
சாதாரனமாக அவ்வளவு பெரிய பின்னனியை கொடுத்து விட்டு எப்படி தலைவர் இப்படி சாதாரணமாக இருக்கிறார் என்றே தெரியவில்லை.இவர் பாடலை REMIX செய்து பாடலை போட்டவனெல்லாம் நான் அப்படி கஷ்டபட்டென் இப்படி கஷ்டபட்டேன் என்று பரபரப்பு பேட்டி கொடுக்கிறார்கள்.
சரி இப்போதைய இசையை குறை சொல்லவில்லை.இப்போதய இசையில் சந்தோஷம் இருக்கும் ..ஆனால் நம் தலைவரின் இசையில் சுகம் இருக்கும் .சந்தோஷ பாடலானாலும் சரி சோக பாடலானாலும் சரி நிச்சயம் அதில் ஒரு சுகம் இருக்கும்.
அப்படி ஒரு பின்னனி இசையைதான் இப்போது நாம் பார்க்க பொகிறோம்.எல்லோரும் பார்த்ததுதான்.
இந்த படத்தில் வேலை செய்தவர்கள் அனைவருமே ஜாம்பவான்கள். தலைவரும் இதில் சோடைபோனதில்லை.இதோ பின்வரும் TITLE VIDEO வை பாருங்கள். யார் யாரெல்லாம் WORK பன்னியிருக்கிறார்கள்... அப்போது இந்த TITLE இசை என்னை பயமுறுத்தியது.இப்போதோ வியக்கவைக்கிறது..எல்லோரும் சேர்ந்து குறி வைத்து வெற்றி கனியை தட்டி பறித்து அதனை ருசித்தும் பார்த்திருக்கிறார்கள் .
இந்த படத்தில் அப்புவுக்காக அவர் போட்ட பின்னனி இசை இன்றும் பலரது விருப்ப RING TONEஆக உள்ளது .
இந்த பின்னனி இசையை உன்னை நினைச்சே பாட்டு பாட்டு படிச்சேன் பாடலோடு இணைக்கும் போது வருகிற சுகம் இருக்கே அதை அனுபவித்தால் தான் புரியும்.
இதோ அந்த காட்சி
இந்த மாதிரி அவர் இசை அமைத்ததை நான் பெருமை பாடுவதில் எனக்கொரு சுகம்.

No comments:
Post a Comment