உலக நாயகன் கமலஹாசன் நம் தலைவரின் மூத்த ரசிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் சேதி அவரை பற்றியதல்ல.
அவரின் மூத்த சகோதரர் சாருஹாசனை பற்றியது
குமுதம் இதழில் 'அந்த நாள்' பகுதியில் தலைவரை அவர் சந்தித்தை பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதை அப்படியே இங்கே சமர்ப்பிக்கிறேன்
"கருப்பு வெள்ளை காலத்தில் நான் நடிக்கவே வரவில்லை.
எம்.எஸ்.வி எனக்கு நீண்ட கால ஆத்ம நண்பர் என்ற முறையில் அவர் சம்பந்த பட்ட பட செட்டுக்களுக்கு வருவது வழக்கம்! மனம் விட்டுப் பேசுவோம்.என்னை வைத்து நிறைய ஜோக்கடிப்பார்.அந்த காலத்தில் எம் எஸ் வி மெல்லிசை கச்சேரிகளில் கமலை மறக்காமல் பாட அழைப்பார்.
அதேபோல இளையராஜா இசை அமைப்பாளரானதற்கு முன்பே மேடை கச்சேரிகளில் கமலைப் பாடச்சொல்லியிருக்கிறார்.இந்த சமயத்தில் சுவாரஸ்யமானஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வரது.இளையராஜாவோட முதல் பட பூஜை.கமல் அப்போ வெளியூரிலிருந்ததால் என்னை விழாவில் கலந்து கொள்ளும்படி சொன்னார். நான் பரமகுடியிலிருந்து இதற்காகவே என் காரை நானே ஓட்டிக்கிட்டு சென்னை வர்றேன்.
முதல் சந்திப்பின்போது இளையராஜாவை சுத்தமாக அடையாளம் தெரியாமல் அந்த செட்டிலிருந்த கங்கைஅமரனை கைகுலுக்கி வாழ்த்து சொல்றேன்.அவரோ பயங்கரமா சிரிக்கிறார்.இரண்டு மாசம் வரை அவர்தான் இளையராஜான்னே நினைச்சுகிட்டு இருக்கேன்.அப்புறம்தான் ஒரு சந்திப்பில் உண்மை தெரிஞ்சது. நான் அனுப்பிய பல பேரை இளையராஜா பாட வைத்திருக்கிறார்.சம்பள தொகைகூட எனக்காக பலரிடம் கம்மியாகவே வாங்கியிருக்கிறார்.
எம்.எஸ்.வி போல ராஜாவின் நெருக்கமும் இன்று வரை தொடர்கிறது"
என்று தன் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தெறிவித்திருக்கிறார் சாருஹாசன் என்ற கலைஞானி
நன்றி குமுதம்
பகிர்வுக்கு நன்றி தல ;-)
ReplyDeleteகோபிநாத் இல்லாத பதிவா?
ReplyDelete