மனிதர்கள் சொந்த சுயநலத்திற்க்காகவும் பணம் சம்பாதிக்கவும் இயற்கை
வளங்களை அழிக்கின்றனர் மழைப்பொழிவை தடுக்கின்றனர் இதை மனதில்
கொண்டு பிரபல கதை வசனகர்த்தாவும் அன்னக்கிளி உள்ளிட்ட படங்களுக்கு
கதைவசனகர்த்தாவும் ஆன ஆர்.செல்வராஜ் தயாரிப்பில் இயக்கத்தில் வரும்
படம்தான் பச்சைகுடை இப்படத்திற்காக தலைவர் அவர்கள் சமூக அக்கறையை மனதில் கொண்டு
சம்பளமே வாங்காமல் இசையமைத்து கொடுத்து இருக்கிறார்.
இதோ அதன் விவரங்கள்..
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வாழ்ந்த இந்த தேசத்தில் மரங்களை வெட்டி, ஒரு நாட்டின் வறுமைக்கும், கொடுமைக்கும் காரணமாகும் அளவிற்கு மனித மனம் மரமாகிவிட்டது.
இந்த கவலை, கதாசிரியர் ஆர். செல்வராஜின் மனதை உலுக்கி எடுத்ததன் விளைவு, ‘பச்சை குடை’ என்ற பெயரில் படமாகியுள்ளது. ’அன்னக்கிளி’, ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஆரம்பித்து ‘ஈர நிலம்’ படம் வரை பாராதி ராஜா இயக்கிய பல படங்களுக்கு கதை எழுதியுள்ள ஆர்.செல்வராஜ், ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘அகல்விளக்கு’, ‘நீதானா அந்த குயில்’, ‘உப்பு’ உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
இளையராஜா, பாரதிராஜாவின் பால்ய கால சிநேகிதரான செல்வராஜ் இன்றும் ஒரு இளைஞனுக்குள்ள சுறுசுறுப்புடன் கலைப்பணி ஆற்றி வருகிறார். இரவு இரண்டரை மணிக்கெல்லாம் விழித்துவிடும் இவர் விடிகாலை வரை புத்தக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். அப்படி சில மாதங்களுக்கு முன் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சமஸ்கிருத புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்திருக்கிறது. புத்தகத்தின் தொடக்கத்திலேயே ஆயிரம் ஏரிகள் ஒரு மரத்திற்கு சமம் என்று எழுதப்பட்டிருந்த வரிகள், மனதை பாதிக்க, காடுகளை காப்பாற்றுவது பற்றி ஒரு கதை எழுதி, ‘பச்சை குடை’ என்ற பெயரில் படமாகவும் இயக்கி முடித்துள்ளார்.
இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய படத்தை ஏழே நாட்களில் இயக்கி முடித்ததாக ஆச்சர்யப்படுத்தும் செல்வராஜ், படத்தை இந்திய ஜனாதிபதிக்கு போட்டு காட்டும் முயற்சில் இருக்கிறார். தமிழ் தவிர உலக மொழி பலவற்றிலும் சப் டைட்டில் போட்டு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவுள்ளார். படப்பிடிப்பின் போது நடந்த சில அனுபவங்களை அவரிடம் கேட்டபோது…
”தலக்கோணம் வனத்தில்தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் நாயகியாக நடித்துள்ள நித்யா தாஸ், படத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகளில் நித்யா போல யாராலும் ஒத்துழைப்பு தரமுடியாது. ஒரு நாள், காட்டில் ஓடி வருவது போன்ற ஒரு காட்சி. நான் டேக் சொன்னதும் ஓடி வந்த நித்யா, திடீரென மயங்கி விழுந்தார். என்னாச்சுன்னு அருகே சென்று பார்த்தால் அவர் கால் பாதம் முழுவதும் நெருஞ்சி முட்கள். முள் குத்தியதில் கால் வீங்கி போனது. நான் ஷூட்டிங்கிற்கு பேக்கப் சொன்னேன். ஆனால் நித்யா, என்னால ஷூட்டிங் நிற்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டிற்கு ரெடியாகிவிட்டார். என் சர்வீசில் இப்படியொரு கதாநாயகியை நான் பார்த்த்தே இல்லை. ஒரு நாள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பாரதிராஜா, என்னை வாழ்த்திச்சென்றதை மறக்க முடியாது.
ஷூட்டிங்கெல்லாம் முடிச்சுட்டு இளையராஜாவுக்கு பச்சை குடை டி.வி டியை கொடுத்தேன். மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் அவனிடமிருந்து (அப்படித்தான் சொல்கிறார்) போன். நேரா பிரசாத் தியேட்டருக்கு வந்துடு என்றான். நான் போனதும் என்னை கட்டிப்பிடித்து கொண்டான். “உதிரி பூக்களுக்கு பிறகு ஒரு அருமையான படம்டா, நான் ப்ரீயாகவே மியூசிக் பண்ணி தாறேன்” என ரொம்ப உருகிட்டான். ராஜா இசையில் இன்னும் பிரமாதமாகிடுச்சு ‘பச்சை குடை” என ஆர். செல்வராஜ் சொல்ல சொல்ல, நமது எதிர்பார்ப்பை பல மடங்கு விரிக்கிறது பச்சைகுடை.
ஏற்கனவே நம் தலைவர் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் செடி கொடிகளின் பெருமையயை சொல்லும் முதியவர் கதாபாத்திரத்திற்க்கு அமைத்த பின்னணி இசையில் பின்னி இருப்பார்.
தலைவரே மிகுந்த ஈடுபாட்டுடன் இசை அமைக்கும் இது போன்ற படத்துக்கு
தலைவருக்கு சொல்லவா வேண்டும்..
இதிலும் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
A.ABIRAM
KIZHAKARAI
அருமையான பகிர்வு தல ;-)
ReplyDelete