இங்கே இந்த பாடல் "பாலா" என்ற படத்தில் வருகிற பாடல் ..அருமையான காதல் ஜொடிகளுக்கு ,அடுத்து அடுத்து பாடி ரசிக்கிற மாதிரி மெட்டை தவழ விட்டிருப்பார் இசைஞானி இளைய இல்லை ..இலலை யுவன் ஷங்கர் ராஜா..
ராஜாவின் ராஜங்கத்தில் குட்டி ராஜாவுக்கு என்ன வேலை என்று தானே யொசிக்கிறீர்கள்.தொலைவில் இருந்து கொண்டே தலைவர்
அவர்கள் போட்ட பாடல்களை நாம் அனு அனுவாக ரசிக்கிறொமே...இசைகடவுளே அப்பாவாக ஆசிர்வதிக்கபட்ட இசைஞானமோடு பிறந்த அந்த குழந்தை தன் அப்பா போடும் பாடல்களை உருவாக்கும்போதே அருகில் இருந்து எப்படி ரசித்து அனுபவித்து இருக்கும்....அதன் தாக்கம் கொஞ்சம் கூட இருக்காதா என்ன...
அங்கே பாருங்க இந்த தாக்கத்தை..... இந்த மெட்டை தலைவர் 1987லேயே மகாதேவ் என்ற படத்துக்கு போட்டிருக்கிறார்.
24 வருஷங்கள் கழித்து கேட்டாலும் புதுசாக தெரிகிற அளவுக்கு இசை அமைத்த தலைவரின் இசை ஞானம் அற்புதங்களின் தலைமையிடம்.
இப்போ கேட்டாலும் என்னமோ பண்ணுகிற பாஷை புரியாத அந்த பாடலை கேளுங்களேன்
இப்போ படிங்க முதல் வரியை....
அடுத்து அடுத்து பாடி ரசிக்கிற மாதிரி மெட்டை தவழ விட்டிருப்பார் இசைஞானி இளைய........ராஜாவேதான்
இந்த தகவலை வழங்கியவர் நண்பர்
SRINIVASAN
COIMBATORE
No comments:
Post a Comment