந்த டைட்டில் மியுசிக் என்று எதிர்பார்ப்புடன் கேட்ட இந்த இசை , நம் கற்பனையை எங்கெங்கோ இழுத்து செல்கிறது.. இந்த இசையை கேட்கும் ஒவ்வொருவினாடியும் தலைவர் அப்படியே நம் எண்ணங்களில் தெரிவது உறுதி.

அதுவும் அப்புகுட்டி தோன்றும் காட்சியில் இந்த இசை ஒலிக்கும் போது.. இளையராஜாவின் ராஜாங்கம் என்றுமே நம்மை கைவிடுவதில்லை என்பதும்  உறுதிபடுகிறது





கதைக்கு தேவையான கிராமம் ...கிராமமே செட் என்பதை நம்பவெ முடியவில்லை.
அழகான ஒளிப்பதிவு..இயற்கையை இயற்கைக்கு தெரியாமலே களவாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
கதை பாஸ்கர் சக்தியோடது. இயக்கும் பொறுப்பை சுசீந்திரன் சிறப்பாக செய்துள்ளார்.




இந்த படத்தில் இன்னொரு ஜோடியும் உள்ளது.ராமகிருஷ்ணன் மற்றும் தேவியின் காதல் ரசிக்கவைக்கிறது.
இவர்களுக்கான பாடல் வரிகள் இவர்களுக்காகவே எழுதபட்டதோ என்னவோ..அத்வைதா(தேவி) பூவைபோலவும் ,பிரபாகரன்(ராமகிருஷ்ணன்) தென்றலை போலவுமே காட்சிதருகிறார்கள்.


இவர்கள் பேசிகொள்ளும் ஜாடைபேச்சிகள் ருசிகரமானவை,
'சினிமாவுக்கு போகலாம்' 
'எப்போ?'
'இப்போ'
'சரி நீ போ நான் வரேன்' என்று சைகை காட்டும்போது நேர்த்தியான நடிப்பு அத்வைதாவோடது.







 .



இவர்களை தவிர ஏகப்பட்ட கேரக்டர்கள் இந்த படத்தில் உலா வருகின்றனர்.எல்லொருக்கும் முக்கியதுவம் கொடுத்திருப்பதுதான் ஆச்சர்யத்தை கொடுக்கிறது 
அதில் குறிப்பிடும் படியானவர் மைனர்..
இவரின் இந்த ரூட் விடும் ஸ்டைலை படத்தில் அங்கங்கே கண்டு ரசிக்கலாம்..




அப்புறம் அந்த சின்னபையன் ..அவனுக்கென ஒரு கேரக்டர்..இவனும் படத்தை ஒட்டியே வருகிறான்.




மலபார் கோடங்கி மற்றும் இந்த போலிஸ்காரனின் சிரிப்பு வெடிகள் தியேட்டரில் வெடித்தபடி இருக்கின்றன.



தன் மகளை திருப்பூருக்கு அனுப்பும் இந்த அம்மாவின் கேரக்டர் சென்டிமென்டுக்காக ..





இவர்கள் மட்டுமல்லாது ..

பிரசிடன்டின் மச்சான் ..(வில்லன்),
குதிரையை களவாடும் அந்த ஆச்சாரரி,
உள்ளூர் கோடங்கி மற்றும் அவன் சம்சாரம்,
போலிஸ் இன்ஸ்பெக்டர்,
என நீண்டு கொண்டே போகிறது கதையின் முக்கிய பாத்திரங்களின் லிஸ்ட்.

இவர்கள் அனைவரையும் ஒன்று சேர அமைக்கபட்ட கதை ...படம் பிடித்த விதம்...காட்சிஅமைப்புகள் ..எல்லாவற்றுக்கும் மேலாக அதை இயக்கிய விதம்  என பாராட்ட எகப்பட்ட அம்சங்கள் இருந்தாலும்...

இந்த படத்தை நான் பார்க்க முக்கிய காரணமாக இருந்தது ..தலைவர் இந்த படத்தில் பணியாற்றியதுதான்


அந்த TITLEல் 
இசை "இசைஞானி இளையராஜா"
 என்று வராமல் இருந்திருந்தால் இந்த படத்தை நான் நிச்சயம் பார்த்திருக்க மாட்டேன்
.தற்போது உள்ள சினிமாக்களில் ஆபாசமும் வக்கிரமும் பேயாட்டம் போடுகின்றன.
இன்று இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள்(ரீமிக்ஸ் பாடல்கள்) 
அதனால்தானோ என்னவோ தியேட்டர் பக்கம் போகவே மனம் வெறுக்கிறது.

நான் 
என் தமிழ் நாடு 
என் தமிழ் மக்கள் 
தமிழ் பண்பாடு ,கலாச்சாரம்
 இதையெல்லாம் நேசித்து..இயற்கையோடு விளையாடி..இயற்கையை நேசித்து 
உயிருள்ள இசையை அனுபவித்து வாழ்ந்த என் போன்ற 80கால நண்பர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமே..


மொத்தத்தில் அழகர்சாமியின் குதிரை போல ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்ல வில்லை
அழகர் சாமியின் குதிரை போல ஒரு படத்தைபார்த்தே ஆக வேண்டிய‌  காலம் இது என்று மடடும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்





Tell a Friend





4 comments:

  1. கடைசியில் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை நண்பரேABIRAM

    ReplyDelete
  2. வருக அபிராம் அவர்களே

    ReplyDelete
  3. தல மிக நன்றாக வந்திருக்கிறது பதிவு..உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ;)

    \\இந்த படத்தை நான் பார்க்க முக்கிய காரணமாக இருந்தது ..தலைவர் இந்த படத்தில் பணியாற்றியதுதான்
    \\

    அதே அதே ;)

    ReplyDelete
  4. ஒரு வாரம் பட்ட பாடு இன்று நண்பர்களின் சந்தோஷத்தில் கரைந்து போனது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...