02.06.1943
நட்சத்திரம் : கார்த்திகை
ராசி : ரிஷபம்
தசா இருப்பு : சூரியன் 0 வருடம் 6 மாதம் 23 நாள்
இவரது இளமைக்காலத்தில் வந்த சந்திர திசையில் ஓரளவு படித்துள்ளார். 1954லிருந்து 1961ஆம் வருடம் வரையில் மிகவும் சுமாரான வாழ்க்கை. செவ்வாய் பதினொன்றாம் இடத்தில் இருந்து அந்த இடத்திற்குரிய குரு உச்சம் அடைந்ததால் மூத்த சகோதரரால் லாபமும் நன்மையும், சங்கீதத்தில் பயிற்சியும் இவருக்கு ஏற்பட்டது. பிறகு வந்த ராகு தசையில் பல கஷ்ட நஷ்டங்களையும் அலைச்சல்களையும் ஏற்படுத்தியது. உச்சம் பெற்ற குருதிசையில்தான் இவருக்கு தொழில் வாய்ப்பும், புகழும் ஏற்பட்டது. சுக்ரனும் சந்திரனும் பரிவர்த்தனை அடைந்தது. சுபகிரகங்களாகிய மூன்று மற்றும் ஒன்றாம் வீட்டு அதிபதிகளின் பரிவர்த்தனையில் இசைத்துறையால் மாபெரும் புகழ் அடைந்தார். ஒன்பது வீட்டில் கேது இருந்து, அந்த வீட்டுக்குரிய சனி லக்னத்தில் இருந்ததாலும் ஆன்மீகத் தொடர்பு ஏற்பட்டதோடு, கேதுவை உச்சம் பெற்ற குரு பார்ப்பதாலும் இவருக்கு ‘ஞானி’ என்ற பட்டம் கிடைத்தது. 1995லிருந்து சனி திசை ஆரம்பம். சனி திசை சனி புத்தி சுமாராக இருந்தது. பிறகு ஏழரைச் சனி வேறு தொடங்கியது. 2003 வரையில் ஏழரைச் சனியினால் சில பாதிப்புகள், தடங்கல் ஏற்பட்டிருந்தது. 2013லிருந்து இவருக்கு புதன் தசை தொடங்குகிறது. அப்பொழுது மறுபடியும் பேரும் புகழும் அடைந்து இன்னும் அமோகமான நிலையை அடைவார்.
(அவசியம் வேண்டி copy செய்ய பட்டது...)
sir cinnakuil chithra patri ondrume illaya?
ReplyDelete