Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Wednesday, March 28, 2012

MANO 25 YEARS OF MUSICAL JOURNEY





1986ஆம் ஆண்டு வெளிவந்த 'பூவிழி வாசலிலே' படத்தில் இடம் பெற்ற 'அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே' என்ற இளையராஜாவின் இசையில் உருவான பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமான மனோ, இதுவரை 16 மொழிகளில் 22000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி வருகிறார்.

இவருடைய குரலில் ஒலித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'அட உச்சஞ்தலை உச்சியிலே', 'தூளியிலே ஆடவந்த', நாயகன் படத்தில் இடம்பெற்ற 'நீ ஒரு காதல் சங்கீதம்',எங்க ஊரு பாட்டுகாரனின் செண்பகமே செண்பகமே போன்ற புகழ்பெற்ற பாடலகளோடு சமீபத்தில் வெளியான மங்காத்தா படத்தில் இடம்பெற்ற 'மச்சி ஓப்பன் தி பாட்டில்' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல்களாகும்.
ஒரு பாடகராக மட்டும் இன்றி ஒரு நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் மனோ. கமல்ஹாசனுடன் இணைந்து 'சிங்கார வேலன்' படத்தில் நடித்த மனோ, 250 நாடகங்களிலும், 3000 இசை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் மனோ காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகின்றது. மனோவின் இந்த 25 வருட கலையுலக சாதனையைப் பாரட்டும் வகையில், 'சாதகப் பறவைகள்' சங்கருடன் இணைந்து 'கல்யாணகல்பா' நிறுவனம் சென்ற ஜனவரி 26ஆம் தேதி 'மனோ-25' என்ற தலைப்பில் பிரமாண்டமான ஒரு விழாவை நடத்தி முடித்தார்கள்

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 'சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர் மனோவின் பாடல்களுக்கு இசையமைக்க, பிரபல பாடகர்களும், பாடகிகளும் பாடி அசத்தினார்கள். மேலும் மனோவைப் பாராட்டி பேசுவதற்காக தயரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர், பாடகிகள், இசையமைப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் ஆர்வமுடன் கல‌ந்து கொண்டார்கள்.

விஜய் TVயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இந்த வீடியோவில் கண்டுகளிக்கலாம்..





Tell a Friend

1 comment:

  1. மனோவின் முதல்பாடல் சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் தேன்மொழி எந்தன் தேன்மொழி என்ற பாடல்தான் என்று கேள்விப்பட்டேன், எது உண்மை?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...