நான் கடந்த ஒரு மாதமாக நம் தாய் நாட்டில் தான் இருந்து வருகிறேன்.இங்கே வெளியாகும் நாளிதழ்கள்,வார இதழ்கள் சிலவற்றை படிக்க நேரிடும் போதெல்லாம் நம் தலைவரை பற்றிய செய்திகள் ஏதேனும் வருகின்றனவா என தேடுவது வழக்கம்.எனக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றம்தான்.
இசைஞானியில்லாத படமே இல்லை....இசை இசைஞானி இளையராஜா என்ற நிலை எல்லாம் போய்...
இசை என்ற வார்த்தைக்கு பிறகு என்னன்ன பெயர்களோ வருகிறதே தவிர இளையராஜா என்ற பெயர் வருவதே இல்லை.அது சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி..பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி..
தலைவரை பற்றிய ஒரு விவரமும் அறிய முடியாத நிலைக்கு பத்திரிக்கைகள் நம்மை தள்ளிவிட்டனவோ என்ற சந்தேகமும் கூட சில நேரங்களில் தோன்றுகிறது.
கடந்த ஒரு வார காலமாக வெளியான வார இதழ்களில் இடம்பெற்றிருந்த தலைவரை பற்றிய செய்திகள்த மனதை குளிர்வித்தன.
அந்த செய்திகளை பற்றிய விவரங்கள் இதோ.
சென்ற வார குமுதம் (11.8.11)வார இதழில் ஓல்டு இஸ் கோல்டு என்ற தலைப்பின் கீழ் 19.1.84 இல் தலைவர் குமுதம் வார இதழுக்கு எழுதிய பக்கங்களில் சில பகுதிகளை வெளியிட்டிருந்தனர்.
அதில் தலைவர் அவர்கள் தனது உயிர் நண்பர் ராமா அவர்களுடன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் பேசுவதை கௌரவகுறைச்சலாக நினைக்கும் தமிழர்களை ஆக்ரோஷமாக சாடியும் இருக்கிறார்.
அந்த பதிப்பின் பக்கங்கள் இதோ
இந்த வார குமுதம (17.8.11) வார இதழிலும் தலைவரை பற்றிய செய்தி ஒன்று இருக்கிறது.
25 வயதுகூட நிரம்பாத இளம் பாடகரான ஹரிசரண் தனது பேட்டியில் இசைஞானியின் இசையில் பாடுவதை தனது வாழ் நாள் கனவு என குறிப்பிட்டிருந்தார்.ஆனால் தற்பொழுது நான்கு பாடல்களை பாடிவிட்டதாகவும்,இதெல்லாம் தம்க்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும்,தலைவர் மியுசிக்கை பற்றி பேசர அளவுக்கு தமக்கு ஞானம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதே போல சென்ற வார (10.8.11)ஆனந்த விகனில் பொக்கிஷம் என்ற தலைப்பின் கோர்வையில் தலைவர் இசைஞானியும் உலக நாயகன் கமலஹாசனும் பாடல் கம்போசிங்கில் எடுக்க பட்ட படம் வெளியிட பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
அதே இதழின் நினைவு நாடாக்கள் என்ற தலைப்பின் கீழ் கவிஞர் வாலி அவர்கள் எழுதிவரும் தொடர் கட்டுரையில் இந்த வாரம் தலைவரை பற்றிய அனுபவங்களை அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.மொத்தம் நான்கு பக்கங்கள் இடம் பிடித்த அந்த கட்டுரையில் இரண்டு பக்கங்கள் தலைவரை பற்றிய நினைவுகள் இருந்தன. படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்த அந்த தொடர் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக..
இதெல்லாம் பழைய செய்திகளை புதுப்பிக்கபட்டு இருக்கின்றன.
புதிய செய்தி ஒன்று 10.8.11 தினதந்தி நாளிதழில் வெளியானது.
"தாண்டவக்கோனே" படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திதான் அது.
தலைவர் இசை அமைத்து விரைவில் வெள்ளிதிரை காணவிருக்கும் "தாண்டவக்கோனே" படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்திருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் தலைவர் கலந்து கொண்டு ஆடியோ CDஐ வெளியிட்டதுடன் தன் கருத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தலைவர் பேசியதாவது..
என்னை பஞ்சு அருணாசலம் அவர்கள்தான் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகபடுத்தினார்.அதற்கு முன்னர் என் அண்ணன் பாஸ்கர் ஒவ்வொரு கம்பெனியாக நடந்தே போய் 'என் தம்பி நல்லா பாடுவான் என்று எனக்காக சான்ஸ் கேட்டார்.
அப்போது பஞ்சு அருணாசலம் அவர்கள் ஒரு படம் எடுத்து பாதியில் நின்றது.அவரிடம் போய் மேஜையில் தாளம் போட்டபடி நான் பாடிகாட்டினேன்.அப்படி மேஜையில் தாளம் போட்டு பாடி காட்டிய பாடல்கள்தான் 'மச்சான பாத்திங்களா',
'அன்னக்கிளி உன்ன தேடுதே'.
அந்த பாடல்களுக்காகவே பஞ்சு அருணாசலம் படம் எடுத்தார்.அந்த படம் வெற்றிபெற்றதும் நான் ஏற்கனவே வாய்ப்பு கேட்டு ஏமாந்த பட தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னைதேடி ஓடி வந்தார்கள்.
பஞ்சு அருணாசலம் அறிமுக படுத்தியதால்தான் இளையராஜா பிரபலம் ஆனார் என்று பேச ஆரம்பித்தார்கள்.
அதற்கு பஞ்சு அருணாசலம் அவர்களே பதிலளித்தார்.'இளையராஜாவிடம் திறமை இருக்கிறது, நான் அறிமுகபடுத்தவில்லை என்றாலும் அவர் நிச்சயம் சினிமாவுக்கு வந்திருப்பார்.யாராவது ஒரு தயாரிப்பாளர் அவரை அறிமுக படுத்தியிருப்பார்' என்று சொன்னார்.
உலகம் ரொம்ப பெரியது.திறமை உள்ளவர்கள் நிலைத்துநிற்கிறார்கள்.திறமை இல்லாதவர்கள் போய்கொண்டே இருக்கிறார்கள் .மூன்று வருடங்களுக்கு மேல் யாரு நிலைப்பதில்லை.
என்று தன் கருத்துக்களை புது இசை அமைப்பாளர்களுக்கு அறிவுரைகளாக வழங்கினார் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்
Super & thanks for that!
ReplyDeleteஆகா...மிக்க நன்றி தல ;-)
ReplyDelete