முரளி ,ரேவதி ,சத்தியராஜ் ,
நிழல்கள் ரவி மற்றும் பலர்
கதை,
திரைக்கதை ,
இயக்கம் --மணிரத்னம்
பாடல்கள் -கங்கை அமரன்
நடனம் -சுந்தரம்
இசை-இசைஞானி இளையராஜா
சண்டை பயிற்சி-சூப்பர் சுப்பராயன்
ஒளிப்பதிவு -ராமச்சந்திர பாபு
தயாரிப்பு -சரவணன்
காதல் வந்தாலே மனிதன் தலைகீழ் நடப்பான் என்பதெல்லாம் அப்போது தான்.
காதல் வந்துவிட்டால் வண்டியில் பறப்பான் என்பது இப்போது.
சரி
பலமுறை பார்த்த பிறகும் பகல் நிலவு படத்தை சமீபத்தில் பார்த்தேன்.
சும்மா சொல்லகூடாது .திறமை உள்ளவர்கள் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படமே ஒரு சாட்சி.
படம் முழுவதும் உள்ள அதிரடியில் ஒரு மென்மையான காதலை சொல்லி இருப்பார் மணிரத்னம் .
கருப்பான முரளியின் முகத்தில் அப்படி ஒரு பொலிவு .பால் குணம் கொண்ட ரேவதியின் கண்ணில் அப்படி ஒரு தாகம்.
இரண்டும் இணையும் வரை நம் இசைஞானியின் இசையின் ராஜ்ஜியம்.படம் பார்த்தவர்களுக்கு நினைவுக்கும்,
பார்க்காதவர்களின் கண்ணுக்கும் இதோ எனது குறும்படம் .
படத்தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
படத்தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
தங்களின் மெளலான கருத்துகளுக்காக என்றும் காத்திருப்பேன்
.
.
சரி காதல் வந்தாச்சு
உயிருள்ள இந்த காதலில்.... வெடிக்கிறது பூகம்பம்.
ரேவதியின் அண்ணனோட மரணத்திற்கு தவறு செய்யாத முரளி காரணமாகிறார்.
ரேவதிக்கு முரளியின் மேல் கோபம் .
முரளியை மறக்கவும் முடியவில்லை .நினைக்கவும் மனமில்லை.
முரளிக்கோ ரேவதி இல்லாமல் வாழவே பிடிக்கவில்லை .
ரேவதி பிரிய நினைக்கிறார் .
காதலி தன்னை பிரிந்து செல்லும் போது துக்கம் தொண்டையை அடிக்குமே ?
அது 1000 முறை தூக்கில் போட்டது போல இருக்கும் .
எந்தவொரு தொலைதொடர்பு சாதனங்களும் இல்லாத அந்த காலத்தில்
பெண்ணின் நேரடி பேச்சும் நின்றால் அந்த மனிதனின் துடிப்பு எப்படி இருக்கும்?
இதோ இப்படி இருக்கும்
பாடலின் வலிமை புரிந்து கொள்வதற்காக situationஉடன் பாடலை இணைத்துள்ளேன்
இந்த பாடலை சாதாரணமாக பார்ப்பதை விட இந்த சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டு
நாமே இந்த பாடலை பாடுவது போல நினைப்பில் பாடிக்கொண்டே பாருங்கள்.
மெய் சிலிர்க்கும் ......
Most of the music are seasonal and vanish from people's mind but Ilayaraaja's music is an exceptional and unique. Proud of Raja
ReplyDelete