Pages

. அன்புள்ள (இளைய)ராஜாரசிகர்களுக்கு வணக்கம் . இந்த வலைப்பதிவை காணவரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். இந்த வலைப்பதிவில் நீங்கள் எதிர்பார்தவை கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சுகமான சுமையை இன்னும் நெடுதூரம் எடுத்து செல்ல உங்களின் வாழ்த்துக்களும் கருத்துரைகளும் வழிதுணையாய் வரும் என எதிர்பார்க்கிறேன். நன்றி...

ராஜாரசிகர்கள்

SONG TODAY-VELAI ILLATHAVANTHAN-VELAIKKARAN

rajarasigan.blogspot.com - Velaiyillathava

Saturday, December 3, 2011

ISAIGNANI ILAYARAJA'S TV SHOWS


தலைவர் அவர்களின் மனைவி ஜீவா அவர்களின் மறைவுக்கு பிறகு வெற்றிடமாக இருந்தது அவரை பற்றிய
தகவல்கள்.
மௌனம் அமைதிக்காக மட்டுமல்ல ...புயலுக்காகவும் தான் என்பதை நிருபிக்கும்படியாக இருக்கிறது வரப்போகவுள்ள அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்....

பிரபலங்கள் இடம்பெற போக உள்ள இசைக்குராஜா என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் இன்று(சனிக்கிழமை) இரவு 9.30க்கு ஒளிபரப்பாக உள்ளது.
நிச்சயம் பல அரிய தகவல்களை இந்த நிகழ்ச்சி நமக்கு தரும் என எதிர்பார்க்கிறோம்......

சந்தர்ப்பம் கிடைத்தால் நிகழ்ச்சியை தவற விடாதீர்கள்






தலைவரே வருகிறார்


தலைவரை பற்றிய செய்திகளுக்கே காத்திருக்கும் நமக்கு தலைவரே ஜெயா டிவியில் நேரில் வருகிறார் ..என்றதும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது நமக்கு ... நல்ல வேளை என் இதயம் இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது.

காண ஆவலாய் இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நாமும் ஒருவன் என்று நினைக்கும் போதே கர்வமும்
கூடிக்கொள்கிறது.

 
 
”நீங்கள் எங்கே இருந்தாலும், எங்கே சென்றாலும், உங்களைத் தொடர்ந்து வருவது என் இசை மட்டுமே என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எந்த துக்கத்தில் இருந்தாலும், எந்தக் கஷ்டத்தில் இருந்தாலும் உங்களுக்கு ஆறுதலும் நிம்மதியும் அளிப்பது என் இசை மட்டுமே என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இடம், காலம், எல்லாம் கடந்த அந்த இசையை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள உங்களை சந்திக்க விரைவில் வருகிறேன்..! உங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவிடாத தொடர்பு இசை மட்டுமே..! அந்த இசை தொடரட்டும்..!”

- இசைஞானி ...




காண தவற மாட்டீர்கள்...  சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும்...



Tell a Friend





1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...