தலைவருடன் ஒரு போட்டோ எடுத்து கொள்வதை லட்சியமாக பலபேர் நினைத்துகொண்டிருக்கின்றனர். நானோ மிக சாதாரணமாக நினைத்து விட்டேன்.
ஏதோ என் நண்பனை சந்திப்பது போல சென்னை தி.நகரில் உள்ள தலைவரின் வீட்டிற்கு சென்று வாட்ச்மேனிடம் தலைவர் இருக்கிறாரா என்றேன்...உரிமையுடன்.
கையை மட்டும் அசைத்தார்.
அங்கே..இங்கே.. என்றனரே தவிர தலைவர் எங்கே என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டனர் அவர் அருகே இருந்த அந்த மர்ம நபர்கள்.
தலைவர் எங்கே இருக்கிறார் என்பதை அறியவே எனக்கு நீர் சொட்டியது.
அப்படி ..இப்படி.. என்று அங்கிருந்த நம் ஆட்டோ தோழர்களின் கையை இறுக்க பிடித்தேன்.பிறகுதான் அவர்கள் சந்தோஷத்துடன் வாயை திறந்தார்கள்.சாலி கிராமத்திலுள்ள பிரஸாத் ஸ்டூடியோவில் இருப்பார் என்பது தேனாய் பாய்ந்தது காதில்.
சாலி கிராமத்தை நோக்கி காரை பாய்ச்ச சொன்னேன் நண்பனிடம்.
நாங்கள் வேகமாக சென்றோமோ இல்லையோ..காலம் வேகமாக சென்று விட்டது.
காலதாமதமாக வந்ததாக அங்கிருந்த வாட்ச்மேன் சொன்னார்.மூச்சு வாங்கியபடி கேட்டு கொண்ட எனக்கு தண்ணீர் தாகம் மட்டும் அளவுக்கு அதிகமாக எடுத்தது.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை விழுங்கும் நேரம் தலைவரை சந்திப்பதை லட்சியமாக ஏற்றுகொண்டது மனது.
இந்த வீடியோவை பாருங்கள்
நம்மை போல லட்சியம் கொண்ட டைரக்டர் அமீர் ஒரு போட்டோ எடுக்க பட்ட கஷ்டத்தை...
கோடானகோடி ரசிகர்களின் இதயத்தில் குடியிருக்கும் நம் தலைவரை அவ்வளவு எளிதாக நெருங்க முடியாது என்பதை உணர்ந்தேன்.
ஆனால்
முயற்சிதன் மெய் வருத்த கூலிதரும்
முயற்சிதன் மெய் வருத்த கூலிதரும் !
ReplyDeletedear soundar,
ReplyDeletethalaivarudan photo yedutirgala illaya?