ஊர் பண்ணையாரின் மகள், அந்த ஊருக்கு வரும் பாட்டுகார ,அதுவும் ஒரே சண்டையில் ஊர் திருடர்களை விரட்டும்
கதா நாயகன்..அவர்களுக்குள் காதல்,அத்தை மாமன் மகன் சண்டைகள், நண்பர்கள் கூட்டம் என அனைத்து மசாலாக்களும்..அப்படி இப்படி என பல குறைகள் இருந்தாலும் ....
"கரையில் கொந்தளித்தாலும் ..ஆழ்கடல் அமைதியானது" என்பதை போல மசாலாக்களுக்கு நடுவே வந்த இந்த பின்னனி இசை அசத்தலானது.
மசாலா படத்திலும் தலைவர் தன் பின்னனி இசை சாம்ராஜ்ஜியத்தை கைவிடவில்லை என்பதுதான் இங்கே நிருபணம் ஆகிறது.
காதலர்கள் ..கார்த்திக்கும் மோகினியும் தங்களுக்குள் காதலித்தாலும்,
அவர்கள் மேல் நமக்கும் காதலை வரவழைத்தது இந்த பின்னனி இசைதான்
[எனக்கும் மோகினி மேல் காதல்.......டொய்(மியூசிக்) ]
காதல் படங்களில் வித விதமான காதல் காட்சிகள் ,கிளு கிளுப்பான காட்சிகள்,சோக காட்சிகள், மீண்டும் இணையும் காட்சிகள் என பல விஷயங்கள் இருந்தாலும்..
யார் அதை இயக்கினாலும்...யார் அதில் நடித்தாலும்
சினிமாவில் காதலையும் ...காதலின் மொத்த உணர்வுகளையும் மக்களிடம் சென்று சேர்ப்பது நல்ல இசையே..
சில நேரங்களில் பாடல்களாக ...சில நேரங்களில் பின்னனி இசையாக ..
எனவெ காதல் படங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இசையே ..!அதை உருவாக்கிய இசைஞானியே....!!
என்று தீர்ப்பு கூறி இந்த பதிவை முடிக்கிறேன்
நன்றி வணக்கம்
அன்புடன்
சௌந்தர்
நன்றி தல ;-)
ReplyDeleteவாங்க கோபிநாத்
ReplyDelete