Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Sunday, December 26, 2010

SRIGANESH-ஒரு இளையராஜா ரசிகன்


நான்...
இளையராஜா என்ற இசைக்கடவுளின் தீவிர பக்தர்களில் ஒருவன் தான் Sriganesh என்கிற நான் .இவருடைய இசையை நேசிப்பதிலும் நேசிப்பதை வெளிஉலகத்துக்கு அறிவிப்பதிலும் ஆளுக்கொரு யுக்தியை கையாளுகின்றனர்.


அதில்.. எல்லாமே தலைவர் இசைதான் என்பதில் மார்தட்டும் ரசிகன் நான். இளையராஜா சார் இசை இல்லையென்றால் அன்றைக்கு ஒரு நாள் .........இல்ல இல்ல ஒரு ஜென்மமே வீணாகிப்போனதை போல இருக்கும் எனக்கு.


என் வாழ்க்கையில் தலைவரின் இசை..
தலைவர்தான் நான் 10ம் வகுப்பில் படிக்கவும் நல்ல மதிப்பெண் எடுக்கவும் முக்கிய காரணம்.ஆச்சர்யமாக இருக்கா..... நான் examக்கு
படிக்கும்போதெல்லாம் தலைவர் பாடல்கள் தான் பின்னனியில் இசைத்துக்கொண்டிருக்கும்.படித்த பாடங்கள் நினைவுக்கு வர அவர் பாடல்கள் தான் உதவிசெய்தன. இந்த questionக்கு இந்த answerஐ இந்த பாடலை கேக்கும் போதுதானே படித்தோம் என் நினைவுபடுத்தி எழுதி 303 மார்க் எடுத்தேன் என்பது பெறிய விஷயம் தான் .ஏனென்றால் படிப்பு என்பதில் நான் கொஞ்சம் weak

தலைவரின் தாலாட்டு
என் அப்பா அம்மா தாலாட்டைவிட கொஞ்சம் அதிமாகவே கிடைத்தது

நினைவுகள்
இவருடைய பாடல்கள் தான் இன்று நமக்கு கடந்த காலத்தை நினைவு படுத்துகின்றன.மனதை பாதித்த பாடல்களை கேட்க்கும் போது அந்த நாட்களுக்கே நாம் சென்றுவிடுகிறோம் .விலைகொடுத்து வாங்க முடியாத கடந்த காலத்தை முழுமையாக அனுபவிக்கிறோம்.சில நேரங்களில்  சந்தோஷத்தின் எல்லை...சில நேரங்களில் முகம் முழுக்க கண்ணிர்..


நம் தமிழன் அனுபவிப்பது இவர் இசையை....ஆனால் ஆதரவு தருவது மேல் நாட்டு இசைக்கு..
இந்த மகான் நம் தமிழ் நாட்டில் பிறந்ததை எண்ணி பெருமை படுகிறேன் .அதே நேரத்தில் வேதனையும் கூடவே வருகிறது.

மேல் நாட்டில் நம் தலைவரின் இசை
இரு ஆஸ்கார் நாட்டுக்குள்ளே வந்துள்ளதை நினைத்து பெறுமைபடுகிறோம்.அந்த ஆஸ்கார் இசை நம் நாட்டு பெண்களின் ஆடைகளை குறைத்திறுக்கிறது என்பதை யோசிக்க மறுக்கிறோம்.இதே நிலைமை நீடித்தால் நாளை அம்மணமாக திரியபோவது நம் குழந்தைகளே ...என்பதை மறுக்க முடியுமா?
 பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் சாமக்கோழி கூவுதம்மா பாடலை கேட்ட அந்த மேல் நாட்டினர் இப்படிகூட பண்ண முடியுமா என்று மூக்கின்மேல் விரலை வைத்தார்கள் என்று சூரியன் FMஇல் அருண் சொல்ல கேட்டிருக்கிறேன்

''இசை என்பது எப்போது கேட்டாலும் அது புதிதாக இருக்க வேண்டும்'' என்று சொன்னார் இளையராஜா.
அதை நிஜமாக்கிய அவர் பாடல்களில் எனக்கு பிடித்தவை


1) Niram maaratha pookal film  -  Ayairam malargale malarungal
2) jani film - a. oru inaiya uravu iniya isaiya yeduthu  b. Kaatril enthan geetham,
3) Aval appadi dhan film - a. Uravugal thodar kathai, b. pannir pushpangale,
4) Pannir pushpamgal film - a. Poonthalir aada, b. Anatharaagam thedum neram,
4) Kadalora kavithiagla film - a. Adi aathaadi, b. Kodiyile malligapoo,
5) Anbulla Rajnikanth film - Kadavul ullame karunai illame (intha paadal yellam karunai illangalilum theisiya geetham)
6) Illamai oojnal aadugirathu film- oru naal unnai naan
7) idayatha thiradathe film - a. oh paapa laali, b. oh priya priya
8) Pothi vacha maligai mottu,
9) Gopura vasalile fil - a. Kaathal kavithigal, b. Thaalatum poongaatru,
10) Metti film - Alli thantha vaanam,
11) Marupadiyum film - a. Nalam vaza yennnalum. b. yellorum sollum paatu, c. Yellorukum nalla
12) Rosapu ravikai kaari film - yennullil yetho yengum neram,
13) Raja paarvai film - Azhage azhge what a cute song,
14) Azhage unnai aarathikiren film - a. Naane Naana, b. Yen kalyaanam vaibogam unnodu dhan,
15) Manathil uruthi vendum film - a. kannaina maniye kannain maniye poraatama, b. Kanna varuvaaya......


இன்றும் இந்த பாடல்கள் நம் நாட்டில் மட்டுமல்லாமல் மேல் நாடுகளிலும் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது .


இசைதெய்வத்திற்கு என் வேண்டுகோள்

மக்கள் விரும்பும் இசையைவிட ,computer விரும்பும் இசை மக்களின் மேல் திணிக்க படுகிறது.இந்த இருளை அகற்ற தலைவர் இளையராஜா அவர்களே மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் .தமிழ் நாட்டு மக்களுக்கு தன் தேனிசையை அளவில்லாமல் தர வேண்டும் .வருடத்திற்கு குறைந்தது 6 படங்களாவது தமிழ் மக்களுக்கு தர வேண்டும்
மீண்டும் ராஜாவின் ராஜ்ஜியம் தமிழ் நாட்டை ஆளுவதை எங்கள் கண்ணார ரசித்து பார்க்கவேண்டும் ...கிடைக்குமா தலைவா அந்த யோகம் ....

இதோ இந்த வீடியோவை பாருங்கள்...ராஜாவுக்கு ரசிகர்கள் கோடி கோடி....ரசிக்கும் விதமும் கோடி


ராஜாவின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி 


அன்புடன்
SRIGANESH
chennai

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...