நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!
அப்படி என் மனம் லயித்த திரைப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ‘நினைவுகளை மீட்டும் இசை’ மூலம்…
ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!
இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.
அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.
தொடர்ந்து வரும் பல்லவி,
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…
அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்
ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.
இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!
ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.
இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா
பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி
இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்
இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.
நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).
பாடலை எழுதியவர்: வைரமுத்து
பாடலை எழுதியவர்: வைரமுத்து
மெல்லப் பேசுங்கள் (1983) என்று ஒரு படம். இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )
நாயகன்: வசந்த் (பின்னர் டிவி சீரியல்களில் பிரபலமாகி, சமீபத்தில் இறந்துவிட்டார்) நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)
இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல் சுகமானது.
இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. நமக்கோ உடல் சிலிர்க்கும்!
‘கூவின பூங்குயில், கூவின கோழி…
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’
உமா ரமணன் குரலில் இந்த வரிகள் அப்படியே ராஜாவின் இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை அவரைத் தவிர யாரும் நிகழ்த்த முடியாது.(பாடியது தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன்) அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பல்லவி வரும்.
அடடா.. அது ஒரு சுகமான அனுபவம். அந்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் சிக்காதது. கேட்கும் யாரையும் தொற்றிக் கொள்ளும்.. பாடலுக்கு சொந்தக்காரர்: எம்ஜி வல்லபன்
கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை!
படம்: இங்கேயும் ஒரு கங்கை (1984)
தயாரிப்பு: கலைமணி
இயக்கம்: மணிவண்ணன்
நாயகன்: முரளி ,சந்திரசேகர்
நாயகி: தாரா (நாயகன் கமல் தங்கை )
இசை: இசை அரசர் இளையராஜா
அப்போதெல்லாம் மாசத்துக்கு ஒரு மணிவண்ணன் படம் வரும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள்… இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு நன்கு அறிமுகம்.
1. தெக்குத் தெரு மச்சானே… (மிக இனிய டூயட்)
2. சோலை புஷ்பங்களே…
2. சோலை புஷ்பங்களே…
இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்கள்: கங்கை அமரன், P.சுசீலா
‘சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்…’ பாடல் கேட்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதை நிழலாய் ஆக்கிரமிக்கும் உணர்வு. பாடல் முடிந்த பின்னும் இனம்புரியாத பாரம் மனதில்… வைரமுத்துவின் வரிகள் இவை.
இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.
அதற்குபின் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன் (அன்றைய நாட்களில் ராஜா பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைத்த நேரம். அதனால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்டுகள்!)
எண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் அவை… ‘இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. பாடல்களில் இசையை அமுதமாய் பொழிந்திருப்பார் இசைஞானி. படமெங்கும் அந்த அமுதமழை தொடரும்…
அப்படி ஒரு படம்தான் இளமைக் காலங்கள்.
இந்தப் படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் அற்புதமான பாடல்.
அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.
ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…
இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.
படம்: இளமை காலங்கள் (1984)
தயாரிப்பு: கோவைத்தம்பி
இயக்கம்: மணிவண்ணன்
நாயகன்: மோகன், நாயகி: சசிகலா
பாடல்: வைரமுத்து
இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
பாட வந்ததோர் கானம்..
ஈரமான ரோசாவே…
ராகவனே ரமணா ரகுநாதா…
படிப்புலே ஹீரோ …
இந்தப் பதிவின் கடைசி பாடல்…
இளையராஜாவை மட்டுமே நம்பி ஸ்ரீதர் எடுத்த தென்றலே என்னைத் தொடு படத்தில் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம்.
அதிலும் தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்.
இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ராஜாவின் இசை தென்றலாய் வருட ஆரம்பிக்கும்… தொடர்ந்து ஜேசுதாஸ் – ஜானகி குரல்கள் நம்மை இன்னோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.
சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது… என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்களே… அந்த இனிமையை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.
வாலி எழுதிய வசீகர பாடல் இது!
இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட பிறகு மனதுக்குள் ஒரு நிறைவு வரும் பாருங்கள்.. அது எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காதது… நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள். வேறென்ன சொல்ல முடியும்!
-ஆர் வி சரவணன்
தல உங்களுக்கும் ஆர்.வி. சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ;-)
ReplyDelete\\இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று.\\
கோவைத் தம்பி தான் இசை தெய்வத்துக்கு என்று தனியாக (தனியாக இசையமைப்பளார்களுக்கு என்று கட் அவுட் எல்லாம் வைக்காத கலாத்தில்) கட் அவுட் எல்லாம் வச்சி கலக்கியவர் ;-)
எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குதே....! நானும் என் துள்ளித்திரிந்தக் காலங்களுக்கு சென்றுவந்தேன்! அழைத்துச் சென்ற உங்களுக்கும், என் உயிரான ராஜாவிற்கும் நன்றி!
ReplyDeleteகூவின பூங்குயில் என்று ஆரம்பிக்கும் மெல்லப்பேசுங்கள் படப்பாடலைத்தான் நான் நீண்ட நாட்களாக என் செல்போனின் ரிங்டோனாக வைத்திருக்கிறேன்.ஒவ்வொருமுறை திருப்பள்ளியெழுச்சியை யார் போன் செய்தாலும் கேட்கும் போது உடம்பு புல்லரிக்கும் பாருங்கள்
ReplyDeleteஅது அற்புத உணர்வு
கூவின பூங்குயில் என்று ஆரம்பிக்கும் மெல்லப்பேசுங்கள் படப்பாடலைத்தான் நான் நீண்ட நாட்களாக என் செல்போனின் ரிங்டோனாக வைத்திருக்கிறேன்.ஒவ்வொருமுறை திருப்பள்ளியெழுச்சியை யார் போன் செய்தாலும் கேட்கும் போது உடம்பு புல்லரிக்கும் பாருங்கள்
ReplyDeleteஅது அற்புத உணர்வு