பாட்டாலே புத்தி சொன்னார்....
நல்லாவெ சொன்னீங்கய்யா.... நீங்க சொன்னா மாதிரி வேற எவரும் சொல்லலைன்னு தான் நினைக்கிறேன்.உன்னால் முடியும் தம்பில அக்கம் பக்கம் பாரடான்னு சொன்ன பாட்டுல எத்தனை புத்தி மதி.
இல்லாத சாமிக்கு ஆயிரம் பூஜைகள் செய்வதை விட இருக்கிற மனிதனுக்கு ஒரு உதவியாவது செய்யடான்னு. ஆணி அடிச்சா மாதிரி சொன்னிங்களே...
அந்த படத்துல வர இன்னொரு பாட்டுலையும் உன்னால் முடியும் தம்பின்னு சொல்லி எங்களால் முடியும் என்ற முதுகெலும்பை தந்திங்களே....சூப்பர் தலைவா அது!
தூங்காதே தம்பி தூங்காதேயின் தலைப்பு பாடலில் பல விஷயங்களை புரிய வைத்தாய்.
உனக்கு மட்டும் எப்படி அய்யா இப்படி பட்ட வரிகளை கொடுத்தார்கள் கவிஞர்கள்.
இந்த வரிகளுக்கு உங்க இசை இல்லேன்னா... சுமார் 20 வருஷம் கழித்து இந்த பாடலை பற்றி நாம் பேசியே இருக்க மாட்டோம்.
"நிக்காம ஓடுதடா ஆறு ..,அது நின்னுபுட்டா நமக்கு ஏது சோறு
ஓயாம சுத்துதடா பூமி...,அது ஓய்வெடுக்கும் நாளிருந்தா காமி"
இந்த பாடலின் அர்த்தம் புரிந்தவர் எவரும் தூக்கத்தில் நாளை வீணடிக்க மாட்டார்.
பணம் சம்பாதிக்க இசை அமைப்பவர் எவரும் இந்த பக்கமே போக மாட்டார்..
ராஜான்னா அது நீ மட்டும் தான்யா
..
ஜாதிக்கான முதல் எதிரியும் நீதான்
பகுத்தறிவாளனின் முதல் நண்பனும் நீதான்..
கடவுள் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அளவுகோலால் அளந்து வைத்திருக்கிறாய் தலைவா..எங்களுக்கும் அளக்க கற்று கொடுத்தாய்
பாட்டாலே பக்தி சொன்னார்...
பக்தியும் சொல்லியிருக்கிங்க நீங்க,,,
கடவுள் அருளே உலகை மயக்கும் இசையை உங்களுக்கு தந்ததாக நம்பும் அந்த நம்பிக்கையை அப்படியே பாட்டாக மாற்றியிருக்கிறீர்கள்..தலைவா.
நீங்கள் நினைப்பதெல்லாம் இசையாக உருவெடுக்கின்றன.
உங்கள் காதல் பாட்டுக்களை பாடும் மாமேதைகள் கூட மனதை இறுக்கி கொண்டு கண் மூடி கடவுளை தொழுகின்ற உணர்வோடு பாடுவதை கண்கூடாக பார்கின்றோமே அய்யா
...
மகானாக பிறந்த நீங்கள் மனிதனாக வாழ்ந்தாலும் உங்களை கடவுளின் அவதாரமாக நினைக்காத இசை ரசிகர்களே இருக்க முடியாது.
நீங்கள் படைக்கும் பக்தி பாடல்கள் மனதை சுத்த படுத்துவதோடு மனிதனை கடவுளோடு இணைத்து மனிதனாகவே வாழவைக்கிறது
இதோ உங்கள் பக்தி பாடல்கள் சில
உங்களின் இஷ்ட கடுவுளான தாய் மூகாம்பிகை பாதம் பணியும் பக்தி பாடல்
இந்துக்களின் பக்தி பாடல்
கிறுஸ்துவர்களுக்கான பக்தி பாடல்
முஸ்லிம்களுக்கான பக்தி பாடல்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுகள் பலவிதம்தான்
ஆம் தலைவர் அவர்கள் அரும்பாடு பட்டு கொடுத்த பல விதமான பாட்டுக்கள்
இது தான் தலைப்பு ..இதற்கான 10 பாடல்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்தேன்..எப்படி முடியும் .தலைசுற்றியது எனக்கு.
4500 பாடல்களில் எதை சொல்லுவது எதைவிடுவது.எந்த பாட்டு என்றாலும் அதில் ஒரு புதுமையை புகுத்தியவரே தலைவர் தான்.
ஆழ்கடலை அளந்து விட துணிந்தேன் என்பதுதான் உண்மை . இருந்தாலும் என் முயற்சியை கைவிடவில்லை .ஏதோ நமக்கு தெறிந்ததை மட்டும் செய்வோம் என்ற எண்ணத்துடன் இந்த பதிவின் அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.
ஆழ்கடலை அளந்து விட துணிந்தேன் என்பதுதான் உண்மை . இருந்தாலும் என் முயற்சியை கைவிடவில்லை .ஏதோ நமக்கு தெறிந்ததை மட்டும் செய்வோம் என்ற எண்ணத்துடன் இந்த பதிவின் அடுத்த பகுதிக்கு செல்கிறேன்.
சினிமாவும் காதலும், உயிரும் உடலும் போல .அந்த காதல் கதாநாயகனுக்கு வருவதை வெவ்வேறு படங்களில் விதவிதமான சூழ்னிலைகளில் வருவதை நாம் பார்த்திருக்கிறோம் .அதற்கு தகுந்தாற்போல் இங்கே பாட்ல்களும் அந்த சூழ்னிலைக்கே சென்று அமைக்கபடுகிறது.
தலைவர் ஏழ்மையின் உச்சத்திலிருந்து பணக்கார வர்க்கத்தின் உச்சம் வரைக்கு போனவர் என்பதனால் அனைத்து தரப்பினர் வாழ்க்கை முறையையும் அறிந்திருந்தார். இசைஞானி இசைஅமைத்த பல விதமான காதல் பாடல்களில் எனக்கு பிடித்த பத்து பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.
தலைவர் ஏழ்மையின் உச்சத்திலிருந்து பணக்கார வர்க்கத்தின் உச்சம் வரைக்கு போனவர் என்பதனால் அனைத்து தரப்பினர் வாழ்க்கை முறையையும் அறிந்திருந்தார். இசைஞானி இசைஅமைத்த பல விதமான காதல் பாடல்களில் எனக்கு பிடித்த பத்து பாடல்களை இங்கே தொகுத்துள்ளேன்.
1.ஒரு முதன் முதல் காதலை அக்கிரமாக அநியாயத்துக்கு இசை அமைத்ததை நான் சொல்ல வில்லை.வித்துவான்கள் சொல்கின்றனர்.
பாடல்
2.அரிசி குத்தும் அக்கா மகளுக்கு பாட்டு. அந்த பாடல் ஊர் திருவிழாவில் ஆரம்பிக்கிறது .இது தான் situation
முதலில் தொடங்கும் இசையில் திருவிழா என்பதை அறிந்துகொள்ளலாம் .ஆனால் இதில் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல அரிசி குத்தும் soundஐ நுழைத்ததை கண்டு பிடிக்க முடிகிறதா..?
3.மேடைப்பாடகன் காதல் பாட்டு பாடினால் அது அனைத்து தரப்பினரையும் ஆட்டம் போடவைக்க வேண்டும் .இது தான் situation
இந்த பாடலின் முதல் இசையில் நம்மை மறந்து நம் கால்கள் ஆடுவதை நாம் பார்க்கலாம்.ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் நிற்காத அதிரடி இசையில் இசைஞானி நமக்கு கொடுத்த காதல் பாடல்
4.காலை பொழுதில் காதலர்கள் running உடன் பல்வேறு நபர்களை சந்தித்தவாறு செல்கிறார்கள். ஓடிகொண்டு இருக்கும் போதே பாடல் திரையில் ஒலிக்கும்.இது தான் situation .
போச்சு ..ஒருவரின் தொடை போச்சு ...பாடல் முழுக்க கதா நாயகியும் கதா நாயகனும் ஓடும் போது ஏற்படுகின்ற சத்தத்துக்காக ஒருவரை தொடையை தட்டவிட்டு பாடலை முடித்திருக்கிறார் நம்ம இசை சக்கரவர்த்தி.
வீங்கிபோனதாம் அவர் தொடைகள்...
வீங்கிபோனதாம் அவர் தொடைகள்...
பாடல்
5.இந்த பாடலில் கதா நாயகனும் கதா நாயகியும் தன் அனபை தெறிவித்துகொள்ள இரவில் பாடிகொள்ளும் பாடல்.
வித்தியாசமான தாளகட்டுடன் அமைத்த இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்.
6.சாதரண மனிதனுக்கு காதல் பாடல் தனி ...
பரத நாட்டிய கலைஞனுக்கு பரத நாட்டியம் ஆடிக்கொண்டே காதல் பாடல்...அதற்கேற்ற இசை நம் காதுகளில்..
7.நாடோடி பாட்டுகாரன் ..அவனுக்கு என்று ஒரு தனி குழு .. அவர்களுக்கும் முக்கியதுவம் கொடுத்து அவர்கள் குழுவுக்கென ஒரு தீம் மியுசிக்....இந்த படத்தின் எல்லா பாடலுக்கும்தொடக்கமாக அந்த தீம் முயுசிக் இருக்கும்
கவனித்திர்களா..
காதல் பாடலும் அந்த தீம் மியுசிக் உடனே ஆரம்பிக்கிறது.
8.ஒரு பெண் உரக்க கத்தி தன் காதலை சொல்ல நினைக்கிறாள்..அந்த காதலை சாதரண இசையுடன் வெளிப்படுத்தினால் அதை பார்க்கின்ற மக்களுக்கு சந்தோசமாக இருக்காது...ஆரவாரமான இசையுடன் சொன்னால் அந்த பாடல் காதலுக்கும் கதைக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் என்று உணர்ந்த இசை ஞானி அமைத்த காதல் பாடல்
9.காமத்துடன் கலந்த பாடலுக்கு இசை அமைப்பது தனி விதம்.காமத்துக்கு என்றால் கொஞ்சம் மழுப்பலான இசை வேண்டும்.இது காமத்துடன் காதல் கலந்த பாடல்.இதற்கு தலைவரின் கைவரிசையே தனி
இந்த பாடலில் இசை கருவிகளுடன் மனிதனின் வாய்சப்தங்களும் கலந்திருக்கின்றன.கண்டு பிடிக்கமுடிகிறதா..பாருங்கள்
10.சுந்தரி கண்ணால் ஒரு சேதி
ரௌடிகளின் வாழ்க்கையும் போர்களம் போன்றதுதான் என்று உணர்த்தும் பாடல்.
இந்த பாடல் பற்றி பாலுசார் சொன்னது..
பாடல்.
இப்படி செய்ததை சொன்ன நம் தலைவர் இளையராஜா பின்னாளில் சொன்னதை செய்தும் காண்பித்தார்.
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
இந்த வரிகளுக்காக நிறைய் பாடல்களை தலைவர் அந்த கால இளசுகளுக்கு பரிசளித்தார் என்பது தான் உண்மை
நிஜ வாழ்க்கையில் கண்ணி பெண்களை கவர்வது (மடக்குவது) என்பது ஒரு கை வந்த கலை ..ஒரு இளைஞ்னின் தலையாய கடமையும் ஆகும்.
காதல் இல்லாதவர்களின் வாழ்க்கை உப்பு இல்லாத சாப்பாட்டை போல ..
நாட்டை காப்பாற்ற சில படைகள் கிளம்பும் அதே சமயத்தில் நம்ம ஊர் இளையராசாக்கள் ராசாத்திகளை கவர்வதற்க்கு பலபல புது புது உத்திகளை கையாளுகின்றனர்.
அவர்களின் முயற்சிக்கு உருதுணையாக இருக்கும் படியான பாடல்களை கொடுக்கும் இசை அமைப்பாளர்களையே அவர்கள் மானசீக தலைவராகவும் ஏற்று கொள்கின்றனர்.
சமத்தாக அமைதியான முறையில் பெண்ணின் நெஞ்சை கசக்கிபிழிகின்ற மாதிரி பாடல்களை பாடி காதலியை கவிழ்த்து விடும் ஆணழகன்களும் உண்டு.
பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து அவர்களின் அனபையும் காதலையும் அழகாக அள்ளிகொண்டு போகிற் முரட்டு காளைகளும் இருக்கிறார்கள்
இப்படி சினிமாவில் பெண்களை விரட்டும் பாடல்களுக்கு அன்று முதல் இன்று வரை தனி மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வரிசையில் நம் தலைவர் தொகுத்த இசை சங்கமங்கள் இங்கே
கடை வீதி கலகலக்கும்..
மைனா மைனா மாமன் புடிச்ச மைனா..
ஓ பர்ர்ட்டி நல்ல பார்ட்டி தான்..
தலுக்கி தலுக்கி வந்து ..
புது ரூட்டுல தான் ஒய்யா..
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாட சொன்னார்கள்
விரைவில்...!!
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்
மெட்டு போட சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்
அதை எழுதினாலும் முடிந்திடாது
(பாட்டாலே..)
பூஜையில் குத்துவிளக்கேற்றி வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவாரியில்
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா
அறியேன் உண்மையிலே
எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
(பாட்டாலே..)
கலக்கல் பகிர்வு தல
ReplyDeletehttp://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/1/25935.html
நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ;) ஜெயா டிவியில நிகழ்ச்சி வருதாம் ;)
பார்கணும் நண்பா ... நன்றி அதே சமயம் ஆச்சர்யமும் கூட, நீங்கள் தவறாமல் பின்னூட்டம் அளிப்பது
ReplyDeletewww.classiindia.com Best Free Classifieds Websites
ReplyDeleteIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
RAJA RAJATHAN ISAI ULAGIL AVARAI MINCHUVATHARKKU YAARALUM MUDIYAATHU.
ReplyDelete