ACTOR-K.BAKYARAJ
ACTRESS-KALPANA ,ANU
MUSIC-ILAYARAJA
DIRECTION-K.BAKYARAJ
YEAR-1985
என்னமோ தெரியல இந்த படத்துல இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
அட மச்சமுள்ள பாடல்தான் ...
அடிபொலி என்று மலையாளத்தில் சொல்வார்களே அந்த மாதிரி அடிச்சு தூள் கிளப்பிய பாடல்தான் இந்த பாடல் .
பிடிப்பதற்கான காரணம் இந்த பாடலுக்கு எடுத்து கொடுக்கும் "நகுறுதனா திறனணா "வாக இருக்குமோ ..? என்ன உச்சரிப்பு அது .
அந்த குரலே ஒரு இசைக்கருவியாகி விட்டதே...அது எப்படி..
அத்தினி ..சித்தினி ...பத்மினி...சங்கினி...அத்தனை பேரும் அழகு..இது எப்படி?
s.ஜானகி அம்மாவின் குரல்பற்றி சொல்ல பல பாடல் இருந்தாலும் s.p.ஸைலஜாவின் குரலை ரசிக்க ஆரம்பித்தது இந்த பாடலில் தான்...கீச்சுனு ஒரு குரல்...
என்னைக்கும் இல்லாமே" என்ற வரியில் இந்த வார்த்தைகள் மட்டும் எனக்கு பொருந்திபோனது போங்கள் ..என்னைக்கும் இல்லாத சுகத்தை இந்த பாடலில் அனுபவித்தேன்.
interlude-இல் நகுறுதனா திறனணா வரும் போது அப்படியே கத்திவிட்டேன் உணர்ச்சி வசபட்டுதான் போனேன், உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல்
சரணம் முடிந்தவுடன் காமனைவெல்ல துடிக்கிறார் பாக்யராஜ். அவருக்குதான் என்ன ஒரு வரவேற்பு.. இசையால்.. அப்படியே எழுந்து பறக்கலாம் போல இருந்தது..
நீங்க Drums வாசிப்பவரா...அட நானும் உங்க கட்சிதாங்க ..drumsஇல் நான் பிண்ணியெடுப்பேன்...இந்த பாடலில் drumsஐ மட்டும் கவனித்தேன்... நீங்கள் கவனித்தீங்களா...
கிழிச்சியிருக்கிறார்ல.
அனுபல்லவியில ஜானகி,ஸைலஜாவுடன் பாலுசாரும் சேர்ந்து கும்மியடிக்கிறார்..படத்தில் பாக்யராஜ் நான்கு பெண்களுடன் கூத்து கட்டுகிறார்..
ஒண்ணு மட்டும் சொல்லணும்
காமபாடலை காமனின் துணையோடு பாடுகிற மாதிரி நினைத்தது அருமையான கற்பனைதிறன்.
இவரது கற்பனைக்கு இசையென்ற முதுகெலும்பை கொடுத்து காற்றையும் ஊதினார் இளையராஜா.
மீண்டும் தன் குழுவுடன் சேர்ந்து பாக்யராஜ் காட்சியமைப்பு மூலம் உடம்பை கொடுத்து பாடலை உயிராக்கினார்கள்...
25 வருஷம் ஆச்சு இந்த பாடலுக்கு.. நம்புவீர்களா..?
songs download
No comments:
Post a Comment