Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Friday, July 8, 2011

K,ரங்கராஜ் அவர்களும் இசைஞானியும்..


தலைவர் கொடிகட்டி பறந்த காலத்தில்
மணிரத்னம்,பாலச்சந்தர்,பாரதிராஜா,சுந்தர்ராஜன்,பாக்யராஜ்,என்று பல
இயக்குனர்களின் படங்கள் வெற்றிபடங்களாகவும் வெள்ளிவிழாபடங்களாகவும் வலம் வந்தன.

இவர்கள் மட்டுமில்லை .. பல்வேறு இயக்குனர்கள் ..அவரவருக்கென்று தனி தன்மைகள் ..
எல்லாவற்றையும் ருசி பார்த்துள்ளோம்..

அவர்களில் இவர்..
நாம் மறந்து போனவர் ..வெளியுலகத்துக்கு அவ்வளவாக தெரியாதவர்..இன்றும் இடம் தெரியாமல் வாழ்கிறவர்..

தலைவர் கடந்து வந்த பாதையில் பசுமையான நினைவுகளுக்கென்று சில படங்கள் உண்டு.
அந்த படங்கள்.. அந்த படத்தில் வரும் கதா பாத்திரங்கள்..அவர்களுக்குள் நடைபெறும் உணர்ச்சி வெளிபாடுகள்..மென்மையான காதல்..காதலின் வெளிபாடு சங்கீதம் தவழ்ந்த புல்லாங்குழலாய் நம் இசைஞானியின் இசை ..
இவை மட்டுமே போதும் இவருக்கு ..இவருடன் பணியாற்றும் அனைவருக்கும் 100வது நாள் நினைவு கேடயம் அனைவருக்கும் நிச்சயம்..


மோகனின் தொடர்ந்த வெள்ளிவிழாபடங்களின் பெருமையில் ஒரு பாதியை தனக்கு சொந்தமாக்கிகொண்டவர்...

அவர்தான் இயக்குனர் K.ரங்கராஜ்.


இவரும் தலைவரும் இணைந்த படங்கள்.

.
உதயகீதம்
பாடு நிலாவே
உன்னை நான் சந்தித்தேன்
உனக்காகவே வாழ்கிறேன்
மனிதனின் மறுபக்கம்
நிலவு சுடுவதில்லை
நினைவே ஒரு சங்கீதம்
கீதாஞ்சலி
கிராமத்து மின்னல்
தர்மம் வெல்லும்

இதில் அனைத்துமே வெற்றி படங்கள்

   
இவ்வளவு வெற்றி படங்களை கொடுத்துவிட்டு முகத்தை கூட காட்டாத அந்த கலைஞானியும் நம் இசைஞானியும் இணைந்த படங்கள் ..அதில் வரும் பாட்டுக்கள் ..இன்னும் நம் வாழ்வில் அங்கம் வகித்து கொண்டுதான் இருக்கின்றன.மோகனுக்காக இவர் இயக்கிய உதயகீதம் படம் தான் மிகப்பெரிய நட்சத்திர
அந்தஸ்தை பெற்றுத்தந்தது .

இந்த படத்தின் பாடல்கள் தமிழ் நாட்டு மக்களின் ரசிப்பு தன்மையை மாற்றியது.
 மக்களின் ரசிப்பு தன்மையை மாற்றியது

ஒரு பக்கம் ரஜினியும் கமலும் மாறி மாறி ஆக் ஷன் படங்களை கொடுத்து கொண்டிருக்கும் போதே தனியாக நின்று தமிழ் நாட்டு மக்களின் இதயங்களை கவர்ந்தார் மோகன்... என்றால் அதற்கு பின்னனியில் இருந்தவர்கள் தலைவரும் ரங்கராஜ் அவர்களும் தான்..உன்னை நான் சந்திதேனிலும் இவர்கள் கூட்டணி அமோக‌ வெற்றி பெற்றது,இந்த படத்தில் வரும் தாலாட்டு மாறி போனதே பாடல்,தேவன் தந்த வீணை பாடல் என வளர்ந்து 
கொண்டே போனது இவர்களின் வெற்றி கூட்டணி பாடலகள்
பின்னர் மோகனுடனும் தலைவருடனும் இவர் இணைந்த
பாடுநிலாவே படமும் மெகா ஹிட் இந்த படத்தில் இடம் பெற்ற் மலையோரம் வீசும்
காற்று பாடல்தான் இன்றைக்கும் இரவு நேரத்தை இனிமையாக்குகிறது
விஜயகாந்துடனும்
தலைவருடனும் இனைந்த நினைவே ஒரு சங்கீதம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது
ஏத்தமயா ஏத்தம்,எடுத்துவச்சபாலும்.பாடல்கள்புகழ்பெற்றபாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.
 

முரளி சத்யராஜ்,கூட்டணியில்
இளையராஜா இசையில் கீதாஞ்சலி பாடல்களும் படமும் ஹிட் ஆனது,சிவக்குமாரை
வைத்து ரங்கராஜ் இயக்கிய படம்தான் மனிதனின்மறுபக்கம் படத்தில் இடம்பெற்ற
ஊமை நெஞ்சின் சொந்தம் ,சந்தோஷம்,கல்லுக்குளே வந்தஈரம் என்ன,பாடல்கள் மிக
அருமையாக வந்திருந்த பாடல்கள் சிவக்குமாரை வைத்து உனக்காகவே வாழ்கிறேன்
படத்தில்
இடம்பெற்ற இளன்சோலை ,கண்ணா உனை தேடுகிறேன், டைட்டில் பிஜிஎம் ஆகியவை
சிறப்பாக அமைந்து இருந்தன‌.
உன்னை நான் சந்தித்தேன் படத்தில் இடம் பெற்ற தாலாட்டு மாறி போனது பாடல்
இவ்ர் இயக்கி தலைவர் இசை அமைத்த‌
பாடல்களிலேயே எனக்கு மிக மிக பிடித்தபாட்ல்.
 

போடுவதெல்லாம் மியூசிக்
பாடுவதெல்லாம் பாடல் என்று தற்போதைய காலத்தில்
வாழ்ந்து வரும் நமக்கு..
 சரியான இசை அமைப்பாளரை தேர்வு செய்து சரியான கதையை
தேர்வு செய்து கதைகேற்றவாறு பாடல்களை தலைவரிடம் கேட்டு வாங்கி
படத்தையும் பாடல்களையும் 
வெற்றிபெற செய்த இயக்குனர் கே ரங்கராஜ் பாராட்டுக்குரியவர்.
நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியவர்..

இசையால் இணைவோம்!
இசைஞானியை புகழ்வோம்!!
அ.அபிராம்
கீழக்கரை
ராமனாதபுரம் மாவட்டம்
ramram1765@gmail.com

 

Tell a Friend

1 comment:

  1. யப்பா!!! தூள் கிளப்பும் பதிவு அபிராம் ;)

    \\தலைவர் கொடிகட்டி பறந்த காலத்தில்\\

    தெய்வத்துக்கு எதுங்க காலம் எல்லாம்...! ;-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...