தலைவருக்கு தேசிய விருது
செய்தி கேட்டதும் மெய்சிலிர்த்து போனேன்.
பழஸிராஜா படத்திற்கான பின்னனி இசைக்கு நம் தேசிய விருது.
சாகர சங்கமம், சிந்துபைரவி, ருத்ரவீணா படங்களுக்காக முதல் மூன்று விருதுகள் தலைவருக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது
.
பின்னனி இசையில் தானே ராஜா என்பதை தலைவர் ஊர்ஜிதபடுத்தும் செயல் இது.
இந்த படத்தின் பாடல்களுக்கு மக்கள் அளித்த விருதுகள் அவர் வீட்டின் கதவினை இன்னும் முட்டி கொண் டுதான் இருக்கின்றன.
அவர் வேண்டுமானாலும் விருதுகளை நேசிக்காமல் இருக்கலாம். அவரின் இசையை உயிராய் நேசிக்கும் நம்மை போன்ற ரசிகர்களுக்கு இந்த விருதுகள்,
அவரை அடிக்கடி தொந்தரவு செய்ய வேண்டும் என்ற ஆசையைதான் தருகிறது.
இது மட்டுமல்லாமல் பெருமைக்குறிய ஒரிஸ்ஸாவின் அக்ஷய சம்மான் விருது தலைவருக்கு வழங்கப்படுகிறது. இசைத்துறையில் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தரப்படும் விருது இது!
அவர் வேண்டுமானாலும் விருதுகளை நேசிக்காமல் இருக்கலாம். அவரின் இசையை உயிராய் நேசிக்கும் நம்மை போன்ற ரசிகர்களுக்கு இந்த விருதுகள்,
அவரை அடிக்கடி தொந்தரவு செய்ய வேண்டும் என்ற ஆசையைதான் தருகிறது.
சாதரணமாகவா அவருக்கு வாழ்த்து சொல்வது, பட்டய கிளப்பி வாழ்த்து சொல்லவேண்டாமா?
இந்த வீடியோவை பாருங்கள்.
விருது குறித்து இசைஞானியின் பேட்டி:
”நான் ஏற்கனவே மூன்று நேஷனல் அவார்டு வாங்கியிருக்கிறேன். இந்த விருது பின்னணி இசைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது இசையமைப்பாளருக்கான விருது. இதில் நான் என்ன பீல் பண்றது. எல்லா படத்துக்கும் ஒரே மாதிரியான உழைப்பைதான் கொடுக்கிறேன். நல்லா இல்லை, நல்லா இருக்கு என்பது எல்லாம் மைன்ட்க்கு வெளியிலிருந்துவருகின்றதுதான். எந்த ஒரு படத்தையும் வொஸ்ட், பெஸ்ட்னு பிரிக்கிறது கிடையாது.
நான் ஒரு படத்தை பார்த்துட்டு புரொடியூஸர்கிட்டயும், டைரக்டர்கிட்டயும் சொல்றது ஒண்ணுதான். இதுதான் என்னுடைய முதல் படமாக பீல் பண்றேன்னு சொல்வேன். மூன்று மணிநேரம், இருபது நிமிஷம் படம் இருந்தது. தயாரிப்பாளர் புட்டேஜை குறைக்க தயாராக இருந்தார். ஹரிஹரன் ஸார் சொன்னார். இந்த படத்தில் குறைப்பதற்கு எடிட்டிங் டீமுக்கு சொல்லுங்கன்னு சொல்லிட்டார். அவங்க படத்தை மூன்று மணிநேரத்திற்கு கொடுத்தாங்க.
இப்போ என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டாங்க. எனக்கு சுதந்திரமா டைம் கொடுங்க. சிம்பொனி ஆர்ட்டிஸ்ட்டும் வேணும்னு கேட்டேன். அவங்க சொன்னாங்க. இல்லை ஸார்,இந்த படத்திற்கு எங்களுடைய பட்ஜெட் ஏற்கனவே அதிமாகிடிச்சி. இனிமேல் இந்த படத்திற்காக பேக்ரவுண்ட் மியூஸிக்காக பெரிய செலவு செய்ய முடியாதுன்னு சொன்னாங்க. இதற்கு அடுத்த படம் பண்ணுவீங்களா, இல்லையா என்று கேட்டேன். எனக்கு சிம்பொனி ஆர்ட்ஸ் வேணும்னு அப்போ உறுதியாக இருந்தேன்.
இந்த கிரடிட் எல்லாம் டைரக்ட்ர் ஹரிஹரனுக்கும், தயாரிப்பாளருக்கும்தான். நான் காலையில் 4.30 மணியிலிருந்து இரவு பத்து மணிவரை டீடெய்ல்ஸ் எழுதி கொடுத்தேன். அதை காப்பி பண்ணி சரியா எல்லாருக்கும் கொடுத்திருந்தாங்க. அதை சிம்பொனி ஆர்ட்ஸ் வாசித்ததும் அதைக் கேட்ட இயக்குநர், “நான் என்னன்னு பரையும்”னு சொன்னார். “ஸார் டிசைட் செய்தங்கில், பின்னே பரைய வேறுண்டோ” ன்னாரு. “நீங்கள் எடுத்த டிசைன் வல்லிய கரைட்டானு” சொன்னார்.
இந்த விஷூவலுக்கு இந்த ஆர்க்கெஸ்ட்ரா இல்லைன்னா மரியாதையே இல்லாம போய்விடும். இதை அவர் ஒவ்வொரு ரீலுக்கும் சொல்லிகிட்டே வந்தார். மத்திய அரசில் இருந்து இதுவரை இசையமைப்பாளருக்கு என்றுதான் விருதுகள் வந்திருக்கிறது. பின்னணி இசைக்குன்னு ஒரு அவார்டு கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை.
பழைய ஒரு நவ்ஷாத் பாடலோட டியூனை பேஸ் பண்ணி பாட்டு போட்டாங்க. அந்த பாடலைப் பாடிக் காட்டினாங்க. ஹரிஹரன் அந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாடல் சரியா இருக்குமான்னு சொல்லுங்க. அப்படின்னுட்டு நான் எதையும் மாத்தாம அவங்களோட வரிக்குஒரு டியூனை போட்டேன். நான்கு நாட்கள் ரெக்கார்டிங்க்கு பிறகு முஸ்லீம் நண்பர்கள் சொன்னாங்க ஸார் பெஸ்ட் ஸாங் ஸார்னு. ரொம்ப அழகான முஸ்லீம் பாடல்னு சொன்னாங்க.
நான் பால்டிக்ஸ்க்காக பேசினேன். நான் ஹிந்து. இதுக்கா வொர்க் பண்றேன்னு எதாவது பீல் இருக்கா, ஏன்னா அவங்களுடைய உண்மையான பீல் வரணும் என்பதற்காக.
இதெல்லாம் மதங்களுக்கு அப்பாற்பட்ட பீலீங். இதெல்லாம் மனசில் நடக்கணும். பதினைந்து நாள் எழுதியது ரொம்ப பெரிய அனுபவம். அதுக்கா அவார்ட் கிடைத்ததுன்னு நான் சொன்னால் என்னை நானே கொச்சைப்படுத்திக்கொண்டது மாதிரி ஆகிவிடும். என்னுடைய மனது எதுக்காகவும் டைவர்ட் ஆகாது. அது இசையை மட்டும்தான் விரும்புகிறது. அவார்டை அல்ல.
ஹரிகரனை ஒரு விஷயத்துக்கா நான் அப்ரிசியேட் பண்றேன். இவர் மலையாளத்தில் கிடைத்த எந்த ஒரு சிறந்த இயக்குநருக்கான விருதையும், இவர் போய் வாங்கவில்லை.“இளையராஜாவின் வொர்க்கை நீங்கள் ரெகனைஸ் செய்யவில்லை. அதனால் ஞான்வாங்வில்லை” என்பவர். எந்த அவார்டுக்கும் போக மாட்டார்.
இதுக்கா நான் நன்றி சொல்லணும்னா. இந்த எல்லா வலிகளையும் பொருத்துக்கொண்ட தயாரிப்பாளர் பிரவீன், இயக்குநர் ஹரிஹரனுக்குதான்.
ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க?
ரசிகர்களுக்கு எப்பவும் என்னுடைய இசைதான்.
ஒவ்வொரு படத்திறகும் களம் மாறுகிறதே?
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டீரிட்மென்ட். எவரிடே ஐ ஸ்டார்ட் த மியூஸிக்கல் ரைட்டிங் மெக்கானிக்கலி. நான் 7.30 மணிக்கெல்லாம் எழுதி முடித்திடுவேன். அப்படி முடிச்சிட்டா. அந்த சீனுக்கு இது எப்படி அந்த பீலிங்கை கொடுக்க போகிறதுன்னு எனக்கு தெரியாது. எனக்கு தெரியும் என்னாலதான் அப்படி வருதுன்னு நினைக்க முடியாது. அது அந்த பர்ட்டிக்குலர் டைமுக்கு. அது எப்படி மேச் ஆகுதுன்னா அது சரஸ்வதிக்குதான் தெரியும். மேச் ஆனாலும் ஓகே. மேச் ஆகலைன்னாலும் ஓகே.
இப்போது உள்ள இசை அமைப்பு பற்றி?
இப்போது ஒன்றும் இல்லை. யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம். இப்போது இருக்கின்ற ஜெனரேஷனிலும் அதுக்கு வேலியூவே கிடையாது. இப்போ புருவம் எல்லாம் சேர்த்து மொட்டை அடித்த மாதிரி கிளினா இருக்கு. நான் என்னுடைய கிராமத்தை விட்டு கிளம்பி வந்தபோது யாரை நம்பி இங்கே வந்தேன். இங்கே இசைமேதைகள் இருந்தார்கள். அவர்களின் அங்கவஸ்திரமும், சந்தனமும், ஜவ்வாதும்,
பக்தியும் திறமையும் பார்க்க அவ்வளவு தெய்வீகமா பிரமிப்பா இருக்கும். இப்போது உள்ளது மாதிரி அப்போது இருந்திருந்தால், நான் வந்திருக்க மாட்டேன். எவ்வளவு மகான்கள் இருந்த மண் இது.
பக்தியும் திறமையும் பார்க்க அவ்வளவு தெய்வீகமா பிரமிப்பா இருக்கும். இப்போது உள்ளது மாதிரி அப்போது இருந்திருந்தால், நான் வந்திருக்க மாட்டேன். எவ்வளவு மகான்கள் இருந்த மண் இது.
இப்போ எதிலையுமோ ரியல் இல்லை. கேமராவில் போட்டி இருக்கு. ஆனால் அதில் டெக்னிக்கலா இருக்கா இல்லை. கிராபிக்ஸ் பண்றாங்க. ரியல் ஆர்ட்டிஸ்டை கூடகிராபிக்ஸ்ல கொண்டுவர நினைக்கிறாங்க.
நான் லேபர் கிடையாது. பணத்துக்கா வொர்க் பண்ற லேபர் கிடையாது. அதைப் புரிஞ்சுக்கோங்க. நான் ஒரு ரியல் மியூசியஸனாக பீல் பண்றேன். கமர்சியல் என்பது டோட்டலா வேற ஒண்ணு இப்போ நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்கம்போஸர் என்கிற வார்தையை நீங்கள் யாரிடம் பயன்படுத்தணுமோ அவங்களிடம் மட்டும் கேளுங்க.”
No comments:
Post a Comment