அதிகாலை அழகை ரசிக்காத கவிஞர்களே இல்லை .கவிஞர்கள் இருக்கும்போது இசைக்கு மட்டும் பஞ்சமா என்ன?
கொள்ளை அழகு கோடி கோடியாய் கொட்டிகிடக்கும் அதிகாலையில் இரவும் பகலும் சங்கமிக்கிறதை போல இசையும் கவியும் இங்கே சங்கமிக்கின்றது.இசைஞானியில் ஆரம்பிக்கின்ற அந்த ஆலாபனை நீறுற்று போல உருவெடுத்து கவிஞர்களால் வலிமையும் பெற்று காட்சிகளையும் கைகோர்த்து இசை அருவியாய் நம்மை வந்து அடைகிறபொழுது புதிதாய் பிறந்த சந்தோஷத்தை தருகிறது.சென்ற நாளில் பட்ட கஷ்டங்கள் இந்த நாளில் தீரும் என்ற நம்பிக்கையுடனும் நம்மை உழைக்கசெய்கிறது.
பாடலால் பணம் சம்பாதிக்கும் கலைஞர்களையே சந்தோஷபடுத்துகிற இசைஞானியின் சங்கீதங்கள் சாமாணிய மனிதனுக்கு நல்ல மருந்தாகவும் செயல் படுகிறதுஎன்றால் அது மிகைஅல்ல. இசைஞானியின் இசை காலைப்பொழுதில் மனதை துய்மைபடுத்துகிறது.. அதே வேளையில் சோம்பலையும் துரத்தி அடிக்கிறது.
அப்படி தலைவர் அவர்கள் சர்வ சாதாரணமாய் இசை அமைத்து நமக்கெல்லாம் இன்று வானொலிகள் மூலம் நல்ல பொழுதுகளை தந்து கொண்டிருக்கும் இசைஞானியை இசை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல....
இதோ காலைக்காக பதிவாக்க பட்ட பாடல்கள்
புத்தம் புது காலை -அலைகள் ஓய்வதில்லை
இதோ காலைக்காக பதிவாக்க பட்ட பாடல்கள்
புத்தம் புது காலை -அலைகள் ஓய்வதில்லை
அதிகாலை சுபவேலை- நட்பு
அதிகாலை நிலவே-உறுதிமொழி
காலைதென்றல் பாடிவரும் -உயர்ந்த உள்ளம்
காலை பனியில் ஆடும் மலர்கள்-காயத்ரி
சோலைக்குயிலே காலைகதிரே-பொன்னு ஊருக்கு புதுசு
காலை நேர ராகமே-ராசாவே உன்னை நம்பி
அதிகாலை நேரம் கனவில் - நான் சொன்னதே சட்டம்
ஓ ஓ காலை குயில்களே-உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
அதிகாலை நேரமே -மீண்டும் ஒரு காதல் கதை
இனி வரும் இனியகாலை பொழுது இசைஞானியின் இசையுடன் இனிதாய் அமைந்திட
இனிய வாழ்த்துக்கள்
ராஜாரசிகனுக்காக
துபையிலிருந்து
சௌந்தர்
ரசிகன் தல நீங்க...கலக்குறிங்க...;-)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி !
அப்பாடா இப்பதான் எனக்கு உயிரே வந்தது....எங்க மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன் கோபிநாத்
ReplyDeleteகலக்குறிங்க!!!
ReplyDeleteநன்றி Kannan
ReplyDelete