Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Showing posts with label ilaiyaraja's rare collections. Show all posts
Showing posts with label ilaiyaraja's rare collections. Show all posts

Friday, March 23, 2012

THENDRAL VARUM THERU FILM REWIEW


தென்றல் வரும் தெரு




கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தும் கதை..அழகான தலைப்பு.
இசை இசைஞானி இளையராஜா.
படத்தில் ரமேஷ் அரவிந்த் ,கஸ்தூரி மற்றும் அபிமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் கதை ,திரைக்கதை ,வசனம் ,பாடல்கள் ஆகியவற்றை கவிஞர் மு.மேத்தா கவனிக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவிற்காகவும்
சண்முகம் எடிட்டிங்காகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்..இயக்கம் கௌரி மனோகர்

கல்லூரியை சுற்றிவரும் கதையில் கல்லூரி Chairman ஆக போட்டியின்றி தேர்வாகிறார் கஸ்தூரி.அதேகல்லூரியில் படிக்கும் கவிஞன் ரமேஷ் அரவிந்த்.
ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள் ஆனால் சொல்லிகொள்ள முடியவில்லை...

தந்தியில் சொல்ல நினைத்த காதலன் ,தந்தியை அனுப்பிவிட்டு வருகையில் கஸ்தூரி தன் திருமண பத்திரிக்கையை நீட்டுகிறார்...இதுக்கு மேல் என்னென்ன நடக்கும் என்று ஒரு சாதாரண சினிமா ரசிகனால் கூட கதையை கணித்து விடலாம்.

ஒரே ஒரு காட்சியை கூட நாம் சினிமா பார்ப்பதை நினைவு படுத்தவில்லை.மாறாக இந்த படத்திற்காக நாம் வீணாக்கிய நேரத்தையும் செலவு செய்த பணத்தையும் தான் நினைவுபடுத்துகின்றன.
சந்தோஷபடும் ஒரே விஷயம் இசைஞானி ..
படத்தையே இசைஞானியின் போட்டோவை முதன்மை கொண்டுதான் துவங்குகிறார்கள்.


பாட்டுக்கள் அத்தனையும் மெஹா hit ...அந்த காலத்தில் மட்டுமல்ல ..இந்த காலத்திலும் ....இந்த படத்தின் காட்சிகள் சரியில்லாத காரணத்தினாலோ என்னவோ தலைவரின் ஈடுபாடு பின்னனி இசையில் குறைவாகவே இருந்தது.ரமேஷ் அரவிந்தும் கஸ்தூரியும் சொன்னதை செய்து விட்டு போகும் பொம்மைகளாக காட்சியளிக்கின்றனர்.சின்னி ஜெயந்த் ,சார்லி என கல்லூரி பட்டாளங்களே நடித்திருந்தாலும் ஆர்வமோடு எதிர்பார்த்த கல்லூரி கலாட்டாக்களும் missing..


மொத்தத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு முறை பார்க்கலம்...சுமார்....its ok...Nice film ..
 என்றெல்லாம் ஒருவர் சொன்னால் அவருக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டும் இந்த படத்தின் இயக்குனர் கௌரி மனோகர்..


இதோ அந்த படத்தின் பாடல்கள்...






பாடல்களை கேட்கவும் செய்து கொள்ளவும் இங்கே செல்க‌

Thendral Varum Theru - Shakthi.fm Listen, Download & Enjoy Tamil, Hindi MP3 Songs & Albums


இந்த படத்தை பற்றி இன்று நாம் கவனிக்க காரணம் அதில் நம் தலைவரின் பெயர் இசை என்ற பொறுப்புக்கு கீழே வருவதால்தான்... 




Tell a Friend




Saturday, February 25, 2012

SINGER JEYACHANDRAN HITS-VOL 1





ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான ரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தவர். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஓர் போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராக பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராக தேர்வு பெற்றார்.
விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.

திரு.ஜெயசந்திரன் அவர்கள் திரு MSVசாரோட இணைந்து தன் இசை வாழ்க்கையை ஆரம்பிதிருந்தாலும் ..தலைவர் இசைஞானியோடு கைகோர்த்த பின்னரே அவரின் முழு சக்தியும் மக்களை சென்று சேர்ந்தது.

தலைவரோட இசையில் ..

1.கீதா சங்கீதா
2. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
3. மஞ்சள் நிலாவுக்கு
4.பூவ எடுத்து ஒரு
5.தாலாட்டுதே வானம்
6. சித்திரச் செவ்வானம் சிவக்கக் கண்டேன்
7. தவிக்குது தயங்குது ஒரு மனது

போன்ற பல சிறந்த பாடல்களைப் பாடிய ஒரு அதிசயப் பாடகர் ஜெயச்சந்திரன்.

இதுவரை ஒரு தேசியவிருதும் (இந்தியா), நான்கு கேரள மாநில விருதுகளும், நான்கு தமிழ்நாட்டு மாநில விருதுகளும் பெற்றுள்ளார். இப்படி விருதுகள் வாங்கினாலும் அவர் அவருக்குரிய இடத்தைப் பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.


 பாலு சாரின் குரலுக்கும் மனொ அவர்களின் குரலுக்கும் உள்ள அதே வித்தியாசம் ஜேசுதாஸ் அவர்களின் குரலுக்கும்
ஜெயச்சந்திரன் அவர்களின் குரலுக்கும் இருக்கும்.பல பாடல்களை இவர் பாடினாரா இல்லை ஜேசுதாஸ் பாடினாரா என்று பிரித்தெடுப்பது சுலபமானது அல்ல.

யேசுதாசிடம் இல்லாத ஒரு கவர்ச்சி அவர் குரலில் உண்டு. மெல்லிய சோகம் இழையோடும் பாடல்களை இவர் பாடும் போது அந்தப் பாடல்கள் பெரும் புகழடைந்திருந்தன."வைதேகி காத்திருந்தாள்" படத்தின் பாட்டுக்களின் மூலம் இவர் புகழின் உச்சிக்கே சென்றார் எனலாம்.





இன்றும் தமிழ் மட்டுமல்லாது மலையாள மக்களின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது ஜெயச்சந்திரன் அவர்களின் தமிழ் பாடல்கள்..

திரு ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல்களை கேட்க...
(சில வினாடிகளில் பாடல்கள் தோன்றும்..அதுவரை காத்திருக்கவும்..)



தரவிறக்கம் செய்து கொள்ள...


    உள்ளம் கவர்ந்த பாடகனை ஒரு பதிவில் வருணிப்பது இயலாத‌
 காரியம்..தொடர்வோம் இன்னொரு பதிவிலும்..



Tell a Friend




Monday, December 12, 2011

பாடகர் கிருஷ்ணசந்தரும்.. இசைஞானி இளையராஜாவும்..




மளையால பாடகரான கிருஷ்ணசந்தருக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான்..தமிழில் அவர் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பரான பாடல்கள்.இவரின் குரலுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.
அதிகம் புகழை பெறாத மனிதர் ..ஆனால் இவரின் பாடல்களுக்கு அந்த குறையில்லை.

கிடைத்த அறிய வாய்ப்பில் ஜானகி அம்மா,சுசீலா அம்மா,உமா ரமணன் அவர்கள்,சித்ரா,சசிரேகா,ஸைலஜா என அனைத்து பாடகிகளுடனும் டூயட் பாடி தள்ளியிருக்கிறார்.

அவரை தமிழ் சினிமா மறந்திருக்கலாம்
ஆனால் வானொலிகள் அவரை மீட்டு தந்திருக்கின்றன.

இதோ அவர் தலைவர் இசையில் தமிழுக்காக பாடிய ஒரு டஜன் பாடல்கள்



80களில் சிறந்த பாடல்கள் என்று ஒரு மாலை தொடுத்தால் அதில் இவருடைய பாடலும் ஒரு ரோஜா மலராக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை ..





Tell a Friend





Wednesday, October 12, 2011

ஓ எந்தன் வாழ்விலே பொன்விழா


ஆயிரகணக்கில் நாட்களை கழித்து ஒரு நாள் இந்த பாடலை YOUTUBEஇல் பார்க்க நேர்ந்தது
என்னமோ தெரியவில்லை அடிககடி இந்த பாடலை பார்க்க தோன்றியது

நானும் பார்த்து வந்தேன்...மனசுக்குள் ஒரு சந்தோஷம்.
இனம் புரியாத ஈர்ப்பு இந்த பாடலின் மேல் எனக்கு.


இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம்
இசைஞானியின் பாதிப்பு என்க்குள் பூகம்பமாய் வெடித்ததை உணர்ந்தேன்.

ஒரு பெண்ணுக்குண்டான சந்தோஷத்தை இப்படி கூட பாட்டில் எடுத்து வர முடியுமா?
வயலினும் கித்தாரும் கலந்த கலவை முன்னரெ வரும் பொதே பட்டம்பூச்சிகளாக பெண் மனம் பறக்க போகிறது என்பதை
உணர்த்துகிறதே.

இந்த பாடலை பாடும் போது நடிக்கிற நதியாவின் அழகான முக பாவங்களை பார்க்கதூண்டுகிறதே.


எத்தனையோ முறை இந்த பாடலை பார்த்து விட்டேன் ....கேட்டும் விட்டேன்.
இந்த பாடலை பாடிய ஜானகி அம்மாவின் குரலை ரசிக்கின்ற அந்த இசைதாகம் மட்டும் அடங்கவே இல்லை.



"எதுவுமே வேண்டாம்... மனம் நிம்மதி மட்டுமெ பொதும்" என்று ஏங்கும் இரவு பொழுதில் ஒரு முறையாவது பார்க்காமல் நான் தூங்குவதெ இல்லை.

நீங்களும் பாருங்களேன்





இந்த பாடல் மட்டுமல்ல பதிவின் நோக்கம்...

இந்த பாடலை upload செய்த ராஜேஷ் என்ற நண்பரின் சேவையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

சுமார் 500க்கும் மேற்பட்ட பாடல்களை upload செய்து இருக்கிறார்.

                                 http://www.youtube.com/user/RajsMed

நாம் கேட்பதற்கே அரிதான பல பாடல்கள் இங்கே வீடியோவாகவே இருக்கிறது.
மலைத்து போய் நின்றேன் என்றுதான் சொல்லவேண்டும்.

"நேரமிருந்தால் இங்கே செல்லுங்கள் ...
அப்படி சென்று விட்டால் மற்ற வேலைகளுக்கு உங்களால் நேரமே ஒதுக்க முடியாது."
                                           




Tell a Friend



Wednesday, September 7, 2011

தென்றல் காற்றும் ...இன்னிசை மழையும்..





முன்பெல்லாம்..
என்ன ..இப்படி ஆரம்பித்தவுடன் ஏதொ ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் செல்ல போவதாக நினைத்துகொள்ள வேண்டாம்.
இதோ ஒரு 15 வருடங்களுக்கு முன் தான் செல்கிறேன்

என் ஊரை விட்டு 5km தூரம் வெளியே சென்றாலே இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்புக்கு பதிலாக வெயில் என ஐந்து பஞ்ச பூதங்களுடனும் விளையாடி நம் ஆசையை தீர்த்து கொள்ளலாம்.

சாலையின் இரு புறங்களிலும் பரந்து விரிந்து கிடந்த வயல் வெளிகள் , நீர் நிலைகள்,பறவைகள் எல்லாம் நண்பர்களாக துணைவர சைக்கிளில் சுமார் 40km தூரம் சென்றாலும் இயற்கையை பார்த்து மகிழ்கின்ற அந்த ரசனைக்கு மட்டும் சோர்வெ கிடைக்காது.

இவைதவிர மாலை நேர தென்றல் காற்று ,குயில் பாட்டு, நிலா வெளிச்சம்,மழைச்சாரல் என அத்தனை இயற்கை அம்சங்களும் நம் காலடியில் கொட்டிகிடந்தன.

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அனுபவித்து வந்த நேரத்திலெயெ..
நம் முன்னே நம் கண்களை பிடுங்குவது போல்..இயற்கையை இந்த நாகரீகம் சின்னா பின்னாமாக்கி வருகிறதை நினைத்தாலெ மனக்கஷ்டம் நம்மை ஆட்கொண்டு பொய்விடுகிறது.


அழிந்து கொண்டிருக்கிற இந்த இயற்கை வளத்தை அழியா நினைவு களஞ்சியங்களாக மாற்றியவர்கள் நம் பாடலாசிரியர்கள்.


சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சூழ் நிலைகள் அமையும் போதெல்லாம்...
மண் வாசனை கமகமக்க இசையமைக்கும் நம் இசைஞானியொடு இணைந்து ..இயற்கையோடு காதலை இணைத்து ..அவர்கள் தந்த வரிகள் நம்மை அந்த பொற்காலத்துக்கெ அழைத்து செல்கின்றன.


நிலாவுக்கான பாடல்கள்..குயில் பாட்டுகான பாடல்கள் ஏற்கனவே தொகுக்க பட்டுவிட்டதால்..
தென்றல் காற்றுக்கான பாடல்கள் இங்கே தொகுக்க பட்டுள்ளன.தென்றல் நம்மை உரசுவதோடு இல்லாமல் நம் வாழ்க்கையின் அன்பு, பாசம், காதல், சோகம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளோடும் உரசி செல்வதை இந்த பாடல்கள்
தெரிவிக்கின்றன.

கேளுங்களேன் ..தென்றல் பாடல்களை




(பாடல்களை DOWNLOAD செய்ய முதலில் பாடலை play பண்ணுங்க ..down குறியிட்ட பட்டனை அழுத்துங்க Download என வருகிறதா.. அதை கிளிக் செய்யுங்க உங்க கம்ப்யூட்டரில் உள்ள 'C drive' இல் Download folderஇல் உங்க பாடல் ரெடி)


தென்றல் பாடல்களை பார்க்க இதோ வீடியொ தொகுப்பு..




தென்றல் காற்று என்ற தலைப்பின் கீழ் வந்த இந்த இன்னிசை மழை நம்மை ஆனந்தத்தில் நனைய விட்டிருக்கும் என நம்புகிறேன்


Tell a Friend



Sunday, June 26, 2011

KANMANI -ILAYARAJA RARE SONGS

KANMANI-ILAYARAJA RARE SONGS

ACTOR-PRASHANTH
ACTRESS-MOHINI ,
DIRECTOR-R.K.SELVAMANI
MUSIC-ILAYARAJA
YEAR-1994


தலைவருடன் R.K.செல்வமணி இணைந்த படங்களில் வரிசையில் இந்த படமும் ஒன்று ..இந்த படத்தின்  பாடல்கள் அனைத்துமே HIT பாடல்களாக உள்ளன .
மீண்டும் உங்கள் நினைவிற்கு இங்கே...

SONGS




Tell a Friend


    



Wednesday, June 8, 2011

ISAIGNANI ILAYARAJA'S RARE PHOTOS

இசை ஞானி இளையராஜாவின் காண கிடைக்காத புகைப்படங்கள்






























படங்களை பெரிதாக காண படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்


Tell a Friend
Related Posts Plugin for WordPress, Blogger...