தலைவர் இசைஞானி இத்தாலியில் கடந்த 2005ம் ஆண்டு ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
அந்த இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் ஆடியோ வடிவில் நமக்கு கிடைத்தது.ஆனால் வீடியோ கிடைப்பதற்கே அரிதாக இருந்தது..
இந்த வீடியோவை பார்க்க ஆசைப்படாத ரசிகர்கள் இல்லை...என்னையும் சேர்த்து...
நண்பர் Krish இந்த வீடியோவை நேயர் விருப்பத்தில் கேட்டிருந்தார் ..
அன்று முதல் இந்த வீடியோவை தேட ஆரம்பித்தேன்
என் நல்ல நேரம் சீக்கிரமாகவே ஒரு பகுதி கிடைத்தது
நண்பர் ஸ்வாமி நாதன் அவர்கள் இத்தாலி இசை நிகழ்ச்சியின் ஆடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறார்.
அவருக்கு மிக்க நன்றி.
இந்த வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன்
No comments:
Post a Comment